பிரித்தானிய ஹேர்ட்போர்ட்ஷியரில் ஹெம்ஸ்ரெட் எனும் இடத்தைச் சேர்ந்த பெண் 28 ஆவது வயதில் பூட்டியாகியுள்ளார்.
கெல்லி பாக்கர் (28 வயது) என்ற மேற்படி பெண் 3 பிள்ளைகளின் தந்தையான 68 வயதான பொப்பை 2010 ஆண்டு திருமணம் செய்தார்.
பொப்பின் வயது கெல்லியின் பெற்றோர்களது வயதை விட 10 வயதுக்கும் அதிகமாகும். பொப்பின் மூத்த பேரப்பிள்ளை கெல்லியை விட 3 வயது மட்டுமே இளையவராவார். ஆனால் கெல்லி, பொப்பின் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை தனது சொந்தப் பிள்ளைகளாகவும் பேரப்பிள்ளைகளாகவும் கருதி அன்பு காட்டி வருகிறார்.
இந்நிலையில் பொப்பின் மூத்த பேரப்பிள்ளை, பெண் குழந்தையொன்றை பிரசவித்ததையடுத்து கெல்லி பூட்டி அந்தஸ்தைப் பெற்றுள்ளார். பிறந்த குழந்தைக்கு லேலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கெல்லியும், பொப்பும் 4 வருட காலமாக காதலித்து பெரும் எதிர்ப்பின் மத்தியில் திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக