வர்த்தமானி அறிவித்தல்
வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளைத் தடைசெய்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற 424 பேரை இலங்கைக்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவித்தலில் அவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பெயர்ப் பட்டியலில் 30 பேர் வரையிலான பெண்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக