டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழக மீனவர்கள், தண்ணீர், மின்வெட்டு பிரச்சனைகள் குறித்து பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் திடீரென பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்திக்க நேரம் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.
தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவே பிரதமரை தமது எம்.எல்.ஏக்கள் 20 பேருடன் சந்திப்பதாக விஜயகாந்த் தரப்பு தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி குறித்தே இந்த சந்திப்பில் விஜயகாந்த் பேச இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து 20 எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 11 மணியளவில் மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் விஜயகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பில் விஜயகாந்த் உடன் தேமுதிகவின் 20 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.
இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, தாதுமணல் கொள்ளை, முல்லை பெரியார், காவேரி உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விஜயகாந்த் மனு ஒன்றை கொடுத்தார்.
பிரதமருடனான இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமருடன் பேசினேன். அதேபோல் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்ச்சனை, மின்வெட்டு பிரச்சனை குறித்தும் பிரதமருடன் தெரிவித்தோம்.
தமிழக பட்ஜெட் போற்றுவதற்கு பதிலாக தூற்றுவதாக இருக்கிறது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
பிரதமர் சொன்னதாக கேப்டன் நியூஸ் டிவி...
தேமுதிகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிகளில் ஒன்றான கேப்டன் நியூஸ் விஜயகாந்திடம் பிரதமர் தெரிவித்த கருத்துகளாக வெளியிட்டுள்ள செய்தி:
தமிழக எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் தம்மை சந்தித்தது மகிழ்ச்சி என்று பிரதமர் கூறினார். மேலும் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தமக்கு கடிதங்களை மட்டும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறார். அது சரியல்ல என்றும் விஜயகாந்திடம் பிரதமர் கூறினார்.
அத்துடன் விஜயகாந்த் தமிழ்நாட்டின் முதல்வரானால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு கேப்டன் நியூஸ் டிவி கூறியுள்ளது.
போயா.. டெல்லியிலும் எகிறினார் விஜயகாந்த்
பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழகத்தை சார்ந்த ராஜ் தொலைக்காட்சி செய்தியாளர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்து "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாது" என்று கடுப்படித்துவிட்டு விறுட்டென கிளம்பினாராம் விஜயகாந்த்.
முன்பு சென்னை விமான நிலையத்தில் மூத்த செய்தியாளர் ஒருவர் விஜயகாந்திடம் இப்படி கேள்வி கேட்கப் போய் அவரது ஆதரவாளர்கள் தள்ளிவிட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக