தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4-5
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, 4 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
* பின் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்து, மிளகாய் தூள், தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு குக்கரை திறந்து அதில் உள்ள உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, அதன் தோலை உரித்து, லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வாணலியில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* பின் பச்சை மிளகாய், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, லேசாக மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக் வதக்கி இறக்க வேண்டும். ஒருவேளை கிரேவி போன்று வேண்டுமானால், சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடலாம்.
* இப்போது சுவையான உருளைக்கிழங்கு தக்காளி ரெசிபி ரெடி!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக