‘கிங் ஆப் இங்க் லேண்ட்கிங் பாடி ஆர்ட்' க்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த இங்கிலாந்து"
இங்கிலாந்தில் முகம் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு தனது பெயரையும் மாற்றிக் கொண்ட இளைஞருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.
நமது கிராமங்களில் பச்சைக் குத்திக் கொள்ளும் என்ற பழக்கம் இருந்து வந்தது. அதுவேம் நாளடைவில் இன்று டாட்டூஸ்' என நவீன சாயம் பூசிக் கொண்டு பேஷனாக வலம் வருகிறது.
ஆனால், உடல் முழுவதும் பச்சைக் குத்திக் கொண்ட இங்கிலாந்து இளைஞர் ஒருவர் தனது பெயரையும் மாற்றிக் கொண்டதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்துள்ளது அந்நாட்டு அரசு.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரை சேர்ந்த மாத்யூ வீலன் என்ற இளைஞர், பச்சை குத்துவதில் அலாதி பிரியம் உடையவர். அதனால் 25 லட்சம் ரூபாய் செலவில் தனது முகம் உள்பட உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார் மாத்யூ.
முகம் முழுவதும் பச்சைக் குத்தப் பட்டிருப்பதால இவரது முகமே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயுள்ளது. அதோடு மாத்யூ தனது பெயரையும் "கிங் ஆப் இங்க் லேண்ட்கிங் பாடி ஆர்ட்" என மாற்றம் செய்து கொண்டார்.
இந்நிலையில், உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் மாத்யூ. அதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த போது தான் சிக்கல் ஆரம்பமாகியுள்ளது.
உண்மையான பெயரை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது பாஸ்போர்ட் அலுவலகம். ஆனால், மாத்யூ அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, அவருக்கு பாஸ் போர்ட்டு வழங்க அந்த அலுவலகம் மறுத்து விட்டது.
ஓட்டுனர் உரிமத்தில் தற்போதைய பெயர்தான் உள்ளது. பெயரை மாற்றிக் கொள்வது எனது உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. தற்போதுள்ள பெயரிலேயே பாஸ்போர்ட் பெற போராடுவேன் என மாத்யூ வீலன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக