ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போர்: போரில் கொலை செய்வது எப்போது மற்றும் அதில் எவ்வளவுக்கு நியாயம் உள்ளது.

1945ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு மாலை நேரத்தில் அது சாம்பல் மேடாக மாறுவதற்கு முன்னால் வரலாற்றுப் புகழ்மிக்க ஜேர்மன் நகரமாகிய டிரஸ்டென், எல்ப் நதியோர மலர் என அழைக்கப்பட்டது. அந்த நாட்களில் ஐக்கிய இராச்சியமும் மற்றும் அமெரிக்காவும் இட்ட கட்டளையின் பெயரில் குண்டு போடும் விமானங்கள் சுமார் 3,900 தொன் எடையுள்ள பீரங்கி குண்டுகளை அந்த நகரத்தின்மேல் போட்டு அதை ஒரு நரகமாக ஆக்கியதில் 25,000 உயிர்கள் வரை பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த படுகொலைகளுக்கான இராணுவ பயன்பாடு இன்னமும் வரலாற்று ஆசிரியர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆதரவாளர்கள், அது முக்கிய நாசி தொடர்பாடல் மையங்களை அழித்ததோடு, எதிர்த்து போராடும் ஜேர்மனியர்களின் நம்பிக்கையையும் உடைத்ததாக கோருகிறார்கள், எதிர்ப்பாளர்கள் அது சாதரணமாக பழிவாங்கும் ஒரு எளிய செயல் எனக் கூறுகிறார்கள். டிரஸ்டென்னின் அழிவை ஒரு கைதிகள் முகாமில் இருந்து நேரடியாகப் பார்த்த கேட் வொணேகட் தனது ‘ஸ்லொட்டர்ஹவுஸ் பைவ்’ எனும் நாவலில் ‘’ ஒரு படுகொலையைப் பற்றி சொல்வதற்கு அறிவு எதுவும் தேலையில்லை’’ என்று எழுதியுள்ளார்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என்கிற சர்ச்சைக்குரிய தீர்மானத்தை எடுத்ததை, ஒருவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சரி என்று ஏற்றுக் கொள்ளலாம் ஒன்றில் அவர் அல்லது இந்திய அரசாங்கத்தில் உள்ள வேறு யாராவது அதை விளக்க முயற்சிக்கலாம். அந்த தெரிவுக்கு சார்பானவர்கள் அது உயர்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இயக்கப்பட்டது என்றும் அதற்கு எதிரானவர்கள் நடைமுறை வெளிநாட்டு கொள்கையின் வெற்றியை பாதிக்கும் தரம் தாழ்ந்த அரசியல் என்றும் கூறுவதற்கு அது இடமளித்துள்ளது.

இந்த விடயம்பற்றி புதுதில்லி ஏதாவது புத்திசாலித்தனமாகச் சொல்வதற்கான நேரம் இது, ஏனெனில் அது ஸ்ரீலங்காவின்மீது இந்தியாவுக்கு இருக்கும் நலன்களைவிட அதிகம் ஆழமாகச் செல்கிறது. மாறாக அந்த விடயம் இந்தியா தான் ஒரு தேசமாக உயிர்பிழைப்பதற்கு அவசியம் என்று நம்பிய போர்களை நடத்தியதையும் - மற்றும் அது தற்போது நடத்தும் போர்களையும் இனி வர இருக்கும் போர்களையும் எப்படி நடத்தப்போகிறது என்பதிலும்; பின்னிப் பிணைந்துள்ளது.

ஸ்ரீலங்காவில் நடந்த ஈழப்போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற விரிவான கொலைகளைப் பற்றி உணரச் செய்வது அத்தனை எளிதான காரியம் இல்லை. உண்மையில் எத்தனை உயிர்கள் கொல்லப்பட்டன அல்லது கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது என்று எங்களுக்கு தெரியாது, உண்மையில் அங்கு ஒரு இனப்படுகொலைதான் இடம்பெற்றதா என்பதும் எங்களுக்குத் தெரியாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு வழங்கியுள்ள பொதுமக்கள் மரணத்தின் மதிப்பீடு அனைத்து வழிகளிலும் 20,000 முதல் 1,47,000 வரையான வீச்சில் உள்ளது. பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டனரா என்பதற்கான நிபுணர்களின் ஒருமித்த கருத்து இதில் இல்லை, மற்றும் அப்படி இருந்தாலும் அது எப்போது. அங்கு உண்மையில் நீதிக்கு புறம்பான பல கொலைகள் நடத்தப்பட்டன என்பதற்கு நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பல வழக்குகள் உள்ளன, ஆனால் இவை இனப்படுகொலைக்கு சமமானவைகள் அல்ல.

எண்ணிக்கைகள்

இதில் முக்கியமாக விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் ஏன் இத்தனை வித்தியாசமான எண்ணிக்கைகள் காணப்படுகின்றன. அவற்றின் கருத்து என்ன அவை எதை தெளிவு படுத்துகின்றன என்பவைகளை?

இந்த புள்ளி விபரங்களுக்கு பின்னணியில் உள்ள செயல் நுட்பம் முதலில் யாழ்ப்பாணத்தை அடித்தளமாக கொண்ட ஒரு மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால்(யு,ரி.எச்.ஆர்) முன்மொழியப்பட்டது. அதன் சாரம்சம், யுத்தத்தின்போது தாக்குதலற்ற வலயம் என்ற பகுதியில் வாழ்ந்ததாக அறியப்படும் மக்கள் அரசாங்க அகதி முகாம்களுக்கு வந்ததும், எத்தனை பேர் வந்தார்கள் என்பதை மொத்த தொகையில் இருந்து கழிக்கவேண்டும் என்று யு,ரி.எச்.ஆர் முன்மொழிந்தது. இது கொல்லப்பட்டதாக கருதப்படும் பொதுமக்களின் எண்ணிக்கையை தந்தது.

எனினும் இதை ஆரம்பிப்பதற்கு உண்மையில் தாக்குதலற்ற வலயம் என்displacement-mறழைக்கப்படும் இடத்தில் எத்தனை மக்கள் வாழ்ந்தார்கள் என்று யாருக்குமே சரியாகத் தெரியாது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கே.பார்த்திபன், பெப்ரவரி 2009ல் அங்கிருந்த மக்களின் தொகை கிட்டத்தட்ட 330,000என மதிப்பிட்டிருந்தார். இருந்தாலும் தாக்குதலற்ற வலயத்தில் ஒரு முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த திரு.பார்த்திபனுக்கு ஒரு வழியும் இருக்கவில்லை. பதிலாக உள்ளுர் கிராம அதிகாரிகளின் அறிக்கையிலேயே அவர் தங்கியிருந்தார். எல்.ரீ.ரீ.ஈயினரின் கட்டாய இராணுவ சேர்க்கைக்கு உட்படுத்தப் பட்டவர்கள், மற்றும் வேறுபட்டவர்கள் என்பவர்களில் இருந்து பொதுமக்களை மட்டும் தனியாகப் பிரித்தறிவதற்கான உபகரணங்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. ஸ்ரீலங்காப் படைகளால் மூடப்பட்ட பகுதிக்கு பாதுகாப்புக்காக தாக்குதலற்ற வலயத்தில் இருந்து தப்பியோடியவர்களைக் கணக்கிடவும் அவரிடம் வழி எதுவும் இருக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, செய்மதி படங்களுடன் நடத்திய ஆராய்ச்சியின் பெறுபேறுகளுடன் திரு.பார்த்திபனின் எண்ணிக்கை ஒத்துப்போகவில்லை, அது அங்கிருந்தவர்களின் சனத்தொகை 2,67,618 என ஆலோசனை வெளியிட்டிருந்தது. ஐ.நா நிபுணர்கள் ஒரு தோராயமான நடைமுறை அணுகுமுறையைப் பயன்படுத்தி கணக்கீட்டை மேற்கொண்டார்கள், அதாவது ஒவ்வொரு காயம் பட்டவர்களின் எண்ணிக்கை;கு 1:2 அல்லது 1:3 என்கிற விகிதத்தில் பொதுமக்கள் இறந்திருக்கலாம் என்கிற விதியின்படி கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது, அதன்படி பொதுமக்கள் மரணங்கள் 15000 இலிருந்து 22,500 க்குள் இருக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இப்போது பொதுவாகத் தெரிவிக்கப் பட்டடிருக்கும் எண்ணிக்கையிலும் மிகவும் குறைவான எண்ணிக்கை. இறுதியாக நிபுணர் குழு, திரு. பார்த்திபனின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு உத்தேச மதிப்பீடாக இறந்தது 40,000 பேர்கள் என மதிப்பிட்டிருந்தது. நிபுணர் குழாமும் பொதுமக்களையும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினரையும் வேறுபடுத்தி இனங்காணவில்லை - இந்த உண்மை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் டிசம்பர் 2009ல் அமெரிக்க காங்கிரசுக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் ஒழுங்கான படையின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 ஆக இருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டிருந்தார்கள், இவர்களுக்கு பின்துணையாக ஒழுங்கற்ற படையினர், மக்கள் படை, அதேபோல கட்டாயமாக படையில் இணைக்கப் பட்டவர்கள் ஆகியோர் இருந்தார்கள்.

வேண்டுமென்றே கொலை செய்யப்பட்டார்களா?

இந்தப் படைகளை அழிக்க ஒன்றில் பொருந்தாத விகிதாசாரத்தில் உள்ள படைகளா அல்லது இரக்கமே இல்லாத படைகளா பயன்படுத்தப்பட்டன என்பதில் தெளிவு இல்லை. செய்மதிப் படங்கள், மே 17 ந்திகதி வரை ஸ்ரீலங்கா இராணுவம், எல்.ரீ.ரீ.ஈ யின் 130 மி.மீ, 140மி.மீ,மற்றும் 152 மி.மீ அட்டிலரி கiணைகளின் சூட்டுக்கு முகம் கொடுத்தார்கள் என்பதை காண்பிக்கின்றன. போரின் இறுதிக் கட்டத்தில் தினசரி 40 வீரர்களை தாங்கள் இழந்து வந்ததாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவிக்கிறது. ஸ்ரீலங்காவுக்கான முன்னாள் தூதுவர் றெபேட் பிளேக், ஜனவரி 26, 2009ல் வா~pங்டனுக்கு அனுப்பிய ஒரு இரகசிய செய்தியில் ‘’ஸ்ரீலங்கா இராணுவம் பொதுவாக தனது முன்னேற்றத்தின்போது பொதுமக்கள் இழப்பை குறைக்கும் முயற்சியில் கவனம் எடுப்பது நல்ல பெயரை தந்துள்ளது’’ எனக் கூறியிருந்தார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் செயற்பாட்டுக் குழு தலைவர் ஜாக்ஸ் டி மய்யோ இதை ஒப்புக் கொண்டுள்ளார், 2009 ஜூலை 9ல் அவர் அமெரிக்க தூதரிடம் ஸ்ரீலங்கா ‘’உண்மையில் இந்த இராணுவப் போராட்டத்தை அதிகளவு பொதுமக்கள் இழப்புடன் விரைவாக வென்றிருக்க முடியும், இருந்தும் ஒரு மெதுவான அணுகுமுறையை கையாண்டதால் பெரிய அளவு எண்ணிக்கையில் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களின் மரணங்களைச் சம்பாதித்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அதற்கான மதிப்பு எதுவுமில்லை. இன்னமும் எல்.ரீ.ரீ.ஈ தனது பொதுமக்களில் சிலரை தீங்கான வழியில் நடத்தியுள்ளது என்பதை ஐ.நா நிபுணர் குழுவும் ஒப்புக்கொண்டுள்ளது. பொதுமக்களின் இடங்களுக்கு வெகு அருகாமையில் எல்.ரீ.ரீ.ஈ வேண்டுமென்றே மோட்டார்கள் அல்லது ஏனைய இலகுரக பீரங்கிகள், இராணுவ வாகனங்கள், மோட்டார் குழிகள் மற்றும் அகழிகளை நிறுவியது அல்லது பயன்படுத்தியது, அதன் நடத்தைகளின் சில முறைகளாக இருந்ததையும் அவர்களது அறிக்கை கண்டுபிடித்திருந்தmullivaikal warது.

கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 55ம் பிரிவு மற்றும் 59ம் பிரிவினரின் எதிர்ப்புகளை தோற்கடிக்க, பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈ எவ்வாறு கட்டாயப்படுத்தியது என்பதை டி.பி.எஸ்.ஜெயராஜ் வரைபடத்துடன் விளக்கியிருந்தார். ரைம்ஸ் ஒப் லண்டன் பத்திரிகைக்காக மே 24, 2009ல் ஒரு புகைப்படக்காரர் எடுத்திருந்த புகைப்படங்களில் உதாரணமாக மோட்டார்களை இருத்துவதற்காக வெட்டப்பட்ட குழிகள், ஒரு ஆயுத இழுவைக் கலம், மற்றும் ஒரு பதுங்கு குழி என்பன தாக்குதலற்ற வலயத்தில் பொதுமக்களின் இருப்பிடத்தின் மத்தியில் இருப்பதை காண்பிக்கிறது.

நிச்சயமாக இவை எதுவும் ஒரு வழியிலோ அல்லது மற்ற வழியிலோ விடயங்களை சரி செய்யவில்லை – அதுதான் விடயமும்கூட. ஸ்ரீலங்கா இராணுவத்தினர் குற்றங்கள் செய்தார்களா என்பதற்கு மிகச் சிறிய சந்தேகமே உள்ளது. தங்களுக்கு தீங்கிழைத்த புலிகளைப் பழி வாங்க தருணம் பார்த்திருந்த கொடிய ஒட்டுப்படைகளுடன் இணைந்தே அவர்கள் பணியாற்றினார்கள். எனவே எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான இனப்படுகொலை என்கிற ஸ்ரீலங்காவின் பிரச்சாரம் இந்த விடயத்தில் தொடர்பற்று காணப்படுகிறது. மற்றும் இது எங்கள் முன் ஒரு பெரிய கேள்வியையும் கொண்டுவருகிறது.

போர் மொழி

உண்மையான கேள்வி மிகவும் இலகுவானது. ஒரு போரில் கொலை செய்வது எப்போது மற்றும் எவ்வளவு அது யுத்த தர்மமா என்பதுதான்? நவீன போராட்ட வரலாற்றில். 2009ல் ஸ்ரீலங்கா எதிர்நோக்கிய அதே தடுமாற்றத்தைத்தான் ஏனைய தளபதிகளும் எதிர் கொண்டார்கள் அல்லது 1945ல் வின்சன்ட் சர்ச்சில் எதிர்கொண்டார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த எமி ஹாகோபியன். மற்றும் 11 எழுத்தாளர்களும் சேர்ந்து ஈராக்கில் அமெரிக்க படையெடுப்பு காரணமாக 461,000 உயிர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இழக்கப் பட்டன என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

2004 ஏப்ரலில் ஈராக்கிய நகரமான பலூஜாவிலிருந்து கிளர்ச்சியாளர்களை வெளியேற்றும் முயற்சியில் 800 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது - இது அதிகமான விலையாதலால், சங்கடத்துக்கு ஆளாகிய தளபதிகள் பிரச்சாரத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். வழக்கத்திற்கு மாறானவகையில் உயர் விகிதத்தில் பிறப்பு குறைபாடுகள் ஈராக்கில் நிலவி வருகிறது, பயன்படுத்தப்பட்ட ஆயதங்களில் இருந்து அழிந்துபோன யுரேனியம்தான் இதற்கு காரணம் என சில ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

1999 – 2000 ல் நடந்த இரண்டாவது குரொஸ்னிய போரில். ரஷ்ய துருப்புகள் கவசம் மற்றும் காற்று சக்தி என்பனவற்றின் பின்துணையுடன் செச்சினிய கிளர்ச்சியாளர்களுடன் போரிட்டதனால் அந்த நகரமே அழிந்தது பின்னாளில் அந்த அழிவை ஐ.நா ‘’பூமியில் மிக அதிகம் அழிவுற்ற நகரம்’’ எனக் குறிப்பிட்டது.

பல தசாப்தங்களாக இந்தியா அதனது எதிர் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளை தினசரி குற்றவியல் சட்ட அமைப்புக்குள்ளேயே நடத்தி வருவதாக கற்பனை மிக்க ஒரு சௌகரியமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. தலைவர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள், ஒரே சமயத்தில் சட்டத்துக்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள், மற்றும் பொதுமக்களுக்கு எதிரான கூட்டு பழிவாங்கல் என்பனவற்றுக்கு இசைவு தெரிவித்தும் வருகிறார்கள். இந்த பாசாங்குத்தனம் ஆயுதப்படைகள் மற்றும் இந்திய ஆட்சி என்பனவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பொய்வேடமுள்ள முகத்தோற்றம் காட்டுவதற்கு இது காரணமல்ல. நாங்கள் அறிந்துள்ள யுத்த விதிகள் 1945ல் ஒரு குறிப்பிட்ட போரினால் ஏற்பட்ட வரலாற்று அனுபவங்களை கொண்டு எழுதப்பட்டவையாகும். அவை பிரதானமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. அந்த தேசங்களில் பல தலைமுறைகளாக பயங்கரமான விளைவுகளில் வாழ்ந்த அனுபவம் மற்றும் அச்சுறுத்தும் கிளர்ச்சிகள் என்பன கிடையாது.

எனினும் இந்தியா, ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சட்டம் மற்றும் நெறிமுறைகள் என்பனவற்றுக்கான முதல் கொள்கைகளை அடுத்ததாக விவாதிப்பதில்லை. அதனால் போரைப்பற்றி நேர்மையாகப் பேசுவதற்கும் மற்றும் அதன் இன்றியாமைகள் பற்றிச் சொல்வதற்குமான திறனை நாங்கள் இழந்து விட்டோம் - மற்றும் அதைச் செய்யக்கூடாது.

‘’போரின் பாஷை கொலை’’ 9-11 குண்டுதாரி காலிட் ஷேக் முகமது, ஒருவேளை தற்செயலாக சிறந்த போர்த்திற வல்லுனரான கார்ல் வொண் கிளவுஸ்விற்சிடம் இருந்து இந்த வார்த்தைகளை கடன்வாங்கியோ என்னவோ, தன்னை விசாரணை செய்தவரிடம் மேற்கண்டவாறு சொன்னார். அவர் சொன்னது சரி. எப்படி பேசுவது என்பதைப் பற்றி சிலவேளைகளில் நாம் நேர்மையாக விவாதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இவைகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற ஒரு நல்ல இடம் ஸ்ரீலங்கா ஆகும்.


- பிரவீண் சுவாமி

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல