திங்கள், 26 மே, 2014

வடக்கில் தோன்றும் நம்பிக்கை எனும் மங்கிய ஒளிக்கீற்று (1)

'அரசாங்கம் பாதுகாப்புக் காரணங்களுக்காக இரட்டைக் குடியுரிமை திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, அதை நபருக்கு நபர் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும்'

வட மாகாணம் அதுவும் விசேடமாக யாழ்ப்பாணம் போர் முடிந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர், ஒரு பரபரப்பான நகரமாக மாறியுள்ளது, அதேவேளை இங்குள்ள மக்கள் குண்டுத் தாக்குதல் மற்றும் கொலைகள் மற்றும் தங்கள் பிள்ளைகளை இழக்கவேண்டிய நிலை என்பன போன்ற அச்சங்கள் இன்றி சுதந்திரமாக் தங்களால் வாழமுடியும் என்கிற வெளிப்படையான நிம்மதியுடன் உள்ளார்கள். எனினும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் கஷ்டங்கள் எதையும் அனுபவிக்கவில்லை என்று சொல்ல முடியாது. உண்மையில் அவர்கள் அநேக துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்,உண்மையில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான் அவர்களை பெரிய அளவில் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும்.

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை என்பனவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நகரமாக இருந்தாலும் அங்கு பிச்சைக்காரர்கள் இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு காரணயாகும். இங்குள்ள மக்கள் பெருமையானவர்களாகவும் யாரிடமும் உதவித் தொகையாக எதையும் பெற மறுப்பவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எல்லோரும் விரும்பும் ஒரு வாய்ப்பாக எதிர்பார்ப்பது, விவசாயமோ, கூலித் தொழிலோ அல்லது எழுதுவினைஞர் தொழிலோ எதுவாயினும் ஒரு வேலையில் ஈடுபடுவதைத்தான்.

வடமாகாண மக்களால் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப பட்டுள்ள ரி.என்.ஏ, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அலட்சியம் செய்தோ அல்லது அதைப் பொருட்படுத்தாமலோ இருப்பதாகவும், மாறாக அவர்கள் அரசாங்கத்தின் குறைபாடுகள் மற்றும் இராணுவ பிரசன்னம் என்பவவைகளில்தான் பெரிதும் கவனம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆயினும் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சநதிரனின் கூற்றுப்படி, மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதை இராணுவத் தலையீடுகள் தடைசெய்கின்றனவாம். அவர் சண்டே லீடருக்கு தெரிவித்தது, வடக்கில் தாங்கள் அதிகாரத்தில் இருந்தபோதிலும், மக்களின் நலனுக்கான எந்த ஒரு ஆக்கபூர்வமான திட்டத்தையும் அரசாங்கம் அவர்கள்மீது திணித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நடைமுறைப்படுத்த அவர்களால் இயலவில்லை என்று.

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களது புனர்வாழ்வு மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் (சி.எஸ்.டி) பங்களிப்பு

யுத்தம் முடிவடைந்த பின்னர் கிட்டத்தட்ட 12,000 எல்.ரீ.ரீ.ஈஅங்கத்தவர்கள் பாதுகாப்பு படையினரிடத்தில் சரணடைந்தார்கள். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் இந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப் பட்டார்கள். இந்த முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு புனர்வாழ்வுக்கு மேலதிகமாக, சிவில் பாதுகாப்பு திணைக்களம் (சி.எஸ்.டி) புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களில் 731 க்கும் அதிகமானவர்களை அதனது திட்டங்களில் பிரதானமாக கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் வேலை செய்வதற்கு நியமனம் வழங்கியது.

யுத்த சமயத்தின்போது இநத சி.எஸ்.டி யின் அலுவலர்கள் பாதுகாப்பு படையினருக்கு எல்லைக் கிராமங்களை பாதுகாக்க உதவி செய்து மிகப் பெரிய சேவையை புரிந்துள்ளார்கள், இன்று அதேபோல இநத நாட்டின் விவசாயத் துறைக்கு புத்துயிரளிக்கும் பிரமாண்டமான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சி.எஸ்.டியின் ஆணையாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இதுவரை சி.எஸ்.டி, அவர்களால் நடத்தப்படும் 21 வகையான பல்வேறு திட்டங்களில் 4,704 பேர்களை நியமி;த்துள்ளது. இந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 3,.397 பேர்கள் தற்சமயம் இந்த திட்டங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுவரும் அதே வேளையில், 2,406 பேர்கள் விவசாயம், கைவினைப் பொருள் தயாரித்தல், மற்றும் செங்கல் தயாரிப்பு என்பனவற்றில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள்.

இதற்கு மேலதிகமாக சி.எஸ்.டி, கிராமங்களின் கல்வித் துறையிலும் கணிசமானளவு பங்களிப்பை நல்கி வருகிறது. சி.எஸ்.டி இதில் தலையிடு செய்வதற்கு முன்பு பெரும்பாலான பகுதிகளில் பிரதான பாடசாலைகளுக்கான வழிகள் இல்லாததால் இந்தக் கிராமங்களில் உள்ள பிள்ளைகள் ஆரம்பக் கல்வியுடனேயே தங்கள் படிப்பை கைவிடவேண்டிய நிலையில் இருந்தார்கள். எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் சி.எஸ்.டி யின் கீழ் சுமார் 274 ஆரம்பப் பாடசாலைகள் 6,519 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பெரும்பாலும் எல்லைப்புற கிராமங்களில் இலவச உணவு விநியோகத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன.

யுத்தத்தின்போது சி.எஸ்.டி ஆட்கள் இந்த சிறுவர்களுக்கு மிகவும் அவசிய தேவையான பாதுகாப்பை வழங்கி வந்தார்கள், அந்தச் சிறுவர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் தாக்குதல் மற்றும் ஆட்கடத்தலுக்கு உள்ளாவதை தடுக்கும் விதமாக அவர்களது பாடசாலைகளுக்கு அடர்ந்த காட்டுப் பகுதியூடாக பாதுகாப்பாக அழைத்துச் சென்று திரும்பவும் வீட்டில் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

அந்த அர்ப்பணிப்பள்ள ஆசிரியர்களும் தங்கள் பாடசாலை வேலைகளில் ஒத்துழைக்க இயலாத மாணவர்களுக்கு மேலதிக கற்பித்தல் வகுப்புகளை முற்றிலும் இலவசமாக தன்னார்வ அடிப்படையில் நடத்தி உதவினார்கள். கிட்டத்தட்ட 38 ஆசிரியர்கள் தங்களை முற்றிலும் அர்ப்பணித்து இந்த சிறுவர்களின் நன்மைக்காக அவர்களது கல்வித் தரத்தை உயர்த்தவதற்காக 38 நிலையங்களில் தரம் 1 முதல் 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கு பாடசாலை நேரத்துக்குப் பிறகு மேலதிக வகுப்புகளை நடத்தி உதவினார்கள். சி.எஸ்.டி யின் பரப்பெல்லையின் கீழ் மொத்தம் 1270 ஆசிரியர்கள் தற்போது தங்கள் சேவையினை வழங்கி வருகிறார்கள்.

தமிழர்களை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்தல்

வட மாகாணத்தில் தமிழ் இளைஞர்களை விசேடமாக இளம் பெண்களை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதை ரி.என்.ஏ எதிர்த்து வருகிறது. இந்த இளம் பெண்கள் இராணுவத்தில் சேவையாற்றுவதற்காக பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் மற்றும் அவர்கள் சுரண்டலுக்கு ஆளாவதாகவும் ரி.என்.ஏ குற்றம் சாட்டுகிறது.

எனினும் இராணுவத்தில் சேர்ந்த பல இளம் பெண்கள் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது, மாதாந்தம் அவர்கள் 35,000 ரூபாவுக்கும் அதிகமாக சம்பளம் பெறுகிறார்கள்,மற்றும் அவர்களின் வீட்டிலிருந்தே வேலைக்கு சமூகமளிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இராணுவம் கிளிநொச்சி,முல்லைத்தீவு, திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 120 பெண்களை ஆட்சேர்ப்பு செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பெண்கள் தங்கள் அடிப்படை பயிற்சியை ஜூன் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க உள்ளார்கள்.

சண்டே லீடர், இராணுவத்தில் இணைந்திருந்த பெண்களிடம் அவர்கள் இப்படியான ஒரு முடிவை எடுத்ததுக்கும் மற்றும் அதன் விளைவாக அவர்கள் சமூகத்திலிருந்து எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் பேசியது. 18 ம் அகவைக்குள் இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கும் கலைச்செல்வம லக்சுமி, ஏப்ரல் 17ம் திகதியன்றுதான் தனது கிராமாசிகள் மற்றும் சில உறவினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்,இராணுவத்தில் இணைந்து கொண்டார், அவரை அதைரியப் படுத்தவதற்கு அவர்கள் பெரும் முயற்சி செய்தார்கள். 'இளம் பெண்களுக்கு இராணுவம் பாதுகாப்பான இடமல்ல. மற்றும் நான் இராணுவத்தில் இணைவதன் காரணமாக ஒருநாள் என்னை திருமணம் செய்தற்கு ஒரு கணவரை என்னால் தேட முடியாது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பெண்கள் இராணுவத்தில் இணைவதற்கு எங்களது சமூகத்தில் ஒரு சமூகக் கட்;டுப்பாடு உள்ளது,மற்றும் இதனுடன் சேர்ந்து பெண்கள் பாலியல் பலாத்தகாரத்துக்கு உள்ளாக்கப் படுவார்கள் என்று பல்வேறு வதந்திகளும் பரவி, பல பெண்களை இராணுவத்தில் சேரவிடாமல் பின்னடையச் செய்தது. எனினும் எனது பெற்றோர்கள் இந்தக் கதைகளை நம்ப விரும்பவில்லை, மற்றும் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் எனது குடும்பத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் நான் இராணுவத்தில் சேருவதற்கு தீர்மானித்தேன்.நான்தான் குடும்பத்தில் மூத்தவள், எனக்கு மூன்று இளைய சகோதரிகளும் ஒரு இளைய சகோதரனும் உள்ளனர். நோய்வாய்ப் பட்டுள்ள எனது பெற்றோர்கள் இருவருமே வேலை செய்ய இயலாத நிலையில் உள்ளனர், அதனால் உண்மையில் வாழ்க்கையை கொண்டு நடத்த நாங்கள் மிகவும் சிரமப் படுகிறோம்.

மேலும் நான் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கலைப் பிரிவின் முதலாம் ஆண்டு மாணவியும்கூட, வேலை செய்து கொண்டே படிப்பை தொடரவும் இந்த வேலை எனக்கு வாய்ப்பை நல்குகிறது. நான் கிட்டத்தட்;ட 35,000 ரூபாவினை சம்பளமாகப் பெறுவேன் அது எனது குடும்பத்துக்கு மிகப்பெரிய உதவித் தொகையாகும், மற்றும் நிச்சயமாக இது எனது குடும்பத்துக்கு உணவூட்டும்.

கே.ஏ.சர்மினி பெரேரா

19 வயதான சர்மினி மூன்று பிள்ளைளில் மூத்தவள், அவளது தகப்பன் ஒரு சிங்களவர் மற்றும் அவளது தாய் நாவற்குழியை சேர்ந்த தமிழ்ப்பெண். எனினும் அவளது தந்தை அவர்களை கைவிட்டுச் சென்று இப்போது தனக்கென சொந்தமாக வேறு குடும்பத்தை கொண்டிருக்கிறார், அவளையும் அவளது சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்குவதற்கு அவளது தாய் சொல்லவொண்ணா துன்பங்களை அனுபவித்துள்ளார்.'ஒரு ஒற்றைப் பெற்றோராக எனது தாய் எங்களை வளர்ப்பதற்கும், உணவு, உடை மற்றும் கல்வியறிவு ஊட்டுவதற்கும் எண்ணற்ற சிரமங்களை எதிர்கொண்டார். இராணுவம் பெண்களை ஆட்சேர்ப்பு செய்கிறது என்கிற செய்தியை கேள்விப்பட்டதுமே அதில் சேருவதற்கு நான் முடிவு செய்தேன். இந்தப் பகுதியில் ஆட்களுக்கு அதுவும் விசேடமாகப் பெண்களுக்கு வேலை தேடுவது மிகப் பெரிய பிரச்சினை, வேலை வாய்ப்புகள் மிக மிக அரிதாகவே கிடைக்கின்றன' என்று கூறினாள்

சர்மினி.

அயலவர்கள் மற்றும் உறவினர்களின் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இராணுவ தன்னார்வ படையில் சேருவதற்கு அவளின் தாயாரின் ஆசீhவாதம் அவளுக்கு கிட்டியது.'எனக்கு கிடைக்கப் போகும் சம்பளம் நிச்சயமாக எனது குடும்பத்துக்கு பேருதவியாக இருக்கப் போகிறது. அத்துடன் எனது வீட்டிலிருந்தே வேலைக்குப் போகும் வாய்ப்பும் எனக்கு கிட்டியுள்ளது. அதற்கு மேலதிகமாக எனக்கு மட்டும் அல்லாமல் எனது மொத்த குடும்பத்துக்கம் மருத்துவ நன்மைகள் கிடைக்க உள்ளன, இது மிகப் பெரிய உதவி' என்றாள் அவள்.

அருளம்பலம் நிலந்தினி


கீரிமலையை சேர்ந்த 25 வயதான ஓய்வு பெற்ற இராணுவ சாhஜன்ட்டின் மகளான நிலந்தினி என்ற இந்தப் பெண் 'எனது தந்தை மட்டுமல்லாது, எனது இளைய சகோதரியும் கூட என்னுடன் இராணுவத்தில் இணைந்து உள்ளாள் மற்றும் அவளும் நன்றாகவே பணியாற்றி வருகிறாள். இராணுவத்தில் இணைந்துள்ள பெண்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு துன்புறுத்தப் படுவதாக பல கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. இளம் பெண்கள் இராணுவத்தில் பணியாற்றுவதற்கு முற்றிலும் எதிரான எண்ணம் கொண்ட பழங்காலப் பாணி ஆட்களால் முற்றிலும் இட்டுக்கட்டிய கட்டுக்கதை இது' என்று சொன்னாள்.

சண்டே லீடருக்கு நிலந்தினி மேலும் , தாங்கள் சிங்கள ஆண் இராணுவ வீரர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் மற்றும் எந்த வழியிலும் அவர்கள் தங்களை தரக்குறைவாக நடத்தவோ அல்லது பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் செய்ததோ இல்லை என்றும் சொன்னாள். 'அவர்கள் எங்களை தங்கள் சகோதரிகளைப் போலவே நடத்துகிறார்கள்,மற்றும் அவர்கள் எங்கள் மீது மிகவும் அன்பாக உள்ளதுடன் அதிகாரிகள் மற்றும் ஏனைய பெண் வீராங்கனைகளும் நாங்கள் மிகவும் சௌகரியமாக இருப்பதற்கு ஏற்ற உதவிகளைச் செய்துள்ளனர்' என்றாள் .

இந்தப்பெண்கள் அனைவருமே இந்த மாதக் கடைசியில் தங்கள் முதல்மாத சம்பளத்தை பெறுவதற்கு, எதிர்காலத்தைப் பற்றிய நிறைந்த கனவுகளோடு ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

- யாழ்ப்பாணத்திலிருந்து -- கமெலியா நாதானியேல்

தொடரும்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல