அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் சுகாதார கவனிப்பு தொடர்பில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, தனக்கு பின்னால் நின்ற மயங்கி விழவிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவரை சட்டென பற்றி அவர் கீழே விழாமல் தடுத்துள்ளார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கட்டாய மருத்துவ கவனிப்பு தேவையை எதிர்கொண்டிருந்த கர்மெல் அல்லிஸன் என்ற மேற்படி கர்ப்பிணிப் பெண்ணுக்கு பராக் ஒபாமாவின் சுகாதார கவனிப்பு திட்டம் தொடர்பான உரையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பராக் ஒபாமாவுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கர்மெல், ஒபாமாவின் 25 நிமிட உரையின் போது மயக்க நிலைக்குள்ளாகி தடுமாறியுள்ளார்.
இதன்போது எதேச்சையாக திரும்பிய பராக் ஒபாமா, கர்மெலின் நிலையை அவதானித்து துரிதமாக செயற்பட்டு அவர் மயங்கிக் கீழே விழாமல் அவரது கரத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் கர்மெலை தாங்கிப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பராக் ஒபாமாவின் நீண்ட உரையின் போது மலசலகூடம் செல்வதை தவிர்ப்பதற்காக கர்மெல் பானம் எதனையும் நீண்ட நேரமாக அருந்தாது இருந்ததால் களைப்படைந்து மயக்க நிலைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
கர்மெல் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதும் பராக் ஒபாமா உரையாற்றுகையில், தான் நீண்ட நேரம் உரையாற்றியதால் நடந்த விபரீதம் என வேடிக்கையாக குறிப்பிட்டார்.
மயங்கி விழ இருந்த தன்னை தக்க தருணத்தில் பிடித்து கீழே விழுந்து விடாது தடுத்த பராக் ஒபாமாவுக்கு கர்மெல் நன்றி தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கட்டாய மருத்துவ கவனிப்பு தேவையை எதிர்கொண்டிருந்த கர்மெல் அல்லிஸன் என்ற மேற்படி கர்ப்பிணிப் பெண்ணுக்கு பராக் ஒபாமாவின் சுகாதார கவனிப்பு திட்டம் தொடர்பான உரையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பராக் ஒபாமாவுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கர்மெல், ஒபாமாவின் 25 நிமிட உரையின் போது மயக்க நிலைக்குள்ளாகி தடுமாறியுள்ளார்.
இதன்போது எதேச்சையாக திரும்பிய பராக் ஒபாமா, கர்மெலின் நிலையை அவதானித்து துரிதமாக செயற்பட்டு அவர் மயங்கிக் கீழே விழாமல் அவரது கரத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் கர்மெலை தாங்கிப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

கர்மெல் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதும் பராக் ஒபாமா உரையாற்றுகையில், தான் நீண்ட நேரம் உரையாற்றியதால் நடந்த விபரீதம் என வேடிக்கையாக குறிப்பிட்டார்.
மயங்கி விழ இருந்த தன்னை தக்க தருணத்தில் பிடித்து கீழே விழுந்து விடாது தடுத்த பராக் ஒபாமாவுக்கு கர்மெல் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக