குழந்தைகளுக்கு ஏற்படும் அறிவுத்திறன் குறைபாட்டை, மருத்துவத்துறை 'செரிபரல் பால்ஸி' என்று குறிப்பிடுகிறது. இதில் 'செரிபரல்' என்ற ஆங்கில வார்த்தை மூளைப்பகுதியின் தொடர்பைக் குறிக்கிறது. மூளையில் பாதிப்பு ஏற்படுவதால் இத்தகைய பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட காரணத்தில் உருவாகும் சிக்கல் இல்லை. முறையான வளர்ச்சியின்மை மற்றும் மூளையில் காயங்கள் ஏற்படுவது போன்ற காரணங்களால் மூளையின் செயற்பாடு பாதிப்படைந்து, இத்தகைய அறிவுத்திறன் குறைபாடு ஏற்படுகிறது.
பெற்றோர்கள் கர்ப்ப காலத்தில் முழுக் கவனத்துடன் இருந்தால் இத்தகைய குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்க இயலும். குழந்தை கருவில் உள்ள காலம், பிரசவம், குழந்தை பிறந்த பின்னான காலம் எனப் பல் வேறு நிலைகளில் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பிறந்த குழந்தை தாய்ப்பால் மற் றும் போத்தல் பாலை அருந்துவதற்கு சிரமப் படுதல், அசட்டுத்தனத்துடன் இருப்பது, சுறுசுறுப்பில்லாமல் இருப்பது, எரிச்சலாக இருப்பது, முகம் சோர்வுடன் காணப்படுவது, கை, கால்களில் தேவையில்லாத நடுக்கம் காணப்படுவது, அசாதாரண உடல் அசைவு, கண் சிமிட்டுதலில் வேறுபாடு, இயல்பான குழந்தை போலல்லாமல் வித்தியாசமான நட வடிக்கைகளைக் கொண்டிருப்பது, குழந்தை பிறந்து உரிய காலத்தில் நடக்க இயலாமல் போவது அல்லது அதில் கால தாமதம் ஏற்படு வது, காது கேளாமை, நரம்பு மண்டலப் பாதிப்பு கள், தசை இறுக்க நோயினால் நடப்பதில் சிரமம் ஆகியவற்றை இந்நோய்க்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்தது முதல் மூளை உள்ளிட்ட உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஒட்சிசன் கலந்த இரத்தம் சென்று கொண்டேயிருக்கவேண்டும். மூச்சுக் காற்றிலிருந்து கிடைக்கும் ஒட்சிசனை, இரத்தத்தில் கலந்து இதயத்திற்கு அனுப்பி, அங்கிருந்து மூளை உள்ளிட்ட உடலின் அனைத்துப் பகுதி களுக்கும் இரத்தம் செல்வதை நுரையீரல் உறுதி செய்கிறது. இதனால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு இருக்காது. குழந்தை அவ்வப்போது அழும். சோர்வின்றித் துறுதுறு வென இருக்கும். வளர்ச்சியிலும், எடை அதிகரிப்பிலும் எந்தத் தடையும் நிகழாது.
ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் முதல் ஐந்து மாதங்களுக்குள் மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் வளர்ந்துவிடும். இந்நேரத்தில் தாய்க்கு வைரஸ் காய்ச்சல், அம்மை போன்ற நோய் ஏற்பட்டால் வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டு செரிபரல் பால்ஸி ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல் நெருங்கிய உறவுத் திருமணம் செய்துகொண்டாலும் இத்தகைய பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல் பிரசவத்தின்போது ஆயுதம் கொண்டு குழந்தையை வெளியே எடுக்கும் போது, தவறுதலாகக் குழந்தையின் தலையில் அடிபட்டால் கூட இத்தகைய அறிவுத்திறன் குறைபாடு வருவதற்கு வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பிறகு தலையில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது மூளையில் நோய்த் தொற்று ஏற்பட்டாலோ கூட குழந்தைக்கு செரிபரல் பால்ஸி குறைபாடு வருவதற்கு வாய்ப்பு உண்டு எனலாம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் இதற்கான அறி குறிகள் ஒரேமாதிரியாக இல்லாமல் வெவ் வேறாக இருப்பதால், குழந்தையின் மூளையை சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் செய்து உறுதி செய்து கொள்ளவேண்டும்.
பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு செரிபரல் பால்ஸி இருப்பது உறுதி செய்யப்பட் டால் இதனைக் கேட்கும் பெற்றோர்கள் முத லில் கவலைப்படாமல், மனதைத் திடமாக வைத்துக்கொண்டு இதற்கான சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும். குழந்தை பயிற்சியா ளர், குழந்தை முடநீக்கியல் நிபுணர், நரம்பியல் நிபுணர், எலும்பு முட நீக்கியல் நிபுணர், பேச்சுப் பயிற்சியாளர், சிறப்புப் பயிற்சியாளர் மற்றும் பாதிப்புக்கு ஏற்ப சிறப்பு மருத்துவ நிபுணர் கொண்ட குழுவினரால் தொடர்ந்து கூட்டு சிகிச்சை பெற்றால் இதனை குணப்படுத்தி விட இயலும்.
டாக்டர் ஆர் சிவக்குமார்
தொகுப்பு ஆர். ஜி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக