திங்கள், 10 பிப்ரவரி, 2014

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 14

பர்மிய சமூகத்தில் உயர்நிலையில் இருந்து செட்டியார்களும், பிராமணர்களும் நாடு திரும்பிய பிறகு தமது குடும்பச் செல்வாக்கு காரணமாகவும், சமூகத் தொடர்புகள் காரணமாகவும் வேகமாக தமது வாழ்க்கையை மீளத் துவங்கினர்.

விவசாயிகளாகவும், சிறு தொழில்புரிபவர்களாகவும் இருந்த லட்சக்கணக்கான பிற தமிழர்களுக்கோ இந்தியா திரும்பிய பிறகு வாழ்க்கையை மீளத் துவங்குவது பெரிய சவாலாக இருந்துள்ளது.

பர்மாவில் தமிழர்கள் மீது நேரடியான வன்முறை பிரயோகிக்கப்படவில்லை. ஆனால் சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு தமிழ் சமூகம் உள்ளானது.போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னை பாரிமுனைப் பகுதியில் உயர்நீதிமன்ற வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது பர்மா பஜார்.

1960களிலும் 70களிலும் பர்மாவில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மயமாக்கல் நடவடிக்கையின் போது பர்மியக் குடியுரிமை பெறாதவர்கள் வேலை செய்யமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் பல ஆயிரம் பேர் வேலை இழந்ததாகக் கூறுகிறார் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்து அகதியாக இந்தியாவுக்கு வந்த கவிஞர் வேணுகோபால்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை அழைத்து வர இந்திய அரசு கப்பல்களை அனுப்பியது. அந்தக் காலகட்டத்தில் மொத்தம் 3 லட்சம் பேர் அகதிகளாக வந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

பர்மா பஜார்கள்

பர்மிய அகதிகள் தமது வாழ்க்கையை மீளத் துவக்க பல இடங்களில் பர்மா பஜார் என்ற வர்த்தகப் பகுதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அவர்கள் வாழ பல பர்மா காலனிகள் உருவாக்கப்பட்டன. வீடு கட்டிக் கொள்ள மானியமும் சிலருக்கு கிடைத்துள்ளது.

தனது தந்தையுடன் சிறுவனாக இந்தியாவுக்கு வந்த ஷாகுல் ஹமீது தனது கையில் போட்டிருந்த இரு மோதிரங்களை விற்று வியாபாரத்தை துவங்கினார். தனது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர பல ஆண்டுகளானதாக அவர் கூறுகிறார்.

பர்மாவில் இருந்து வந்தவர்கள் தமிழகத்தின் பல இடங்களில் வாழ்கின்றனர். இந்து, முஸ்லீம் என்ற வேறுபாடுகள் இவர்களிடம் குறைந்த அளவே காணப்படுகிறது.

மற்றத் தமிழர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.இருந்தும் ஒரு சில இடங்களில் பர்மிய தமிழர்களை மட்டுமே கொண்ட குடியிருப்புப் பகுதிகளும் இருக்கின்றன. இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தில் ஒன்றிப் போய்விட்டனர்.

ஆனால், இவர்களின் பெற்றோர்கள் பலர் பர்மிய ஞாபகங்களை மறக்காமல் நினைவு வைத்துள்ளனர். பலரின் உறவினர்கள் இன்றைக்கும் பர்மாவில் இருக்கின்றனர். பிறந்து வளர்ந்த இடத்தை பார்க்க வேண்டும், உறவுகளைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் பரவலாக இருக்கிறது.

பர்மா சென்று வந்தவர்களோ அங்கே நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தமது உறவினர்கள் பொருளாதார ரீதியாக கீழே விழுந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

தமிழகத்திலேயே பல தசாப்தங்கள் வாழும் காரணத்தால் பலர் தமிழ் சாப்பாட்டுக்கு முழுமையாக மாறிவிட்டாலும், பர்மாவை ஞாபகப்படுத்தும் உணவுகளும் இங்கே கிடைக்கின்றன.

பர்மாவின் புகழ்பெற்ற பிலிகன் முனீஸ்வரன் கோயிலில் இருந்து மண்ணை கொண்டு வந்து அதன் மீது இங்கு சென்னையில் ஒரு முனீஸ்வரன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பர்மா தேக்கால் கோயில் கொடிமரம் செய்யப்பட்டுள்ளது.

பர்மாவில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயப் பின்னணி கொண்டவர்கள். ஆனால் தமிழகத்தில் நகர்புறங்களில்தான் அவர்கள் வாழ்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டது.

முதலில் பல கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தாலும், இங்கே உயர்வதற்கான பல வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. பலர் அரசு வேலைகளில் சேர்ந்துள்ளனர். சிலர் உயர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

பர்மாவில் இருந்து மீண்டும் வந்த தமிழர்கள் பல ஆண்டுகள் தனித்து வாழ்ந்ததால் அவர்களைப் பற்றிய புரிதல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தில் சற்று குறைவாகவே உள்ளது.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் இளையதலைமுறை

பர்மாவில் உள்ள தமிழ் இளைஞர்கள் தமிழ் மொழியை கற்கவும், தமிழ் கலாச்சாரத்தை பேணவும் தம்மால் முடிந்த முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

பர்மிய மற்றும் தமிழ் அடையாளங்களை இணைத்துப் பயன்படுத்தும் போக்கு இளைய தலைமுறையிடம் இருக்கிறது. பர்மாவில் ரொகிங்காக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் இதுவரை ரங்கூனுக்கு பரவவில்லை. எனவே தமிழர்கள் அது பற்றி அதிகம் கவலைப்படவில்லை. தனியாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளவும் பலர் விரும்பவில்லை.

பர்மிய உடையையும் உணவையும் இவர்களில் பலர் விரும்புகின்றனர். அதேநேரம் மாட்டிரைச்சியை தவிர்க்கின்றனர். திருமணமாகாத ஆணும் பெண்ணும் நண்பர்களாக சகஜமாக பழகுவதற்கு இருந்த சமூகத் தடைகள் மெதுவாக தளர்ந்து வருகின்றன.

மருத்துவம், பொறியியல், மேலாண்மை போன்ற துறைகளில் பட்டப்படிப்பு படித்து வரும் இளைஞர்கள் மத்தியில் கல்வியும் வேலைவாய்ப்புமே முக்கிய பேசுபொருளாக இருக்கிறது.

பர்மியப் பொருளாதாரம் வேகமாக வளர ஆரம்பித்துள்ளதால் வேல வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இருந்தும் கணினி இணையப் பயன்பாடு இங்கு பெரிய அளவில் இல்லை.

இவர்களில் பலரின் உறவினர்கள் இந்தியாவில் இருப்பதாலும், மொழி மற்றும் கலாச்சார தொடர்புகளாலும் இந்தியா மீதான பாசம் குறையவில்லை. பலருக்கு இந்தியா வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் இவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தயுள்ளது.

இணைய தளங்கள் மூலமாக அங்கு நடைபெற்ற விடயங்களைத் தாம் தெரிந்து கொண்டதாகக் கூறும் இவர்கள், தம்மால் ஏதும் செய்ய முடியாவில்லையே என்று வருந்தியதாகக் கூறுகின்றனர்.

தமிழ் திரைப்படங்கள் இங்கே திரையிடப்படுவதில்லை என்றாலும், செயற்கைக்கோள் தொலைக்காட்சிப் பரவல் சினிமா ரசிகர்களின் எண்ணிக்கையை கணிசமாக பெருக்கியுள்ளது.

அரசு வேலைகளில் இவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் சென்ற தலைமுறையினரைப்போல அரசியலில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்ற உணர்வும் இவர்களிடம் உள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் பர்மாவில் குடிபுகுந்த தமிழ் சமூகம், தமது உழைப்பாலும், வியாபாரத் திறமையாலும் பெற்றிருந்த சமூக செல்வாக்கை, இரண்டாம் உலகப் போர் காலத்துக்குப் பிறகு இழந்துவிட்டது.

அதன் பிறகு தமிழர்களின் வாழ்க்கை இறங்குமுகமாகவே இருந்துள்ளது.

ஆனால் இந்த நிலை மாறும், மாறிவரும் அரசியல் சூழல் தமக்கும் தமது சமூகத்துக்கும் சாதகமான பலன்களைத் தரும் என்ற நம்பிக்கையில் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள்.

தங்க மண்ணில் தங்கிய  தமிழர்கள் தொடர் இத்தோடு முடிவடைகிறது.


பிபிசி தமிழோசை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல