வட கொரியா சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றுக்கு களமாக மாறியுள்ள தனது அரசியல் கைதிகளுக்கான முகாம்களை மூட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
கவன்லிஸோ 15 மற்றும் கவன்லிஸோ 16 ஆகிய மேற்படி முகாம்களின் புதிய செய்மதி புகைப்படங்களை அந்த சபை வெளியிட்டுள்ளது.
அந்த முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் தமது புதைகுழிகளை தாமே தோண்ட நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அதிகாரிகளுக்கு சேவையாற்ற பணிக்கப்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும் கவன்லிஸோ 16 முகாமில் பணியாற்றிய முன்னாள் உத்தியோகத்தரான லீ என்பவரை மேற்கோள் காட்டி அச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
வட கொரியாவிலுள்ள அந்தத் தடுப்பு நிலையங்களில் குறைந்தது 130,000 கைதிகள் உள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
தமக்கு கிடைத்த பிந்திய சான்றை வட கொரியாவிலான மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரித்து வரும் ஐக்கிய நாடுகள் விசாரணை ஆணையகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது.
சர்வதேச மன்னிப்புச் சபைக்கு லீ அளித்த பேட்டியில், கைதிகள் தமது சொந்த புதைகுழிகளை தாமே தோண்ட நிர்ப்பந்திக்கப்பட்ட பின் அவர்கள் கழுத்தில் மரக்கட்டையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அந்த புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாகவும் அதிகாரிகளுக்கு இரவு நேரத்தில் சேவையாற்ற அனுப்பப்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விவகாரத்தை வெளியில் தெரியாது மறைக்கவே அதிகாரிகள் அந்தப் பெண்களை கொன்றதாக தெரிவித்துள்ள லீ, இதுவே அங்குள்ள அரசியல் கைதிகளுக்கான முகாம்கள் பலவற்றில் இடம்பெறுவதாக கூறியுள்ளார்.
வட கொரியாவின் மத்திய பகுதியிலுள்ள கவன்லிஸோ 15 முகாம் 367 சதுர கிலோமீற்றர் அளவான நிலப் பரப்பிலும் வட ஹம்யொங் மாகாணத்தில் ஹவஸியோங் நகருக்கு அண்மையிலுள்ள கவன்லிஸோ 16 முகாம் 556 சதுர கிலோமீற்றர் அளவான நிலப் பரப்பிலும் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக