இன்டர்நெட் இணைப்பில் கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படத் தொடங்குகிறது. டாஸ்க் மேனேஜர் மூலம் செக் செய்தால், அது செயல்பாட்டினை 100% எனக் காட்டுகிறது. இதற்குக் காரணம் என்ன?
இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களுக்கு எதிரான புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு, அவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதனை உறுதி செய்திடுங்கள்.
மைக்ரோசாப்ட் நிறுவனமும், மலிசியஸ் சாப்ட்வேர் ரிமூவர் ஒன்றினை ஒவ்வொரு மாதமும் உங்கள் கம்ப்யூட்டருக்கு விண்டோஸ் அப்டேட் மூலமாக அனுப்புகிறது. இதுவும் பதியப்பட்டுள்ளதா என்று பார்க்கவும். இவை எல்லாம் ஒழுங்காக இருந்தால், இவற்றை இயக்கி, முழுமையாக உங்கள் கம்ப்யூட்டரைச் சோதனை செய்திடவும்.
இவை வைரஸ் மற்றும் கெடுதல் விளைவிக்கும் மற்ற புரோகிராம்களை நீக்கிவிடும்.
அடுத்து விண்டோஸ் ஹெல்ப் சிஸ்டத்தில் helpsvc.exe என்ற பைல் ஒன்று உள்ளது. இந்த உதவிடும் பைல் சில வேளைகளில் உபத்திரவம் கொடுக்கும் பைலாக மாறும். இதுதான் பிரச்னையைத் தருகிறதா என்று அறிய, டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் கிளிக் செய்து, Task Manager த் தேர்ந்தெடுக்கவும்.
கிடைக்கும் விண்டோவில் Processes என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து அங்குள்ள தலைப்புகளில் ‘CPU’ என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அப்போது இயங்கும் புரோகிராம்கள், எடுத்துக் கொள்ளும் ப்ராசசர் நேரம் காட்டப்படும்.
நேரத்தின் அடிப்படையில் இது பட்டியலிடப்படும். இந்த பட்டியலில் முதலாவதாக helpsvc.exe இருந்தால், உங்களுக்குப் பிரச்னைக்குக் காரணம் இதுதான் என அறியலாம்.
இதன் இயக்கத்தினை நிறுத்த, இதனைத் தேர்ந்தெடுத்து, அதன் மீது லெப்ட் கிளிக் செய்து மூடிவிடவும். இனி பிரச்னை வராது.
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய http://support.microsoft.c om/kb/839017/enus என்ற முகவரியில் உள்ள இணையதளத்தை அணுகவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக