செவ்வாய், 12 நவம்பர், 2013

’என்னை கல்யாணம் பண்ணிக்குவியா...?’

நேரங்கெட்ட நேரத்தில் நாங்கள் இந்த ஆஃபர் தர்றோம், அந்த ஆஃபர் தர்றோம் என கடுப்பேத்தும் கம்பெனிக் கால்களால் வெறுத்துப் போன இளைஞர் ஒருவர் கஸ்டமர் கேருக்கு போன் செய்து கலாய்க்கிறார் இப்படி....

பெண் : வணக்கம். ----- பேசுகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் கூறுங்கள்?

இளைஞர் : என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறியா...?

பெண் : ( அதிர்ச்சியுடன்...) சார், நீங்கள் தவறான எண்ணுக்கு அழைத்து விட்டீர்கள் என எண்ணுகிறேன். நம்பரை மறுமுறை சரி பார்த்து அழைக்கவும். நன்றி...

இளைஞர் : இல்லை, நான் சரியாகத் தான் அழைத்திருக்கிறேன். சொல், என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா..?

பெண் : மன்னித்துக் கொள்ளுக்கள் சார், எனக்கு உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை...( வாடிக்கையாளரின் அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்படும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையுடன் பேசுகிறார்)

இளைஞர் : நல்லா யோசிச்சுச் சொல்லுங்க மேடம், காதல் திருமணம் செஞ்சுக்கிட்டீங்கனா சுவிட்சர்லாந்துக்கு ஹனிமூன் போகலாம், அரேஞ்ச் மேரேஜ்னா பாரீஸ் போகலாம்...

பெண் : எனக்குத் தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவே விருப்பம் இல்லைனு சொல்லிட்டேனே அப்புறமும் ஏன் இதெல்லாம் சொல்றீங்க...

இளைஞர் : சிம்பிளா வேணும்னா ரூ 20 ஆயிரம் செலவு பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம், கிராண்ட்டா வேணும்னா ரூ2 லட்சம் செலவாகும். பரவாயில்லையா....?

பெண் : எனக்கு விருப்பம் இல்லைனு எத்தனைத் தடவைச் சொல்றது சார்...( சற்று கடுப்புடன் பேசுகிறார் அப்பெண்...)

இளைஞர் : இப்போ புரியுதா... தேவையிலாம, தேவையில்லாதத பேசுனா எவ்ளோ கோபம் வரும்னு....கண்ட நேரத்துல கால் பண்ணி ‘அந்த ஆஃபர், இந்த ஆஃபர்'னு இனிமே யாராவது எனக்கு கால் பண்ணினா, உனக்குத் தான் நான் கால் பண்ணுவேன் புரியுதா...?

பெண் : நல்லா புரிஞ்சது சார். உங்க நம்பர 'டூ நாட் டிஸ்டர்ப்' லிஸ்ட்ல போட்டுடறேன்....

பெண் : ஆனா, எனக்கு ஒரு டவுட்டு.... எனக்குப் பதிலா இந்தக் காலை ஒரு ஆண் ஆபிசர் அட்டெண்ட் பண்ணிருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க...?

இளைஞர் : ஹா...ஹா...ஹா...அப்பவும் ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா'னு தான் கேட்டுருப்பேன்...எப்பூடி

பெண் : ....!!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல