தனது காதல் வாழ்வுக்கு மகள் இடையூறாக இருப்பதாகக் கருதி விபரீத முடிவு
தனது காதல் வாழ்க்கைக்கு தனது பாலகியான மகள் இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர், மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு (36 வயது) என்ற மேற்படி தாய், தனது 15 மாத மகளான அடெலெயிட்டை பெர்க் சுர் மெர் கடற்கரைக்கு தள்ளுவண்டியில் நிதானமாக தள்ளி வந்து ஆங்கிலக் கால்வாயினுள் தள்ளும் காட்சி ‘சிசிரிவி’ கண்காணிப்பு கருவியில் பதிவாகியுள்ளது.
கடந்த நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூர படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் மறுநாள் மேற்படி பாலகியின் சடலம் தள்ளுவண்டியில் சிக்கிய நிலையில் கடலில் மிதந்துள்ளது.
இதனையடுத்து அந்த பாலகியின் பெற்றோரைத் தேடி நாடளாவிய ரீதியில் 10 நாட்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மரபணு பரிசோதனைகளின் பிரகாரம் அந்தப் பாலகியின் தாயார் பாரிஸ் நகரில் 63 வயது நபரொருவருடன் வசித்து வந்த பபியன்னி கபோயு என அடையாளங் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
இது தொடர்பில் தத்துவவியல் துறை மாணவியான பபியன்னி பொலிஸாருக்கு தெரிவிக்கையில், அடெலெயிட்டின் தந்தையுடனான காதல் வாழ்க்கைக்கு தனது குழந்தையான அந்தப் பாலகி தடையாக இருப்பதாக உணர்ந்தே அவளைக் கொல்ல முடிவெடுத்ததாகத் தெரி வித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக