மாகாணத்தில் அண்மைக்காலமாக நாளாந்தம் நடந்து வரும் விபத்து மரணங்கள், தற்கொலைகள், மர்மமரணங்கள் தொடர்பில் தேவலோகத்தில் மாநாடு நடப்பதாகக் கண்ட கனவு நேற்றைய தினம் இப்பகுதியில் தரப்பட்டது. அதன் தொடரை இங்கு பார்க்கலாம்.
எல்லாக் கடவுளர்களும் மாநாட்டு மண்டபத்திற்கு வருகைதர, மண்படத்தில் இருந்தவர்கள் எழுந்து நின்று இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினர். ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அனைவரும் அமர மாநாட்டின் விடயப்பொருளை அறிவிக்க விஷ்ணு பரமாத்மா எழுந்தார்.
விஷ்ணு: பரமேஸ்வரப் பெருமான் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். இலங்கையின் வட மாகாணத்தில் நாளுக்கு நாள் விபத்து மரணங்கள் நடக்கின்றன. இதனோடு கயிற்றில் தூக்கிலிட்டு தற்கொலை செய்யும் அபத்தங்களும், மர்மமரணங்களும் நடந்த வண்ணம் உள்ளன. எனினும் இது குறித்து வடக்கு மாகாண நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அண்மையில் மாங்குளத்தை அண்மித்த ஏ9 வீதியில் நடந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகிப் போயினர். இதில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இது தவிர கடன் தொல்லை, தொழில் முறிவு, மனவிரக்தி காரணமாக இளம் பிள்ளைகள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர்.அதிலும் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்யும் ஒரு நடைமுறை என்பது ஆற்றுப்படுத்த யாரும் அற்ற நிலையில் ஏற்படுவதாகும்.
வடக்கு மாகாணத்தில் மூலைக்கு மூலை கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் இப்படியாக நிலைமை இருக்கின்ற போதிலும் தங்கள் பிரச்சினையை எவருடனும் பகிர்ந்து கொள்ளமுடியாத-ஆற்றுப்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் தற்கொலை செய்து விடுதல் என்ற துன்பகரமான முடிவுக்கு இளம் பிள்ளைகள் வந்து விடுகின்றனர்.
தற்கொலை செய்வதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விடுகின்றது என்ற முடிவுக்கு அவர்கள் வருவதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளை இவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்கின்றனர். அவரவர் குடும்பத்திற்கு தீராத்துன்பத்தை தரும் தற்கொலைகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அதேநேரம் மர்மமரணங்களும் இடையிடையே தலை தூக்குகின்றன. இந்த மர்ம மரணங்கள் குறித்து வடபுலத்து மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். யாரோ மர்மமான முறையில் மரணமடைந்தால் நமக்கென்ன? என்ற நினைப்பிருக்குமாயின் நிலைமை மோசமாகும். எங்கு கொலை நடந்தாலும் அது தொடர்பில் கடுமையான விசாரணை செய்யப்பட வேண்டும். ஆனால் வடபுலத்தில், அத்தகைய விசாரணை என்பது பலமானதாக இல்லை என்பதை இவ்விடத்தில் கூறியாக வேண்டும்.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் விஷ்ணு பகவான் தனது அறிக்கையை வாசித்தார்.
விஷ்ணு பரமாத்மா அறிக்கை வாசித்து முடித்த கையோடு சடுதியாக எழுந்த பிரமதேவர், வடபுலத்தில் நடக்கும் விபத்துக்களில் டிப்பர் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துக்களே அதிகம். வட பகுதியில் இப்போது யமதர்மராஜன் டிப்பர் வாகனத்தில்தான் திரிகிறார் என்று நினைக்கும் அளவிற்கு டிப்பர் வாகனங்களால் ஏற்படும் விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன.பிரம்மதேவர் இவ்வாறு கூறியதும் அனைவரும் யமதர்மராஜனை பார்க்கின்றனர்.
EDITORIAL
valampurii.lk
(தொடரும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக