தேவையானவை :
1. முள் நீக்கிய வஞ்சிரம் மீன் அல்லது சுறா மீன் – 1/2 கிலோ
2. பூண்டு – 10 பல்
3. இஞ்சி – 50 கிராம்
4. கடுகு – 3 டீஸ்பூன்
5. மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
6. மிளகாய் வற்றல் – 20
7. சீரகம் – 30 கிராம்
8. மிளகாய்தூள் – 1 மேஜைக்கரண்டி
9. வினிகர் – 250 கிராம்
10. கடலை எண்ணைய் – 250 மி.லிடடர்
11. உப்பு தேவையான அளவு
மீன் ஊறுகாய் செய்முறை:
•நன்கு முள் நீக்கிய வஞ்சிரம் அல்லது சுறா மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் வைத்துகொள்ளவும்.
•சுத்தம் செய்த மீனில் உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் தடவி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
•வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி மீனை பொறித்து எடுக்கவும்.
•வினிகரை பயன்படுத்தி இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
•அடுப்பில் இருக்கும் வாணலியில் கடுகு போட்டு பொறித்தும் அத்துடன் அரைத்துவைத்திருக்கும் விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
•பின்பு மீனையும் அதில் போட்டு எண்ணை பிரியும் வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து சமைத்து எடுத்துக்கொள்ள்வும்.
பின்பு நன்கு ஆறியதும் ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைத்துகொண்டால் ஒரு வாரமோ அல்லது மாதமோ வைத்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: எக்காரணம் கொண்டும் இஞ்சி பூண்டு விழுதில் தண்ணீரை பயன்படுத்தகூடாது. விழுதுக்கு தேவை எனில் வினிகரை மட்டும் உபயோகிக்கவும். தண்ணீரை பயன்படுத்தினால் ஊறுக்காய் கெட்டுபோய்விடும்.
இதை 1 கிலோ அளவிற்கு செய்ய தேவையானபொருள்களை அப்படியே இருமடங்காக எடுத்துகொள்ளவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக