ஹெடர் மற்றும் புட்டர் இணைக்க: டாகுமெண்ட் பக்கங்களில், மேலாகவும், கீழாகவும் சில டெக்ஸ்ட், படங்கள் தொடர்ந்து வரவேண்டும் என விரும்புவோம். இவற்றை அமைக்கும் இடங்களே ஹெடர் மற்றும் புட்டர் என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக நூல்கள் தயாரிக்கும்போதும், பெரிய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் அமைக்கும் போதும், அத்தியாய தலைப்புகள், பக்க எண்கள் ஒவ்வொரு பக்கத்திலும், குறிப்பிட்ட இடத்தில் அமைப்பது வழக்கமான முறை. இவற்றை எப்படி அமைக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்.
வேர்ட் 2003ல், View என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Header and Footer என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பக்கத்தின் மேலாகவும் கீழாகவும் புள்ளிகளில் உருவான பாக்ஸ் ஒன்று காட்டப்படும். Header and Footer டூல்பார் ஒன்றும் கிடைக்கும். இந்த டூல்பாரில் Insert Auto Text என்ற இடத்தில் கிளிக் செய்திடவும்.
இதில் பல பிரிவுகள் கிடைக்கும். இதில் சில தானாகவே சில விஷயங்களை அமைத்துத் தரும். எடுத்துக்காட்டாக, டாகுமெண்ட்டை அமைப்பவர் மற்றும் நாள் ஆகியவற்றை அமைக்க விரும்பினால், Author, Page # and date என்பதில் கிளிக் செய்திடவும். இவை தானாக அமைக்கப்படும். தானாக, பக்கங்களின் எண்கள் மட்டும் அமைக்கப்பட வேண்டும் எனத் திட்டமிட்டால், Auto Text என்ற பட்டன் அருகே உள்ள ஐகானை அழுத்தவும். பலவகைகளில் பக்க எண்களை அமைப்பதற்கான பார்மட்கள் காட்டப்படும்.
இதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பின்னர், இதில் உள்ள Close பட்டனை அழுத்தி டாகுமெண்ட்டுக்குத் திரும்பலாம்.
வேர்ட் 2007/2010ல், Insert மற்றும் Header (or Footer) அழுத்தி, பின்னர் ஏதேனும் ஒரு style தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போது Design tab தானாகத் திறக்கப்படும். அடுத்து 'Type text' என்ற பகுதியில் கிளிக் செய்திட வேண்டும்.
இப்போது நாம் அமைக்க விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்கலாம். அடுத்து Page Numbers அல்லது Date and Time தேர்ந்தெடுத்தால், இதில் நாம் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
மீண்டும் டாகுமெண்ட் திரும்ப Close Header and Footer என்பதில் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் ஹெடர் அல்லது புட்டரில் உள்ளதைத் திருத்த வேண்டும் எனில், ஹெடர் அல்லது புட்டரில், டபுள் கிளிக் செய்தால் போதும்.
டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் இயக்க: மிகப் பெரிய டாகுமெண்ட்களில் இயங்குகையில், இரு வேறு பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்வது சற்று சிரமமாயிருக்கும். ஒவ்வொரு முறையும், பக்கங்களை ஸ்குரோல் செய்து செல்வது வேலைப் பளுவினைத் தருவதுடன், பல நேரங்களில், செல்ல வேண்டிய பிரிவு சீக்கிரம் கிடைக்காது.
இதற்கு வேர்ட் எளிய வழி ஒன்றைத் தருகிறது. ஒரே நேரத்தில், டாகுமெண்ட் ஒன்றின், இரண்டு பிரிவுகளைத் திறந்து வைத்து, இயங்குவதற்கான வழியைத் தருகிறது. இதனால், திரையில், ஒரே நேரத்தில், டாகுமெண்ட்டின் இரண்டு பிரிவுகளைப் பார்க்கும் வசதியும், அவற்றில் பணியாற்றும் வசதியும் கிடைக்கிறது. இந்த வசதியைக் கீழ்க்கண்டவாறு பெறலாம்.
வேர்ட் 2003ல், Window என்பதில் கிளிக் செய்து, Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல், View என்பதில் கிளிக் செய்து, Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மவுஸ் கர்சரை, எந்த இடத்தில் டாகுமெண்ட்டில் பிரிக்க வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று, லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது டாகுமெண்ட் இரண்டு பிரிவுகளில் காட்டப்படும். இந்த இரண்டு பிரிவுகளையும் தனித்தனியே உருட்டி, மேல் கீழாகச் செல்லலாம். திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஸூம் செய்தும் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக