திங்கள், 25 நவம்பர், 2013

பிறர் அறியாத கம்ப்யூட்டர் பயன்பாடு!

அமெரிக்கா, இந்தியா எனப் பல நாடுகள், நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினைக் கண்காணிக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்த பின்னர், ஒவ்வொருவரும், தாங்கள் கம்ப்யூட்டரில் இடும் தகவல்களை, அரசு எடுத்துக் கொள்கிறதோ எனக் கவலை அடைந்துள்ளனர். ஒரு சிலர் இதிலிருந்து தப்பும் வழிகள் குறித்து எண்ணத் தொடங்குகின்றனர். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு சூழ்நிலையில், எந்த வழிகளைக் கையாண்டால், ஓரளவிற்கு நம்மை வேவு பார்க்கும் கண்களில் இருந்து தப்பலாம் என்று பார்க்கலாம்.

1. பாஸ்வேர்ட்: நாம் தரும் தகவல்கள் திருடப்படுவதற்கு, நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் எளிமையான வழியைத் தருகின்றன. ஹேக்கர்கள் இதற்கு, மிகப் பெரிய அளவிலான புரோகிராம்களை இயக்குவதில்லை. சமுதாய பழக்கங்கள் என்னும் வழிமுறையையே பயன்படுத்துகின்றனர். உங்களைப் பற்றிய தகவல்களை, பிறந்த நாள், பெயர், செல்லப் பெயர், ஊர், மனைவி, மகள் பெயர் என்பன போன்ற தகவல்களைத் திரட்டுகின்றனர். பின்னர் உங்கள் பாஸ்வேர்டின் ஒரு முனை கிடைத்த பின்னர், மீதம் உள்ளவற்றை, உங்கள் தகவல்களைக் கொண்டு, இரண்டும் இரண்டும் நான்கு என்ற ரீதியில் கண்டறிகின்றனர். அல்லது கீ போர்ட், மவுஸ் ஆகியவற்றில் நீங்கள் எழுதியுள்ளீர்களா என்று பார்த்து, பாஸ்வேர்டை அறிபவர்களும் உள்ளனர். அப்படியானால் என்ன செய்யலாம்?

உங்கள் பாஸ்வேர்டை மிக எளிமையான ஒன்றாக அமைத்திடுங்கள். நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் இருக்கட்டும். தேவைப்படும்போது, நினைவிற்குக் கொண்டு வர இயலாத பாஸ்வேர்ட்கள் வேண்டாம். ஏதேனும் உங்களுக்குப் பிடித்த பாடல் வரிகளில் சில சொற்கள், உண்ணப் பிடிக்கும் தின்பண்டங்களின் பெயர்களில் ஒரு பகுதி எனத் தேர்ந்தெடுத்து, அதனைச் சற்று மாற்றி, இடை இடையே ஓரெழுத்துவிட்டு, அல்லது பின்புறமாக அதனை அமைத்துப் பயன்படுத்தலாம். இவ்வாறு அமைத்த சொல்லுடன், நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் சில எண்களையும் சேர்க்கலாம். அல்லது குறிபிட்ட ஆண்டின் எண்களை இணைத்துப் பயன்படுத்தலாம்.
பாஸ்வேர்ட் நிர்வகிக்க என சில சிஸ்டங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்கவும். ஏனென்றால், பாஸ்வேர்ட் என்பது உங்களுடைய தனித் தகவல். இதனை ஒரு சிஸ்டத்திடம் தருவது நல்லதல்ல.

ஒரே பாஸ்வேர்டினை அனைத்து இணைய தளங்களிலும், வங்கிக் கணக்குகளிலும் பயன்படுத்துவது நல்லதல்ல. ஒன்றை ஒருவர் அறிந்துவிட்டால், அனைத்தும் திருடப்படும் சூழ்நிலை உருவாகும். ஒரு சிலர் பாஸ்வேர்ட் சொல்லில், முதல் எழுத்து, அல்லது ஒரு எழுத்து விட்டு அடுத்த எழுத்து என பெரிய எழுத்துக்களில் அமைப்பார்கள். எதாகினும், நினைவிற்கு வரும் வகையில் ஒரே மாதிரியாக அமைக்கவும். எடுத்துக் காட்டாக, அனைத்து பாஸ்வேர்ட்களிலும், முதல் எழுத்தினையும், இறுதி எழுத்தினையும் பெரிய எழுத்துக்களில் அமைக்கலாம். அல்லது முதல் இரு எழுத்துக்களை அமைக்கலாம்.

2. தேடலில் பாதுகாப்பு: துரதிருஷ்டவசமாக, நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடல் சாதனங்களான, கூகுள், யாஹூ மற்றும் பிங் தளங்கள், நம் தேடல் தகவல்களை, நாம் என்ன தேடுகிறோம் என்பன போன்றவற்றை, மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளன. இருப்பினும் வேறு வழியின்றி நாம் இந்த தளங்களைப் பயன்படுத்துகிறோம். உங்களுக்குத் தெரியுமா? இன்னும் பல தளங்கள், சிறந்த தேடல் தளங்களாக இயங்கி வருகின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். அவை நம் தகவல்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதில்லை. இதோ அவை:

DuckDuckGo.com, StartPage.com, Wolframalpha.com, Blekko.com. ixquick.com, izik.com, Yippy.com, Mazoom.mobi

இருப்பினும் நான் கூகுள் தான் பயன்படுத்துவேன் என நீங்கள் முடிவு செய்தால்,உங்கள் தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ள, கீழ்க்காணும் நடைமுறையைப் பின்பற்றவும்.
உங்கள் ஐ.பி. முகவரியை மறைக்கவும். இதற்கு EasyHideIp மற்றும் Quick Hide ஐக போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் ஐ.பி. முகவரி மறைக்கப்பட்டால், உங்களைப் பற்றிய தகவல்களில் பெரும் பாலானவை மறைக்கப்படும்.

கூகுள் குரோம் அல்லது மற்ற பிரவுசரில் செயல்படுகையில், “incognito mode” என்ற உங்கள் செயல்பாட்டினைப் பதிவு செய்யாத நிலையில் இயங்கவும்.
encrypted.google.com என்ற தளம் வழியாகவும் உங்கள் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். உங்களுடைய இணைய சேவை வழங்கும் நிறுவனம் கூட, உங்களுடைய தேடல் குறித்த தகவல்களைப் பெற இயலாது.

3. மின் அஞ்சல் பாதுகாப்பு: மின் அஞ்சல்களில் உள்ளவை பொதுவான தகவல்களே என ஒன்றுக்கு இரண்டாக நீதி மன்றங்கள் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளன. இது ஓர் அதிர்ச்சி தரும் சூழ்நிலையாகும். ஆனால், இதுவே இன்றைய எதார்த்தநிலை. யார் வேண்டுமானாலும், பாதகமான வழிகளில், உங்களைக் குறித்த தகவல்களைத் திருடிக் கொண்டு, பின்னர், அவை எல்லாம் பொதுவானவை தானே; எடுப்பதில் என்ன தப்பு என வாதிடலாம். இந்நிலையில், நாம் நம் மின் அஞ்சல் தகவல்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

நீங்கள் யாருக்கு அஞ்சல் அனுப்புகிறீர்களோ, அவர் மட்டுமே அந்த அஞ்சலைப் படிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அடுத்து குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தலாம் hushmail.com, sendinc.com, lockbin.com, மற்றும் mailvelope.com.

4. மாறும் இட பாதுகாப்பு: நாம் யாரும் ஒரே இடத்தில் அமர்ந்து நம் டிஜிட்டல் வேலைகளை மேற்கொள்வதில்லை. எப்போதும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து சென்று, நம் பணிகளை மேற்கொள்கிறோம். ஏனென்றால், இன்றைய கால கட்டத்தில், பணிகளை உடனுடக்குடன் முடித்தாக வேண்டிய கால கட்டத்தில் வாழ்கிறோம். அதனால் தான், திறன் செறிந்த ஸ்மார்ட் போன்களை அதிகம் நாடுகிறோம். தகவல் தொடர்புகளை அதன் வழியாகவே மேற்கொள்கிறோம். இந்தச் சூழ்நிலையில் எத்தகைய பாதுகாப்பு வளையத்தை மேற்கொள்ள வேண்டும்? ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் ஸ்மார்ட் போன்களை நீங்கள் பயன்படுத்தினால், அந்த சிஸ்டம் தரும் கீழ்க்காணும் வசதிகளைப் பயன்படுத்துங்கள்.

Privacy manager
Hide Pictures - Hide It Pro
Hide SMS - private text vault
Malwarebytes AntiMalware
Norton Security antivirus
McAfee Antivirus & Security
Mobile AntiVirus Security PRO

ஆப்பிள் மொபைல் போன் அல்லது பிற ஆப்பிள் சாதனங்கள் எனில், கீழ்க்காணும் வசதிகளைக் கையாளவும்.
Wickr - SelfDestructing, Secure, Private, Anonymous
Messages & Media
Private Life Texting - Send secret SMS messages
Picture Safe - Secure Photo Vault and Private Safe for your
Privacy
NQ Vault
Private Files and Photos - Hide Contacts, Bookmarks, Photos, Videos and More

5.கம்ப்யூட்டர் பாதுகாப்பு: நீங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் என எது பயன்படுத்தினாலும், உங்களுடைய சிஸ்டம் பாதுகாப்பானதாகவும், மற்றவர்களின் தாக்குதலை முறியடிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டரை யார் வேண்டுமானாலும் இயக்கிக் காணலாம். மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, கம்ப்யூட்டரை இயக்கும் எவரும் திறந்து பைல்களைப் பார்க்கலாம். அப்படியானால், அவற்றை எப்படி பிறர் அறியா வண்ணம் பாதுகாப்பது? இதுவரை இந்த எண்ணம் வரவில்லையே? என்று நினைக்கிறீர்களா? இதோ பதில். கீழ்க்காணும் வசதிகளைப் பெற்று பயன்படுத்தவும்.

McAfee® All Access && One stop shop for all your devices secured in one software.

GoTrusted Secure Tunnel & OkayFreedom VPN && Browse the internet securely using VPN technology.

SuperAntiSpyware Free Edition && Stops spyware ads in their tracks.

USB Disk Security && Protects data stored on USB drives.

DoNotTrackMe for Chrome

மேலே தரப்பட்டுள்ள பெயர்கள் தெரிவிப்பது போல, வேறு யாரும் உங்களைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் தகவல்களைப் பெற முடியாது.

6. வை-பி பாதுகாப்பு: பெரும்பாலானவர்கள், பாதுகாப்பு குறித்து எண்ணுகையில், வை-பி தொலை தொடர்பு குறித்து கவலைப்படுவதே இல்லை. ஒரு வை-பி நெட்வொர்க்கில் இணைகையில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை, எவரும் நுழைந்து பார்க்கும் வகை யில் விட்டுவிடுகிறீர்கள் என்பதே உண்மை. குறிப்பாக, விமான நிலையம், நூல்நிலையங்கள், விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றில், வை-பி இணைப்பினைப் பயன்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்கள், அதில் இணைந்துள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாறுகின்றன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்த வகையில் தொடர்பு பெறுகையில், பாதுகாப்பாக இருக்க, கீழ்க்காணும் பாதுகாப்பு தரும் டூல்ஸ்களைப் பயன்படுத்தவும்.

McAfee WiFiScan: நீங்கள் இணைந்துள்ள வை-பி நெட்வொர்க்கினை இது ஸ்கேன் செய்து, எப்படி பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைகளை வழங்குகிறது.

Norton Hotspot Privacy: Apple version: ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு இந்த டூல் மிகவும் பயனுள்ளது.

PrivateWiFi.com WPA2: இதுவும் வை-பி நெட்வொர்க் பாதுகாப்பிற்கு தனி வழியில் தீர்வுகளைத் தருகிறது.

உங்களிடம் உள்ள ரௌட்டர் மிகப் பழையதாக இருந்தால், அதன் இடத்தில் WPA2 பாதுகாப்பு உள்ள ரௌட்டர் பயன்படுத்தவும். இந்த புதிய பதிப்பு, ஹேக்கர்களுக்கு வளைந்து கொடுக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல