புதுடெல்லி: ''நிர்வாணம் என்பது ஆபாசம் அல்ல'' என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், திருமணம் செய்ய நிச்சயித்திருந்த கறுப்பு நிறப்பெண் பார்பராவுடன் 1993ஆம் ஆண்டு நிர்வாண போஸ் கொடுத்தார். அதை ஒரு நாளிதழ் வெளியிட்டது. இதனால் அந்த நாளிதழுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாளிதழ் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், ஆபாசம் என்று ஒன்றை சொல்லவேண்டுமானால், அது பாலுணர்வு கிளர்ச்சியை தூண்டுவதாக அமைந்திருக்க வேண்டும்.
பாலுணர்வினைத்தூண்டும் வகையில் அமையாதது வரையில் அல்லது பாலுணர்வு விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்காதது வரையில், ஒரு பெண்ணின் நிர்வாணம் அல்லது அரை நிர்வாணப்படம் ஆபாசம் என கருத முடியாது.
ஆபாசம் என்றால் அந்தப்படம் மனித மனதைக்கெடுப்பதாக அமைந்திருக்க வேண்டும். பாலுறவு உணர்வை தூண்டி படத்தை பார்க்க வைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆபாசம், உடல் அமைந்திருக்கும் நிலையை பொறுத்தும் அமையும். அது, படம் அமைந்ததின் பின்னணியையும் பொருத்ததாகும்.
பாலுணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்துகிற ஒன்றைத்தான் ஆபாசம் என கருதவேண்டும். ஆனால் ஆபாசம் என்பதை ஒரு சராசரி மனிதரின் பார்வையில் இருந்துதான் முடிவு செய்ய வேண்டும். சமகால சமூக நிலைக்கு ஏற்பவும் எது ஆபாசம் என்பதில் மாறுபாடு உண்டு. ஒரு கட்டத்தில் ஆபாசம் என தோன்றுவது இன்னொரு கட்டத்தில் அப்படி தோன்றாமலும் போய் விடுவதும் உண்டு.
இந்த வழக்கை பொறுத்தமட்டில், இனவெறிக்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்தான் போரிஸ் பெக்கர், தனக்கு நிச்சயித்திருந்த பெண்ணுடன் நிர்வாணமாக காட்சி தந்திருக்கிறார். இனவெறி என்ற சமூக அவலத்தை மனித சமுதாயத்தில் இருந்து ஒழித்து, அன்பினை மேலோங்கச்செய்ய செய்தி விடுக்கும் வகையில்தான் அவர் அப்படி நடந்துகொண்டுள்ளார்.
அந்தப்படம் அன்பைத்தான் வளர்க்கிறது. நிறம் கொஞ்சம் பிரச்னைதான். ஆனால் அன்பு அதைவிட உயர்வானது. இங்கே சிவப்பு நிற மனிதருக்கும், கறுப்பு நிற பெண்ணுக்கும் இடையே திருமணத்துக்கு அன்பு வழி நடத்தி இருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
விகடன்
படம்: இணையத்திலிருந்து

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக