பக்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.
2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.
3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.
4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.
5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.
குறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல: மிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது.
Edit மெனு சென்று, Go To செல்லவும். அல்லது எப்5 கீ அழுத்தவும். உடனே, Find and Replace டயலாக் பாக்ஸ், Go To என்ற பிரிவில் திறக்கப்படும். இடது பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்புவது எந்த அடிப்படையில் Page, Line, Section எனத் தொடங்கி 13 ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் Page தேர்ந்தெடுத்து, வலது பக்கம், பக்க எண்ணை டைப் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்தால், குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும்.
ஹைலைட்டிங் கலர்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக