Lost in translation: The words the Argentinian stumbled on were 'caso' (example) and 'cazzo' which means 'f***' in Italian which often trips up those not used to speaking the language
வாடிகனில் உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்யும்போது போப் பிரான்சிஸ் வாய் தவறி கெட்ட வார்த்தையை கூறிவிட்டார். வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் வாராந்திர பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். உக்ரைனுக்காக பிரார்த்திக்கையில் 'ஃஎப்' (F***')வார்த்தையை வாய் தவறி கூறிய போப் பிரான்சிஸ் அப்போது அவர் கூறுகையில், நாம் நமக்காக மட்டும் செல்வம் சேர்க்கக் கூடாது. அதை வைத்து பிறருக்கும் உதவ வேண்டும். அப்படி உதவினால் கடவுளின் ஆசி கிடைக்கும் என்றார்.
அப்போது அவர் வாய் தவறி காஸோ என்று இத்தாலிய மொழியில் கெட்ட வார்த்தையை கூறிவிட்டார்.
காஸோ 'cazzo' என்றால் ஆணுறுப்பு என்று அர்த்தம்.
அதுவே ஆங்கிலத்தில் ஃப் (f****) என்ற எழுத்தில் துவங்கும் நான்கு எழுத்து கெட்ட வார்த்தை ஆகும்.
இதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போப் வாய் தவறி பேசியதை உணர்ந்து சட்டென்று உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்யத் துவங்கினார். போப் வாய் தவறி அந்த வார்த்தையை கூறிய வீடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக