வியாழன், 24 அக்டோபர், 2013

பெண்களே! வேலைக்கு போறீங்களா? இதோ உங்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ்....

பெண்கள் வீடு மற்றும் சமையலறை என்று முடங்கி கிடந்த காலம் மலையேறிவிட்டது என்பது தெரிந்த விஷயம் தான். இப்போது பெண்கள் தங்கள் வேலை அல்லது சுயதொழில் போன்ற 'சுய அடையாளத்துடன்' வீட்டையையும் தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தங்களது ஒட்டு மொத்தமாக ஆரோக்கியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை இன்றைய பெண்கள் உணர்கின்றனர். இரட்டைப் பளுவை சுமக்கும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை வேலைக்கு போகும் பெண்களை அதிகம் பாதிக்கின்றன.

வீட்டையையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வரும் இயந்திர கதியான வாழ்க்கை முறை காரணமாக, பெண்களால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய முயற்சிகள் போன்றவற்றில் சரிவர ஈடுபட முடிவதில்லை. அதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், புலம்பிக் கொண்டே இருப்பதில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. இவர்கள் தங்கள் வேலை, வீட்டுப் பொறுப்பு போன்றவற்றோடு தங்களது சொந்த ஆரோக்கியத்திற்கும் சற்று கூடுதல் கவனம் மற்றும் அக்கறை எடுத்துக் கொண்டால் ஒழிய நிலைமை மாறப் போவதில்லை. கடைசியில் முதலுக்கே மோசம் என்று தான் முடியும்.

ஆகவே வேலைக்கு போகும் பெண்கள் பின்பற்ற வேண்டிய 20 முக்கியமான ஆரோக்கிய அம்சங்களை சுருக்கமாக இங்கு தருகிறோம்.


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்!

முடிந்தால் செல்போன் உரையாடல்களை நடந்தபடியே தொடருங்கள். 'ஹேன்ட்ஸ்ஃப்ரீ' வசதி இருப்பது இதற்குத்தான். மேலும், மீட்டிங்குகளில் நின்று கொண்டோ அல்லது டைப் பண்ண வேண்டிய தேவை இல்லாத போது நின்றபடி வேலையில் ஈடுபடவோ செய்யலாம். மேற்சொன்னவற்றின் சாராம்சம் இது தான். அது உடலை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்திராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


வீட்டிலும், கைப்பையிலும் ஆரோக்கிய தின்பண்டங்களை வைத்திருங்கள்!

சதா எப்போதும் தின்பண்டங்கள் கொறிப்பவராக இருந்தாலும் சரி, அந்த தின்பண்டங்கள் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யக்கூடிய பண்டங்களாக தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சிக்கான ஒரு நடைமுறை திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்

நேர வசதிக்கேற்ப, உங்களுக்கு பொருந்தக்கூடிய சில உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை 20 நிமிடங்களுக்கு தசை வலுவூட்டும் பயிற்சிகள் சிலவற்றை செய்வது நல்லது அல்லது இடைவேளைப் பயிற்சியாக நடைப்பயிற்சி அல்லது மெது ஓட்டம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை உடற்கட்டுக்கு ஒரு புதுப்பொலிவை அளிக்கும்.

காலை உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

வேலைக்கு போகும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலை உணவில் புதிதான பழ வகைகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. இதனால் பழங்களில் உள்ள குளுக்கோஸ் உடலின் இனிப்பு வேட்கையை பூர்த்தி செய்துவிடும்.

டிரெட்மில் எனும் அற்புத கருவியை பயன்படுத்துங்கள்!

3-5 பவுண்டு எடையுள்ள 'டம்பெல்'களை பிடித்தபடி 10 நிமிடங்களுக்கு டிரட்மில்லில் பயிற்சி செய்யுங்கள். மேலும் உடலுக்கேற்ப வேகத்தை செட் செய்து கொள்ளுங்கள்.

‘கிரஞ்ச்’ உடற்பயிற்சி முறைகள்

கிரஞ்ச் எனும் அடிவயிற்று உடற்பயிற்சியின் போது பெரும்பாலான பெண்கள் கழுத்து தசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர். இது மிகவும் தவறான, எந்த பலனையும் கொடுக்காத ஒரு முறையாகும். மாறாக அடிவயிற்று தசைகளில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கிரஞ்ச் உடற்பயிற்சியை துவங்கும் முன்னர், நாக்கால் வாயின் மேலண்ணத்தை நன்கு ஈரப்படுத்திக் கொள்வதும் அவசியம்.

நிறைய நீர் அருந்த வேண்டும்

உடல் ஆரோக்கியத்திற்கும், சீரான இயக்கத்திற்கும் நீர் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே அன்றாடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் நீர் அருந்தும் வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். இது உடலில் நீர்ச்சத்து குறைந்து போகாமல் தடுக்கும்.

ஃபிட்னஸ் டைரியை உருவாக்கிக் கொள்ளுங்கள்

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி செய்முறைகள் போன்றவற்றின் பட்டியலோடு, எந்த அளவுக்கு வெற்றிகரமாக அவற்றில் ஈடுபட்டீர்கள் என்பதை குறித்துக் கொள்ள ஒரு குறிப்பேட்டை பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் புதிதாக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், கால கட்டம், தேவைப்படும் எச்சரிக்கைகள் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளுங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவு வகைகளை தவிர்த்திடுங்கள்

மாவுப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட், இனிப்பு ரொட்டிகள் போன்றவற்றையும், தேன் மற்றும் சாக்லெட்டுகள் போன்றவற்றையும், அதிக அரிசி உணவையும் தவிர்த்திடுங்கள். இவை இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்பதோடு, இன்சுலின் சுரப்பை தூண்டிவிட்டு, உடலில் கொழுப்பையும் சேர்த்துவிடக்கூடும்.

அதீத ஆர்வத்தில் எதுவுமே அளவுக்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

பெண்களை பொறுத்தவரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும் சோர்வையும் ஏற்படுத்திவிடும்.

கம்ப்யூட்டர் வேலைகளிலிருந்து விரல்களுக்கு ஓய்வு கொடுங்கள்

ஒரு ரப்பர் பேண்டை எடுத்துக் கொள்ளுங்கள். சோர்வடைந்த கை விரல்களை குவித்துக் கொண்டு, அதில் இப்போது ரப்பர் பேண்டை போட்டு விரல்களை சமமாக விரித்து பயிற்சி செய்யுங்கள். இது இறுகிப்போன விரல்களுக்கு தளர்ச்சியையும், நெகிழ்வையும் கொடுக்கும். இந்த சிறு பயிற்சியை மெயில் வாசிக்கும் போதோ, காரிலோ அல்லது வீட்டில் டி.வி பார்க்கும் போதோ செய்யலாம். இது விரல்கள் மற்றும் கைகளுக்கான பயிற்சி மட்டுமல்லாமல், மனதை ஆசுவாசப்படுத்தும் ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கும்.

எப்போதுமே இறுக்கமின்றி இருங்கள்

எப்போதுமே ஒரு திட்டமிட்ட ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே காலை உடற்பயிற்சி நேரத்தில் ஏதேனும் திடீர் விஷயம் குறுக்கிட்டால், அதனை இயல்பாக சமாளித்துக் கொள்ளுங்கள். தவறவிட்ட உடற்பயிற்சியை அந்த நாளின் பிற்பகுதியில் முடிக்கலாம் என்று நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

உடற்பயிற்சியில் உங்களுடன் ஒரு துணையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

தனியாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது அலுப்பாக இருப்பின், குடும்ப உறுப்பினரையோ அல்லது தோழியையோ துணையாக சேர்த்துக் கொள்ளுங்கள். ஜிம்மிற்கு செல்லும் போது வளர்ப்பு நாய் போன்றவற்றை கூட்டிச் செல்வதும் பொழுதுபோக்காக இருக்கும் அல்லது உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை நன்றாக கவனித்து, உற்சாகமூட்டி ஆலோசனை அளிக்கக்கூடியவரை துணைக்கு வைத்துக் கொண்டால் இன்னும் நல்லது.

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு அவசியம்

என்ன தான் கார்போஹைட்ரேட்டுகள் விஷயத்தில் கவனம் தேவை என்றாலும், அவையே உடலுக்கான எரிபொருள் மற்றும் சக்தி என்பதை மறந்துவிடக் கூடாது. மேலும், அவற்றோடு நார்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் புரதச்சத்து மிக்க உணவுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கார்போஹைட்ரேட்டுகள் உடனே செரிமானமாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகள் மிக அவசியம்

எந்த ஒரு உடற்பயிற்சியையும் துவங்கு முன்னர், உடலின் இறுக்கத்தை தளர்த்தி, தசைகளை நெகிழ்வூட்டும் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்வது மிக அவசியம். இவை திசுக்களில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க உதவுகின்றன. பொதுவாக உடற்பயிற்சி செய்முறைகளை மிதமான வேகத்தில் துவங்கி, பின்னர் படிப்படியாக அதிகரித்துக் கொள்வது சிறந்தது.

எடையைக் குறைப்பது தான் நோக்கம் என்று நினைத்து செயல்படுவதை தவிர்க்கவும்

எடையைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால், அது எடையைக் கூட்டுவதில் தான் போய் முடியும். மாறாக, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுமுறை ஆகியவற்றின் மூலம் உடற்கட்டை ஒரே சீராக வைத்திருப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சிக்கு முன்னதாக ஏதேனும் உணவுகளை சாப்பிடுவது அவசியம்

எனர்ஜி பார் போன்ற நவீன சத்து தின்பண்டங்களை உடற்பயிற்சிக்கு முன்னதாக சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து மற்றும் உடலுக்கு தேவையான சர்க்கரை போன்றவை நிறைந்துள்ளன. மிகவும் பசியாக உணர்ந்தால் வாழைப்பழம் சாப்பிடலாம். இது உடனடியாக செரிமானமாகி சக்தியை தரக்கூடியது.

இதயத்துடிப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்

இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருந்தால், உடலுக்கு தேவையான அளவு உடற்பயிற்சி இல்லை என்று அர்த்தம். அதே சமயம் மிக அதிகமான அளவில் இருந்தால், அது உடற்பயிற்சி மிதமிஞ்சி இருப்பதை குறிப்பிடுகிறது. எனவே ஒரு இதயத்துடிப்பு கருவி மூலமோ அல்லது நாடி பார்த்தோ, இதயத்துடிப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

வேலை இடத்தில் நீங்கள் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்

கம்ப்யூட்டர் மானிட்டர் உங்கள் பார்வை மட்டத்திலிருந்து சற்றே மேல் நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. அதாவது தலையை குனிந்த படி மானிட்டரை பார்க்கும் படியாக இருந்தால், அது கழுத்துப் பகுதியில் அழுத்தத்தை உருவாக்கி உடலுக்கும் அயர்ச்சியைத் தரும்.

எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பது போல் உணருங்கள்

சிரிக்கும் போதோ, புன்னகைக்கும் போதோ, உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரந்து கார்டிசால் போன்ற கெட்ட ஹார்மோன்களை அழிக்கின்றன. எனவே சிரித்து மகிழ வைக்கும் பொழுதுபோக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வாய்விட்டு சிரிப்பது முகத் தசைகளுக்கும் நல்ல பயிற்சியை அளித்து முகத்தை அழகாக்குகிறது. வாய்விட்டு சிரித்த பின் கண்ணாடியை பார்த்தால், உங்களுக்கே உண்மை புரியும்.

ஒரே நாளில் எல்லா பலனும் கிட்டிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்

மேலே சொன்ன எல்லா குறிப்புகளையும் தவறாமல் பின்பற்றினாலும், அவற்றால் கிடைக்கும் பலன்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே மனம் தளராமல் ஒரே சீராக பொறுமையுடன் ஆரோக்கிய உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

தட்ஸ்தமிழ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல