டேபிளுக்கு ஆட்டோ பிட்: நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள AutoFit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் கட்டத்திலும் சிறிய அளவில் டேட்டா வைத்திருந்தால், இந்த வசதி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனைப் பயன்படுத்தக் கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
நீங்கள் வேர்ட் 2000, 2003 பயன்படுத்துபவர்களாக இருந்தால், கீழே தரப்பட்டுள்ளபடி செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. சம்பந்தப்பட்ட டேபிள் முழுவதையும் தேர்ந்தெடுக்கவும்.
2. டேபிள் மெனுவில் உள்ள AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது ஒரு துணை மெனுவினைக் காட்டும்.
3. இந்த துணை மெனுவில் AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் பயன்படுத்துவது வேர்ட் 2007 அல்லது வேர்ட் 2010 ஆக இருந்தால்,

2. இனி, Layout என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து, Cell Size என்ற குரூப்பில், AutoFit என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஒரு கீழ்விரி மெனுவினைத் தரும்.இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.
4. இவற்றிலிருந்து AutoFit to Contents என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதனால் டேபிளில் ஏற்படும் மாற்றம், நீங்கள் அதன் கட்டங்களில் நிரப்பியிருக்கும் தகவல்களைப் பொறுத்தது. டேபிள் முழுக்க காலியாக இருந்தால், அனைத்து கட்டங்களும் ஒரே மாதிரியான அளவில் மாற்றி அமைக்கப்படும். அல்லது ஏதேனும் சில கட்டங்களில் மட்டும் தகவல்கள் இருப்பின், அவற்றிற்கேற்ப அனைத்து கட்டங்களும் மாற்றி அமைக்கப்படும்.
பல வகையான தகவல்களை செல்களில் அமைத்திருந்தால், மவுஸ் உதவியுடன் மேலே குறிப்பிட்ட வசதியைப் பயன்படுத்தலாம். டேபிளின் இடது எல்லைக் கோட்டில் டபுள் கிளிக் செய்திடவும். நெட்டு வரிசை செல்களின் எல்லைக் கோடு தானாக அட்ஜஸ்ட் செய்யப்படும். மேலே தரப்பட்ட வழிகளின் மூலம் செட்டிங்ஸ் ஏற்படுத்திச் செய்திடும் மாற்றங்கள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற: வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம்.
வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம்.
1. அரபிக் எண்கள் - 1,2,3 ..
2. அரபிக் எண்கள் சிறிய டேஷ் அடையாளத்துடன் -1, -2,-3 ..
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III...
4. லோயர் கேஸ் ரோமன் i, ii, iii ...
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C, ...
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c, ...
இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில்
3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
4. பின் ஓகே கிளிக் செய்திடவும்.
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக