நெடியவன் குழுவின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், புலிகள் இயக்க முக்கியஸ்தருமான நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நெடியவன் குழுவின் தென்னாசிய விவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்பட்டு வந்த இவர் மலேசியாவில் இருந்து கள்ள கடவுச்சீட்டில் ஈரான் ஊடாக பிரிட்டனுக்கு புறப்பட்டபோது தென்னாசிய நாடு ஒன்றில் இருந்து கிடைத்த இரகசிய தகவல் மூலம் பாதுகாப்பு பிரிவினர் இவரை கண்காணித்தனர்.
பாதுகாப்பு பிரிவினரின் அதிரடியை அடுத்து இவர் கள்ள கடவுச்சீட்டில் வந்திருக்கின்றமையை உறுதிப்படுத்திய ஈரானிய அதிகாரிகள் இவரை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து மலேசிய அதிகாரிகளால் இவர் தடுக்கப்பட்டார். இவரைக் கைது செய்கின்றமைக்காக தயார் நிலையில் காத்திருந்த இலங்கை அதிகாரிகளால் இவர் கடந்த மாதம் 06 ஆம் திகதி கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்.
இவரை மிகவும் நுட்பமான முறையில் அதிகாரிகள் கையாளுகின்றனர். இவர் மிகவும் வசதியான வீடு ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளார். விசேட நிபுணர்கள் அடங்கலாக வைத்தியர்களின் சேவை இவருக்கு வழங்கப்படுகின்றது. ஐரோப்பாவில் உள்ள மனைவியுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இவர் படையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க சம்மதித்து உள்ளார். இவரிடம் இருந்து மிக மிக பெறுமதியான தகவல்கள் பல கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இவரின் உதவியுடன் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களை படைத் தரப்பு வேட்டை ஆடும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக