லண்டன்::இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு உதவியதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடஅயர்லாந்து காவல்துறை சேவையைச் சேர்ந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கு பிரித்தானியா இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.
இரும்புப் பெண் என அடையாளப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதமர் அமரர் மார்கிரட் தச்சர் காலம் முதலே பிரித்தானிய காவல்துறையினர் இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் இலங்கைப் படையினருக்கு பிரித்தனிய அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 2007ம் ஆண்டு முதல் சுமார் 3500 இலங்கை காவல்துறையினருக்கு பிரித்தானியா பயிற்சி வழங்கியுள்ளது. வடஅயர்லாந்து காவல்துறைச் சேவை உத்தியோகத்தர்களினால் வெளியிடப்பட்ட இரகசிய தகவல்களின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக குறித்த பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக