வியாழன், 3 அக்டோபர், 2013

விண்டோஸில் மறைந்திருக்கும் டூல்கள்....

தற்போது நாம் அதிகம் பயன்படுத்தும் ஓ.எஸ் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 தான் இதுதான் மக்களுக்கு மிகவும் யூஸர் பிரண்ட்லியாக இருக்கிறது.மேலும், நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள்.

சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.

இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.


விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை இயக்கினால், அது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனையிட்டு, அதில் பிழைகள் இருந்தால், எடுத்துக் காட்டும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள மெமரி குறித்துச் சோதனையிட, வேறு ஒரு புரோகிராம் தேவையில்லை. விண்டோஸ் தரும் இந்த டூலையே பயன்படுத்தலாம்.

ரிசோர்ஸ் மானிட்டர் (Resource Monitor): கம்ப்யூட்டரின் பல்வேறு பகுதிகளின் செயல் திறனை அறிந்து கொள்ள இந்த டூலைப் பயன்படுத்தலாம். சிபியு, டிஸ்க், நெட்வொர்க் மற்றும் மெமரி கிராபிக்ஸ் என அனைத்து பிரிவுகளின் திறனை அளக்கிறது.

ஒவ்வொரு திறனுக்குமான செயல்பாட்டு புள்ளி விபரங்களை எடுத்துத் தருகிறது. எனவே, இதன் மூலம், எந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை அல்லது நெட்வொர்க்கினை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகிறது என அறியலாம்.

எந்த செயல்பாடு, இன்டர்நெட் இணைப்புடன், அல்லது வேறு இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது என்பதனை அறியலாம். டாஸ்க் மானேஜர் புரோகிராம் தன் செயல்பாட்டில் அதிகமான தகவல்களைத் தருவதனைக் காட்டிலும், இந்த புரோகிராம் தருகிறது.

டாஸ்க் மானேஜர் புரோகிராமினை இயக்கி, அதில் உள்ள Performance டேப்பினை கிளிக் செய்து, பின்னர் இதில் கிடைக்கும் Resource Monitor ஐ இயக்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீனில், தேடல் கட்டத்தில் Resource Monitor என்று டைப் செய்தும் இதனைப் பெறலாம்.

பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): பெர்பார்மன்ஸ் மானிட்டர் டூல், பல்வேறு செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தேடித் தரும். குறிப்பிட்ட கால நேரத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாட்டினை இதன் மூலம் அறியலாம்.

மேலே சொல்லப்பட்ட பெர்பார்மன்ஸ் மானிட்டர் என்பது, மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல் டூல்ஸ் (Microsoft Management Console (MMC) என்ற தொகுப்பின் ஒரு பகுதி தான். பெரும்பாலான இது போன்ற டூல்ஸ்களை, Administrative Tools போல்டரில் பெறலாம் அல்லது, Computer Management என்ற அப்ளிகேஷனைத் திறந்தும் பெறலாம்.

காலத்தில் செய்யப்பட வேண்டியவை என்று அடையாளம் தரப்பட்ட பணிகளைக் காண்பதற்கும், அவற்றை செட் செய்வதற்கும் இந்த டூல் பயன்படுகிறது. நாம் வரையறை செய்திடும் பணிகளோடும், சிஸ்டம் செட் செய்து அமைத்திடும் பணிகளையும் காலத்தே செயல்படுத்தும்.

சிஸ்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காட்டும். சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும் நிகழ்வுகளிலிருந்து, அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிராஷ் ஆவதிலிருந்து, புளு ஸ்கிரீன் ஆப் டெத் நிகழ்வு வரை அனைத்தையும் பட்டியலிட்டு தரும்.

உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், பங்கிடப்பட்ட போல்டர்களைக் காட்டும் ஒரு இன்டர்பேஸ். எந்த எந்த போல்டர்கள், உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் பங்கிடப்படுகின்றன என்பதனைக் காட்டும் ஒரு டூல்.

உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை நாம் தெரிந்து கொள்ளப் பயன்படும் டூல். இதன் மூலம் அவற்றைச் செயலிழக்கவும் செய்திடலாம். புரோகிராம்களின் ட்ரைவர்களை செயல்படும்படி அமைக்கலாம்.

டிஸ்க்கினைப் பிரித்துக் கையாளும் பார்ட்டிஷன் மேனேஜர் டூல். டிஸ்க் இடத்தைப் பிரிக்க, வேறு ஒரு தர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை இல்லை. இதனையே பயன்படுத்தலாம்.

Services:

விண்டோஸ் இயக்கத்தில், பின்புலத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளைக் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நமக்கு உதவிடும் டூல். Administrative Tools போல்டரில், மற்ற பயன்பாட்டு புரோகிராம்களும் கிடைக்கின்றன. விண்டோஸ் பயர்வால் போன்ற பாதுகாப்பு தரும் புரோகிராம்கள் உட்பட பல புரோகிராம்கள் உள்ளன.

User Accounts: விண்டோஸ் சிஸ்டத்தில், வழக்கமான இன்டர்பேஸ் மூலம் கிடைக்காத, யூசர் அக்கவுண்ட்ஸ் குறித்த விபரங்களை, இந்த மறைத்து வைக்கப்பட்டுள்ள User Accounts டூல் தருகிறது. இதனைத் திறக்க, WinKey+R கீகளை அழுத்தி ரன் டயலாக் கட்டம் பெறவும். netplwiz அல்லது control user passwords2 என டைப் செய்து, என்டர் தட்டவும். இந்த டூல் கிடைக்கும் விண்டோவிலேயே, Local Users and Groups டூலை இயக்கத்திற்குக் கொண்டு வர ஷார்ட் கட் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்டோஸ் நிர்வகித்திட பல டூல்கள் கிடைக்கும்.

மற்ற டூல்களைப் போல, இது மறைத்து வைக்கப்பட்ட டூல் அல்ல. ஆனால், விண்டோஸ் பயன்படுத்துவோர் பலரும் இதனை அறிந்திருப்பது இல்லை. உங்கள் கம்ப்யூட்டரில் அழிக்கப்பட வேண்டிய பைல்களை இது கண்டறியும். தற்காலிக பைல்கள், பழைய சிஸ்டம் ரெஸ்டோர் நிலைகள், விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்கள் மேம்படுத்தப்படுகையில், விடப்பட்ட தேவையற்ற பைல்களை இது கண்டறிந்து காட்டும்.

PC Cleaning Utility புரோகிராம் செய்திடும் அனைத்து பணிகளையும் இது செய்திடும். இது இலவசமாக விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. டிஸ்க்கினை கிளீன் செய்யத் தொடங்கி, நம்மிடம் பணம் பறிக்கும் வேலையினை இது மேற்கொள்ளாது.

நம்மில் பலரும் சிகிளீனர் புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். அதே வேலையினை விண்டோஸ் சிஸ்டத்தில் இலவசமாக இணைந்தே வழங்கப் படும் டிஸ்க் கிளீன் அப் புரோகிராம் செய்கிறது. ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் Disk Cleanup என டைப் செய்து இதனைப் பெறலாம்.

ரிஜிஸ்ட்ரி எடிட்டர். நம்மில் பலரும் அறிந்த ஒரு டூல். மைக்ரோசாப்ட் இதனை மறைத்தே வைத்துள்ளது. regedit என டைப் செய்து இதனைப் பெறலாம். இதனைக் கையாள்வதில் கவனம் தேவை. எதற்கும், இதனைத் திறக்கும் முன், இதன் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

மிக அருமையான ஒரு புரோகிராம் டூல். விண்டோஸ் இயக்கத்தின் போது, என்ன என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்த எந்த புரோகிராம்களை இயக்க வேண்டும், இயங்கி வரும் எந்த புரோகிராம்களை நீக்க வேண்டும் என நாம் முடிவு செய்வதனை இதன் மூலம் நிறைவேற்றலாம். ஸ்டார்ட் மெனுவில் msconfig என டைப் செய்து இதனைப் பெறலாம்.

System Information: இதனை இயக்கும் கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். கம்ப்யூட்டர் மாடல் எண் என்ன என்பதிலிருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள டிவிடி ராம் சாதனம் எந்த மாடலைச் சேர்ந்தது என்பது வரை அறிந்து கொள்ளலாம். இப்படியே அனைத்து இயக்கங்கள் குறித்தும் தகவல்களை இதன் மூலம் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட பல பயன்பாட்டு டூல் சாதனங்கள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம், நாம் எப்போதாவது, நம் தேவைகளுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல