கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், பெரும்பாலானவர்கள், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து, தங்கள் நண்பர்களுடன் உறவாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் தங்கள் புகைப்படம் அல்லது நம் சார்பாக ஏதேனும் ஒரு படத்தினை அமைத்துக் கொள்கின்றனர். தற்போது 120 கோடிக்கும் மேலானவர்கள் இதில் அக்கவுண்ட் அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். பலர் இந்த தளம் செல்லும் பழக்கத்திற்கு அடிமையாகி, ஒரு வித சமூகத் தொடர்பு போதைக்கு ஆளாகியுள்ளதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
சரி, இந்த முகங்களை எல்லாம் ஒரு சேரப் பார்க்க இயலுமா? எப்படி முடியும், 120 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் உள்ள முகங்களை எப்படி இணைத்து வடிவமைப்பது?
இந்த கேள்விக்கான பதிலை The Faces of Facebook என்ற இணைய தளம் தருகிறது.
ஒவ்வொரு பதியப்பட்ட முகத்தினையும் இது காட்டுகிறது. உங்கள் முகத்திற்கு பேஸ்புக் சமூக தளம் தந்துள்ள எண் என்ன என்பதனையும் காட்டுகிறது.
http://app.thefacesoffacebook.com/ என்ற முகவரியில் இந்த தளம் இயங்குகிறது. இந்த தளம் சென்றவுடன், பேஸ்புக் தளத்தில் உள்ள முகங்களின் எண்ணிக்கை எண் ஓடிக் கொண்டே உள்ளது. ஆம், ஒவ்வொரு விநாடியிலும், உலகின் ஏதோ ஒரு மூலையில், ஒருவர் தன் பேஸ்புக் அக்கவுண்ட்டினைத் தொடங்கி, தனக்கான படத்தைப் பதிந்து கொண்டிருக்கிறார் என்பதனையே, தொடர்ந்து அதிகரிக்கும் எண்ணிக்கை காட்டுகிறது.
இந்த தளத்தைச் சற்று உற்றுப் பார்த்தால், மிகச் சிறிய புள்ளிகளால் ஆன அமைப்பு தெரியும். இந்த புள்ளிகளில் தான், அனைவரின் முகங்களும் உள்ளன. இதில் கிளிக் செய்தால், பதிவு செய்தவர்களுக்கான படங்கள் வரிசையாகக் காட்டப்படுவதனைக் காணலாம். இத்தனை கோடி பேர்களில், உங்கள் முகத்தை அல்லது படத்தினை எப்படித் தேடிப் பார்ப்பது? இந்த இணைய தளத்தின், வலது மேல் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், பேஸ்புக் தளத்திற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் செல்லும் வழி கிடைக்கும்.
நான் இந்த தளத்தில் பல வாரங்களுக்கு முன் லாக் இன் செய்த போது, 1278842363 முகங்கள் இருப்பதாக எண் ஓடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து இது அதிகரித்துக் கொண்டே இருந்தது. அடுத்து, என் முகத்திற்கான எண் என்ன என்று காட்டியது. என் எண் 213360498 என்று காட்டியது. அடுத்து, இதோ உங்கள் முகம் என்று, என் போட்டோவினைச் சுற்றி வட்டமிட்டு காட்டியது. என் புகைப்படம் அருகே, வேறு நாட்டின் உறுப்பினர்களின் படம் இருந்தது. பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த தளத்தை உருவாக்கைய நடாலியா ரோஜாஸ் (Natalia Rojas), படங்கள் தவிர, உறுப்பினர்களின் வேறு எந்த தகவலும் இதில் சேவ் செய்து வைக்கப்படவில்லை என்று உறுதி அளித்துள்ளார்.
சரி, முதல் போட்டோ யாருடையதாக உள்ளது என்று அறிய ஆவலாக உள்ளதா? யாருடையதாக இருக்கும்? வேறு யார்? இந்த சமூக தளத்தை வடிவமைத்து, உருவாக்கிய மார்க் ஸுக்கர்பர்க் படம் தான், முதல் படமாக உள்ளது.
நீங்களும் உங்களுக்கு பேஸ்புக் அக்கவுண்ட் இருந்தால், நீங்கள் பதிவு செய்த படத்தினை, மற்ற உறுப்பினர்களோடு கண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக