புதன், 27 நவம்பர், 2013

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு .... 2004ல் நடந்த பயங்கரம்..... ஒரு பிளாஷ்பேக்!

சங்கரராமன் கொலை வழக்கு: காஞ்சி சங்கராச்சாரியார்கள் விடுதலை- கோர்ட் தீர்ப்பு!!

புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக புதுவை நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது.

தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ந் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவில் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவு!

சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்பட்டிருப்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திரர் தலைமையிலான நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அரசுக்கு தொடர்ந்து புகார் கடிதங்கள் மூலம் சங்கரராமன் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில்தான் 2004ஆம் ஆண்டு சங்கரராமன் வரதராஜ பெருமாள் கோயிலிலேயே வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த வழக்கில் தொடக்கத்தில் போலி குற்றவாளிகள் சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அவரது தம்பி ரகு உள்ளிட்ட சங்கரமட தலைமை நிர்வாகிகள் அனைவருக்குமே தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து யாருமே எதிர்பாராத வகையில் காஞ்சி சங்கராச்சாரியார்களை 2004ஆம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளியன்று தமிழக போலீசார் கைது செய்தனர்.

அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஹிந்து மத நம்பிக்கைகளை தீவிரமாக நேசிக்கும் அரசியல் தலைவர்கள் சங்கராச்சாரியார்களை மதிப்பவர்கள். ஆனால் அப்படிப்பட்ட சங்கராச்சாரியாரையே ஜெயலலிதா கைது செய்தது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கில் சங்கராச்சாரியார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 9 ஆண்டு காலமாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக புதுவை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. சங்கராச்சாரியார்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெரும் பின்னடைவாக கூறப்படுகிறது.

தற்போது சங்கராச்சாரியார்கள் விடுதலையாகி இருப்பதன் மூலம் பொய் வழக்கை போட்டார் முதல்வர் ஜெயலலிதா என்ற குற்றச்சாட்டுக்கு அவர் ஆளாகி இருக்கிறார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


ஜெயேந்திரர் விடுதலை- ''ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர'': எஸ்.வீ. சேகர்

சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் தர்மம் வென்றது என்று பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகருமான எஸ்.வீ. சேகர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எஸ்.வீ. சேகர் பதிவு செய்துள்ளதாவது:

தர்மம் வென்றது.

சட்டம் கடமையை செய்தது.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்று எஸ்.வீ. சேகர் பதிவு செய்திருக்கிறார்.

2004ல் நடந்த பயங்கரம்... சங்கரராமன் கொலை.. ஒரு பிளாஷ்பேக்!

சங்கரராமன் படுகொலை.. தமிழகத்தை உலுக்கிய மிகப் பெரிய பரபரப்பான சம்பவங்களில் ஒன்று. யாருமே அறிந்திராத ஒரு நபர்தான் இந்த சங்கரராமன். ஆனால் அவரது கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தமிழகத்தை மட்டுமல்லாமல், இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய கொலையாக மாறிப் போனது. காரணம், இந்தக் கொலையைச் செய்ய கூலிப்படையை ஏவி விட்டவர் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரியார் என்று அரசு அவரை அதிரடியாக கைது செய்ததால்.

அதுவரை ஜெயேந்திரருக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஜெயேந்திரரைக் கைது செய்தபோது அத்தனை பேரும் அதிர்ந்து போகத்தான் செய்தார்கள்.

இப்போது முதல்வராக இருப்பதும் ஜெயலலிதா தான். ஆனால், இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், சங்கரராமன் கொலை குறித்த ஒரு பிளாஷ்பேக்.

வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர்


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவரைப் பற்றி பல சர்ச்சைகள் உள்ளன. பட்டுப் பட்டென்று பேசக் கூடியவர், போட்டுக் கொடுப்பவர் என்று நிறைய உள்ளன. 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவிலில் உள்ள அலுவலகத்தில் இவர் பிணமாகக் கிடந்தார். கூலிப்படையினர் கோவிலுக்குள் புகுந்து அலுவலகத்திலேயே வைத்து இவரை வெட்டிச் சாய்த்து விட்டுப் போய் விட்டனர்.

ஜெயேந்திரர் அதிரடி கைது


சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் பெயர் அடிபடத் தொடங்கியதால் தமிழகமே பரபரப்பானது. நாடும் உன்னிப்படைந்தது. 2004 நவம்பர் 11ம் தேதி ஆந்திர மாநிலம் மெஹபூப் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரர். அது தீபாவளி நாள்.

2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஜயேந்திரரும் கைதானார்.

கொலை நடந்த நாள் முதல் 2005 ஜனவரி 10ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 24 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் சங்கர மட நிர்வாகிகள், ஒருவர் விஜயேந்திரரனின் தம்பி ரகு.

இந்த நிலையில் ஜெயேந்திரர் போலீஸ் பிடியில் இருந்தபோது பேசிய வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் பேரால் மதிப்புடன் பார்க்கப்பட்ட ஜெயேந்திரர் படு பரிதாபமாக அந்த வீடியோவில் காட்சி தந்தது பலரையும் அதிர வைத்தது.

2005ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி ஜெயேந்திரருக்கு ஜாமீன் கிடைத்தது.அடுத்து பிப்ரவரி மாதம் விஜயேந்திரர் ஜாமீனில் வெளி வந்தார்.

இந்த பரபரப்பான வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் விசாரணையில் இருந்தது. ஆனால் இதை அங்கிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற ஜெயேந்திரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 2005ம் ஆண்டு அகடோபர் 26ம் தேதி புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

2005ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது.

வழக்கு விசாரணை புதுவையில் தொடங்கி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி கோர்ட்டில் விசாரணை பல காலத்திற்கு இழுத்தடிக்கக் காரணமே அடுத்தடுத்து ஜெயேந்திரர் தரப்பு வாய்தா கேட்டதும், விசாரணைக்கு வராமல் இருந்ததுமே. பலமுறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

மேலும் விசாரணைக்கு அடுத்தடுத்து இடைக்காலத் தடையையும் வாங்கி வந்தது ஜெயேந்திரர் தரப்பு.

இந்த நிலையில் ஒரு வழியாக விசாரணை சூடுபிடித்தது. மொத்தம் 187 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

ஆனால் 82 சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாட்சிகளை மிரட்டி விலைக்கு வாங்கி விட்டதாக சங்கரராமன் குடும்பத்தினர் குமுறினர்.

இந்த வழக்கில் ரவிசுப்ரமணியம் மட்டுமே அப்ரூவராக மாறினார். சாட்சிகள் பலவும் பிறழ் சாட்சிகளாக மாறியதால் வழக்கின் நிலை பெரும் கேள்விக்குறியானது.

புதுச்சேரி நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்த பின்னர் இதுவரை நான்கு நீதிபதிகள் இதை விசாரித்து விட்டனர். முதலில் சின்னப்பாண்டி விசாரித்தார். பின்னர் கிருஷ்ணராஜா, அடுத்து ராமசாமி, கடைசியாக சி.எஸ்.முருகன் இதை விசாரித்தனர்.

இந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமசாமி, ஜெயேந்திரர் தரப்பிடம் பேரம் பேசியது தொடர்பான ஆடியோ வெளியானதே இதற்குக் காரணம்.

இதையடுத்து நீதிபதி ராமசாமி மாற்றப்பட்டார். நீதிபதியாக சி.எஸ். முருகன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரும், கூலிப்படையைச் சேர்ந்தவருமான கதிரவன், சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே ஒரு கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந் நிலையில் இந்த வழக்கில் மிச்சமுள்ள 23 பேரும் இன்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.


Thatstamil
Share

   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல