செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

திருமணம் பார்ட்டி விசேஷங்களுக்கு திட்டமிட்டு சொல்றோம்!

எல்லா நாட்களிலும் அழகாக உடையும் நகையும் அணியவே பெண்கள் விரும்புவார்கள். விசேஷ தினங்களில் அந்த ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகமாகும். மற்ற யாரும் அணியாத உடை, நகையாக இருக்க வேண்டும்... நான்கு பேராவது ‘எங்கே வாங்கினீங்க?’ எனக் கேட்க வேண்டும். அப்போதுதான் அந்த எக்ஸ்ட்ரா மெனக்கெடல் அர்த்தம் பெறும்.

சரி, எந்த விசேஷத்துக்கு எப்படி நகை அணியலாம்?



விசேஷங்களுக்கான நகை என்பது இரண்டு விதமாகப் பார்க்கப்பட வேண்டும். ஒரு மணி நேரம், 2 மணி நேரம் மட்டுமே இருக்கப் போகிறோம் என்றால், சற்றே கனமான நகைகளாக இருந்தாலும் சகித்துக் கொள்ளலாம். நாள்முழுக்க இருக்க வேண்டிய விசேஷம் என்றால், அத்தகைய நகைகளை அணிந்து கொண்டு, நடமாடுவது சிரமமாக இருக்கும். அந்த மாதிரித் தருணங்களில் அதிக எடையில்லாத, சருமத்தை உறுத்தாத நகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

எந்த மாதிரி விசேஷங்களுக்கு எப்படி நகை அணிய வேண்டும் என்றும் சில விதிகள் இருக்கின்றன. அதன்படி மிக எளிமையாக நடக்கும் விசேஷம் என்றால், அங்கே நமது ஆடம்பரத்தையும் வசதிகளையும் காட்டுகிற நினைப்பில் இருக்கிற எல்லா நகைகளையும் அள்ளிப் போட்டுக்கொண்டு போய் நிற்கக்கூடாது. இப்போதெல்லாம் எப்பேர்பட்ட ஆடம்பரமான திருமணம், விசேஷங்களானாலும், பெரும்பாலான பெண்கள் நடமாடும் நகைக்கடைகளாகப் போய் நிற்பதை விரும்புவதில்லை.

போனோமா, வாழ்த்தினோமா, வந்தோமா என அவசரமாகக் கிளம்புகிற விசேஷங்களுக்கு, சிம்பிளாக ஒரு செயினும், அதற்கு மேட்ச்சாக ஒரு தோடும் போட்டுக் கொண்டால் போதும். அது மற்ற நாட்களில் வழக்கமாக நீங்கள் அணிகிற அதே நகையாக இல்லாமல், புதிய டிசைனில் இருக்கட்டும்.

கல்யாணத்துக்குச் செல்லும் போது, ஆரஞ்சு, மெரூன், மஞ்சள் என ப்ரைட்டான - அதே நேரம் வார்ம் கலர்களில்தான் உடையணிவீர்கள். அதற்கேற்ப அதே கலர்களுடன், கோல்டன் மணிகள் கலந்த நகைகள் அணிவது அம்சமாக இருக்கும். பெரிய பார்டர் வைத்த பட்டுப்புடவைகளை அணிவதானால், ஹாரம் செட் அழகாக இருக்கும். சின்ன பார்டர் வைத்த புடவைகளுக்கு, இப்போது ஃபேஷனில் உள்ள பாதியளவு ஹாரம் அழகாகப் பொருந்தும். மல்ட்டி கலர் பட்டுச் சேலைகளும் இப்போது ரொம்பவே பிரபலமாக உள்ளன. அந்தச் சேலைகளை அணிகிற போது, ஆன்ட்டிக் நகைகளை அணியலாம். ஜர்தோசி, ஆரி மாதிரியான அதிக வேலைப்பாடு செய்யப்பட்ட புடவைகளுக்கு நகைகள் மெலிதாகவும், சிம்பிளாகவும் இருந்தால்தான் அழகு.

‘கல்யாணம்னா ட்ரெடிஷனலாதான் டிரெஸ் பண்ணுவேன்’ என்கிற கொள்கையில் இருப்பவர்கள், காசு வைத்த நெக்லஸ் மற்றும் தோடு, மயில் உருவம் பதித்த நெக்லஸ் மற்றும் தோடு அணியலாம். ரெட்டைவடச் சங்கிலி, பதக்கம் வைத்த சங்கிலியெல்லாம் இப்போது ஃபேஷனில் இல்லை என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். ஜிமிக்கி இப்போது மிகப்பிரபலமாக இருப்பதால், புடவையின் டிசைனுக்கேற்ப குண்டு ஜிமிக்கியோ, கொடை ஜிமிக்கியோ, எனாமல் வேலைப்பாடு செய்த ஜெய்ப்பூர் ஜிமிக்கியோ அணியலாம். எடை குறைவான, மெகா சைஸ் ஜிமிக்கி அணிவதை இன்றைய இளம்பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அப்படி பெரிய ஜிமிக்கி அணிகிற போது, கழுத்துக்குக் கூட எதுவும் தேவையிருக்காது.

ஒரு கை நிறைய வளையல்களும், இன்னொரு கையில் பிரேஸ்லெட்டும் அணிவதுதான் இன்று ஹாட். அது பிடிக்காதவர்கள் கடா என்று சொல்லக்கூடிய மெகா சைஸ் வளையல் ஒன்றே ஒன்று அணியலாம். தடிமனான தங்க வளையல்கள் இன்று அவுட் ஆஃப் ஃபேஷன். உங்கள் கைகளை மற்றவர்கள் கவனிக்க வளையல் மட்டும் போதாது. மோதிரமும் முக்கியம். ஆன்ட்டிக் டிசைனிலோ, கல் பதித்த மாடலிலோ பெரிய மோதிரம் அணியலாம். டிசைனர் சேலைக்கு அதே மேட்ச்சிங் கலரில், உயர் தர மோல்டட் பிளாஸ்டிக்கில் பெரிய சைஸ் மோதிரங்கள் கிடைக்கின்றன.

கொலுசுப் பிரியைகள், கோல்டன் காம்பினேஷனில் கல் வைத்த கொலுசுகளை அணியலாம். ‘வாரத்துக்கொரு கல்யாணம்... போட்ட நகைகளையே திரும்பத் திரும்ப போட வேண்டியிருக்கு’ என நினைப்பவர்கள், கோல்டன் ஃபினிஷில் ஜிமிக்கிக்கான பேஸ் மட்டும் தனியே வாங்கிக் கொண்டு, வேறு வேறு கலர்களில் தோடு தனியே வாங்கி, இணைத்துப் போட்டுக் கொள்ளலாம். கழுத்துக்கான நெக்லஸ் செட்டிலும் திரெட் வைத்துச் செய்யப்பட்டதாக வாங்கிக் கொண்டு, மணிகளின் கலர்களை மட்டும் மாற்றிக் கோர்த்து அணியலாம்.

ரிசப்ஷன் செல்கிற போது, பட்டு உடுத்துவதை அனேக பெண்கள் விரும்புவதில்லை. அப்படியே அணிந்தாலும், எடை குறைவான சாஃப்ட் சில்க்தான் அவர்களது சாய்ஸ். அதிலும் அதிக ஜரிகை வேலைப்பாடு இருக்காது. இந்த மாதிரி பட்டு அல்லது டிசைனர் சேலைகளுக்கு ஸ்டோன் வைத்த சில்வர் ஃபினிஷ் நகைகள் அழகாக இருக்கும். மாலை நேரத்து பார்ட்டி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு கண்களை உறுத்தாத - அதே வேளை பளபளக்கக்கூடிய ஸ்டோன் நகைகள்தான் பொருத்தம். காதணிகளைப் பொறுத்தவரை, ஹுக் மாடலில் தொங்கும் நகைகளே ஃபேஷன். புடவை சிம்பிளாக இருந்தால், மெலிதான மாடலில் செயின் வைத்த வங்கி அணியலாம். அதிலும் ஹுக் வைத்து இப்போது கிடைக்கின்றன. கூட்டத்தில் தனியே தெரிந்தாக வேண்டும் என்பதில் அதிக கவனமாக இருக்கும் இளம் பெண்கள், மெலிதான நெத்திச்சுட்டியும் அணியலாம்.

பார்ட்டிக்கான நகைகள் சற்றே வித்தியாசமானவை. பார்ட்டிக்கான உடைகள் பெரும்பாலும் மிகவும் ஆடம்பரமாக இருப்பதால், நகைகள் அங்கே பெரிதாக எடுபடுவதில்லை. நகைகள் அணிந்திருந்தாலும் அவை உறுத்தக் கூடாது... பளிச்சென மற்றவர் கவனத்தை ஈர்க்கும்படியும் இருக்கக் கூடாது என்றே விரும்புவார்கள். கழுத்தை மூடியபடியான உடை அணிகிற போது, தனியே கழுத்துக்கென எந்த நகையும் தேவைப்படுவதில்லை. அதே விதிதான் கழுத்துப் பகுதியில் பிரமாண்டமான டிசைன் செய்யப்பட்ட உடைகளுக்கும். அகலமான கழுத்து வைத்த உடை அணிகிற போது, காதுக்கு மெகா சைஸில் காதணி அணிவதே பார்ட்டி ஃபேஷன்.

 தினகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல