விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், லைப்ரரீஸ் என்ற பைல் தொகுப்பு அட்டவணை தரப்பட்டது. பைல்களைக் கையாள்வதில் மிகவும் உதவி செய்திடும் டூல் ஆக இது இருந்தது. ஆனால், இது விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் காட்டப்படவில்லை.
இருப்பினும், நீங்கள் விரும்பினால், இதனை விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலும் கொண்டு வரலாம்.
உங்கள் டெஸ்க்டாப்பிலிருந்து பைல் எக்ஸ்புளோரர் தொகுப்பினை இயக்கவும்.
அடுத்து view டேப்பில் கிளிக் செய்திடவும்.
இந்த ரிப்பனில் இறுதியில், options என்று ஒரு பட்டன் இருப்பதனைக் காணலாம்.
இதனைக் கிளிக் செய்தால், 'folder options' என்று ஒரு விண்டோ காட்டப்படும். 'navigation pane' என்னும் தலைப்பின் கீழாக, செக் பாக்ஸ்கள் காட்டப்படும்.
இதில் நான்காவது செக் பாக்ஸ் லைப்ரரீஸ் பிரிவிற்கானது. இதில் show libraries என்று இருக்கும்.
இதனைத் தேர்ந்தெடுத்து பின் apply பட்டனில் கிளிக் செய்தால், மீண்டும் லைப்ரரீஸ் உங்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக