ஞாயிறு, 15 டிசம்பர், 2013

இந்தியாவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ஒருபால் உறவு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு

ஒருபால் உறவு இந்­திய தண்­டனைச் சட்­டத்தின் 377 ஆம் பிரி­வின்­படி தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்று இந்­திய உச்ச நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பு அங்கு பெரும் அதிர்­வ­லை­க­ளையும் விவா­தத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. பிர­ப­ல­மா­ன­வர்கள் பலர் உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்­புக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர். அதே­வேளை சமயம் சார்ந்த சில அமைப்­புக்கள் நீதி­மன்றத் தீர்ப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.



ஒருபால் உறவில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு ஆயுள் தண்­டனை வரை வழங்­கப்­ப­டலாம் என்று உறு­தி­செய்­தி­ருப்­பதன் மூலம், அடிப்­படை மனித உரி­மை­களைப் பாது­காக்க தனக்குக் கிடைத்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு வாய்ப்பை இந்திய உச்ச நீதி­மன்றம் தவ­ற­விட்­டி­ருப்­பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒருபால் உறவு (ஹோமோசெக்ஸ்), எதிர்பால் உறவு (ஹெட்­ரோசெக்ஸ்) என்ற பாகு­பாடே 18ஆம் நூற்­றாண்டு ஐரோப்­பாவில் செயற்­கை­யாக உரு­வான பிரி­வினை. அதற்கு முன்னர் அத்­த­கைய பிரி­வினை இல்லை என்­ப­துடன் ஒருபால் உற­வுக்­காக யாரும் தண்­டிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை. ஒருபால் உறவு இயற்­கைக்கு மாறா­னது. ஆகவே, அது தண்­ட­னைக்­கு­ரி­யது என்ற நிலை உரு­வா­னது சுமார் 300 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர்தான்.

பழங்­கால கிரேக்­கத்தில், சோக்­ரடீஸ் மற்றும் பிளாட்டோ உட்­பட பலரும் இளம் வாலி­பர்­க­ளுடன் பாலியல் உறவு கொண்­டி­ருந்­த­தையும் அது இயல்­பா­ன­தாக ஏற்­கப்­பட்­டி­ருந்­த­தையும் தெரிந்து கொள்ள முடி­கி­றது. புரா­ணங்­களைக் கட்­டு­டைத்துப் படிக்­கும்­போது, இதற்­கான சில மறை­முக அடை­யா­ளங்­களை பார்க்க முடியும். ஒருபால் உறவு இல்­லாத வர­லாற்றுக் காலம் என்ற ஒன்று எப்­படி மனித வர­லாற்றில் ஏது­மில்­லையோ, அதைப் போல உலகின் எந்த நாடும், பகு­தியும் இதற்கு விதி­வி­லக்­காக இருந்­ததும் இல்லை.

ஒருபால் உறவு இயற்­கைக்கு மாறா­னது என்று இந்­திய சட்டப் பிரிவு 377 கூறு­வதே 18 ஆம் நூற்­றாண்டுச் சிந்­த­னையின் அடிப்­ப­டையில் கடந்த 300 ஆண்­டு­களில் அறி­வியல் வெகு­தூரம் பய­ணித்­து­விட்­டது. 1970 களின் தொடக்கம் வரையில் ஒருபால் உறவை மன­நோ­யாக, மனப்­பி­றழ்­வா­கவே பார்த்­தது அறி­வியல் உலகம். மர­ப­ணு­வியல் துறையில் ஏற்­பட்ட மாற்­றங்­களும், விலங்­கு­களின் உலகில் ஒருபால் உறவு பர­வ­லாக இருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டதும் அறி­ய­லா­ளர்­களின் கண்­ணோட்­டத்தை மாற்­றி­யது.

இதன் விளை­வாக 1970 களின் மத்­தியில், அமெ­ரிக்க மன­நல மருத்­துவக் கழ­கமும், அமெ­ரிக்க உள­வியல் கழ­கமும் இதை மனநோய், மனப்­பிறழ்வு ஆகி­ய­வற்றின் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கின. ஆனால், பொது­மக்­களின் பார்­வையில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. இதில், கற்­ற­வர்கள், கல்­லா­த­வர்கள் என்ற வித்­தி­யாசம் இல்­லாமல் அனை­வ­ராலும் ஒருபால் உறவு மனப்­பி­றழ்வு என்­ப­தையும் தாண்டி அநா­க­ரி­க­மா­ன­தாக, அவ­மா­னத்­துக்­கு­ரி­ய­தாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் இன்றும் உள­வியல் நிபு­ணர்­களில் கணி­ச­மா­ன­வர்கள் இந்தக் கருத்­துக்கு ஆட்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

‘ஆண், - பெண் உறவு எப்­படி இயல்­பா­னதோ, இயற்­கை­யா­னதோ அப்­ப­டித்தான் ஆண் - ஆண் உறவும், பெண் - பெண் உறவும் இயல்­பா­னவை என்­பது அறி­வி­ய­லா­ளர்­களால் உறு­தி­யாக நிலை­நாட்­டப்­பட்­டு­விட்ட உண்மை. ஒரு­வேளை, அப்­ப­டி­யல்­லாது அது இயற்­கைக்கு மாறா­ன­தாக இருந்­தாலும், குற்­ற­மாகப் பார்க்­கப்­பட வேண்­டிய செயல் அல்ல’ என்­பதே மனித உரி­மைகள் கோட்­பாடு வலி­யு­றுத்தும் விடயம்.

ஆங்­கி­லேயே தத்­துவ மேதை ஜான் ஸ்டூவர்ட் மில்லின் தீங்குக் கோட்­பாட்­டின்­படி (ஹார்ம் ப்ரின்­சிபிள்), ஒரு­வ­ரது செயல்கள் பிற­ருக்குத் தீங்­கி­ழைக்­கா­த­வரை அவர் தனது விருப்­பப்­படி நடந்­து­கொள்­ளலாம். பிற­ருக்கோ சமூ­கத்­துக்கோ தீங்கு இல்­லா­த­வரை அவ­ரது செயல்­களில் சமூ­கமோ அரசோ குறுக்­கிட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இந்தக் கோட்­பாட்டைப் புரிந்­து­கொள்ள ஒருவர் சட்ட மேதை­யாக இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஆனாலும், உச்ச நீதி­மன்றம் இந்தக் கோட்­பாட்டைப் புறந்­தள்­ளி­யி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்­திய அர­சியல் சட்­டத்தின் 14, 15, மற்றும் 21 பிரி­வுகள் வழங்கும் வாழ்­வு­ரிமை, தனி­நபர் சுதந்­திரம், கண்­ணியம் ஆகிய அடிப்­படை உரி­மை­க­ளுக்கு எதி­ரா­ன­தாக, 1860 ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட இந்­திய தண்­டனைச் சட்டம் பிரிவு 377 இருப்­பது இப்­பொ­ழுது புலப்­பட்­டுள்­ளது. ஒருபால் உறவு குற்­ற­மல்ல என்று தீர்ப்­ப­ளிக்க ஒரு நீதி­மன்றம் புரட்­சி­க­ர­மா­ன­தாக இருக்க வேண்­டிய அவ­சி­யம்­கூட இல்லை. மதம் மற்றும் அர­சியல் சித்­தாந்த விவ­கா­ரங்­களில் ஒரு­வ­ருக்கு, தான் விரும்பும் (வன்­முறை தவிர்த்த) பாதையை மேற்­கொள்ள உரிமை உண்­டெனில், அதே உரிமை பாலியல் சுதந்­தி­ரத்­துக்கும் பொருந்தும் என்­பது ஓர் எளிய உண்மை.

மதத் தலை­வர்கள், பெரும்­பா­லான அர­சியல் தலை­வர்கள் மற்றும் பொது­மக்­களில் பலர் ஒருபால் உற­வுக்கு எதி­ராக வைக்கும் வாதங்கள் விவா­தத்­துக்­கு­ரி­யவை. ஒருபால் உறவு இயற்­கைக்கு மாறா­னது என்­பதே இவர்­க­ளது தலை­யாய வாதம். இதே வாதத்­தின்­படி மனிதன் ஆடை அணி­வ­தையே இவர்கள் எதிர்க்க வேண்டும், வேட்­டை­யா­டலைத் தாண்டி மனி­த­குலம்

முன்­னே­றி­யதை அனு­ம­தித்­தி­ருக்­கவே கூடாது. இவர்­க­ளது அடுத்த முக்­கிய வாதம், ஆண்/ஆண், பெண்/பெண் உறவு குடும்ப அமைப்­பையே சிதைத்­து­விடும், மனித இனப்­பெ­ருக்­கமே பாதிக்­கப்­பட்­டு­விடும் என்­பது.

நூற்­றுக்கு மூன்று அல்­லது நான்கு பேர் இத்­த­கைய வாழ்க்கை முறையைக் கைக்­கொள்­வது எந்த வகை­யிலும் மனித இனப்­பெ­ருக்­கத்தைப் பாதிக்­காது. அப்­படிப் பாதிக்­கு­மெனில், இந்த மூன்று அல்­லது நான்கு சத­வீ­தத்­தினர் எப்­போதும் மனித குலத்தில் இருந்­து­வந்­தி­ருக்கும் உண்மை, நமது இனப்­பெருக்­கத்­தையோ குடும்ப அமைப்­பையோ இது­வரை பாதிக்­கா­தது ஏன்? ஒருபால் உற­வா­ளர்­களால் குழந்தை பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­றாலும், குழந்­தை­களைத் தத்­தெ­டுத்து வளர்ப்­பதன் மூலம் தங்­க­ளுக்­கென குடும்­பத்தை அவர்­களால் உரு­வாக்­கிக்­கொள்ள முடியும் என்­ப­தையும் ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும்.

ஒருபால் உறவைச் சட்­ட­ரீ­தி­யாக அனு­ம­திப்­பதன் மூலம் பலரும் இதைப் பின்­பற்றத் தொடங்­கு­வார்கள், மொத்த சமூ­கத்­தையே இது பாதிக்கும் என்­பது மற்­றொரு வாதம். 96 அல்­லது 97 சத­வீ­த­மாக இருக்கும் எதிர்பால் உற­வா­ளர்­களால், வெறும் மூன்று சத­வீத ஒருபால் உற­வா­ளர்­களை மாற்ற முடி­ய­வில்லை என்­கி­ற­போது, இதற்கு நேரெ­தி­ரான தாக்கம் நிகழ்­வது மிகக் கடினம். இது சட்­டப்­படி சரி என்ற நிலை வந்தால், எதிர்பால் உற­வா­ளர்­களில் ஓரிரு சத­வீ­தத்­தினர் சோதனை முயற்­சி­யாக இதில் ஈடு­பட வாய்ப்­புகள் உண்டு. அதுவும் அவர்­க­ளது விருப்பம், அதில் தலை­யிட அர­சுக்கோ சமூ­கத்­துக்கோ உரி­மை­யில்லை.

19 மற்றும் 20 ஆம் நூற்­றாண்­டு­களின் பல மேதைகள், அறி­ஞர்கள் ஒருபால் உற­வா­ளர்­க­ளாக இருந்­துள்­ளனர். 19 ஆம் நூற்­றாண்டின் இணை­யற்ற இலக்­கிய மேதை ஆஸ்கார் வைல்ட் மற்றும் 20 ஆம் நூற்­றாண்டின் கணித மேதையும், கணினி அறி­வி­யலின் தந்­தை­யு­மான ஆலன் டூரிங் ஆகிய இரு­வரும் ஒருபால் உறவு குற்றம் என்று கரு­திய பிரிட்­டனின் சட்­டத்தால் மோச­மாகத் தண்­டிக்­கப்­பட்­ட­வர்கள். வைல்ட் இரண்டு ஆண்­டுகள் சிறைக்கு அனுப்­பப்­பட்டார். தனது கணனி ஆராய்ச்சி பாதிக்­கப்­படக் கூடாது என்­ப­தற்­காகச் சிறைக்குச் செல்­வ­தற்குப் பதி­லாக, வேதி­யியல் முறை­யி­லான ஆண்மை நீக்கம் என்ற தண்­ட­னையை ஏற்­றுக்­கொண்டார் டூரிங். இந்த தண்­ட­னை­க­ளுக்குப் பிறகு இந்த இரண்டு மாபெரும் ஆளு­மை­களும் ஒடிந்­து­போனார்கள்.

ஸ்டீவன் ஹாக்கிங் உட்­பட பல அறி­வியல் மேதைகள் எடுத்த முயற்­சியின் விளை­வாக 57 ஆண்­டு­களின் பின்னர், பிரிட்டன் அரசு டூரிங்­குக்கு இழைத்த அநீ­திக்­காக 2009 இல் மன்­னிப்பு கேட்­டது. வைல்டும் டூரிங்கும் புகழ்­பெற்ற உதா­ர­ணங்கள். சட்­டத்­தாலும் சமூ­கத்­தாலும் இப்­படித் தினம்­தினம் தண்­டிக்­கப்­படும் சாதா­ர­ணர்கள் இந்­தி­யா­விலும் உல­கெங்­கிலும் கோடிக் கணக்கில் இருக்­கி­றார்கள்.

இந்­திய தண்­டனைச் சட்­டத்தின் 377 ஆம் பிரிவை உரு­வாக்­கிய பிரித்­தா­னி­யர்கள் வெகு தூரம் முன்னேறி, இன்று ஒருபால் திருமணத்தைச் சட்டரீதியாக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இந்தியா அந்தச் சட்டத்தை இன்னமும் தாங்கிக்கொண்டிருக்கிறோம். ஏதோ பெரும் ஒழுக்க விதியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமிதமும் கொள்கிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல