பேஸ்புக் தரும் சிறந்த ஒரு வசதி, நம் நண்பர்களுடன் உடனடியாகச் செய்திகளை அனுப்பிப் பதில்களைப் பெறுவதாகும். இன்ஸ்டண்ட் மெசேஜ் வசதி என இதனை அழைக்கிறோம். இவ்வாறு ஒருவருடன் அரட்டை அடிக்கையில், செய்தி ஒன்றை அல்லது இணைப்பாக படம் ஒன்றை அனுப்புகிறோம். சில வேளைகளில் தவறான நபருக்கு இவற்றை அனுப்பிவிடுவோம்.
அப்படியானால், அந்த செய்தியை மட்டும், அல்லது இணைப்பை மட்டும் நீக்க நாம் விரும்புவோம். ஆனால், பேஸ்புக் மொத்தமாக முழுமையான உரையாடல் அனைத்தையும் நீக்கிவிடும். நாம் விரும்பும் வேண்டாதவற்றை மட்டும் நீக்க முடியாதா? என்ற கேள்வி நம் மனதில் எழும். நீக்கலாம்.
அதற்கான வழியினை இங்கு காணலாம்.
இதனை மேற்கொள்ள, முதலில் சம்பந்தப்பட்ட நண்பருடன் மேற்கொண்ட முழு உரையாடலையும் விண்டோவில் கொண்டு வர வேண்டும்.
இதற்கு, அந்த நண்பருடனான பாப் அப் விண்டோவில் தரப்பட்டிருக்கும் உரையாடல் விண்டோவில் உள்ள கியர் சக்கரத்தில் கிளிக் செய்திட வேண்டும்.
இதில் See Full Conversation' என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இங்கு, நீக்க விரும்பும் குறிப்பிட்ட உரையாடல் செய்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர், வலது மேலாக உள்ள Actions என்னும் பட்டனைக் கிளிக் செய்திட வேண்டும்.
இங்கு கிடைக்கும் மெனுவில் 'Delete Messages' என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், ஒவ்வொரு மெசேஜ் அருகேயும் ஒரு செக் பாக்ஸ் காட்டப்படும்.
இனி, நீங்கள் நீக்க விரும்பும் மெசேஜ் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும்.
அடுத்து கீழாக உள்ள Delete பட்டனை அழுத்தவும். இப்போது பேஸ்புக் இறுதியாக உங்களுக்கு அந்த மெசேஜை வைத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தினை சிறிய கேள்வி மூலம் காட்டும்.
தொடர்ந்து மெசேஜை நீக்க வேண்டும் என முடிவு செய்தால், 'Delete messages' பட்டனை அழுத்தி, மெசேஜை நீக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக