திங்கள், 28 ஜூலை, 2014

மனைவி கொடுமையால் தற்கொலைக்கு அனுமதி கேட்டு மனுக் கொடுத்த கணவன்

மனை­வியின் கொடுமை தாங்க முடி­ய­வில்லை என்றும், இதனால் தற்­கொலை செய்து கொள்ள அனு­ம­திக்க வேண்டும் என்றும் விவ­சாயி ஒருவர் மாவட்ட ஆட்­சி­யா­ள­ரிடம் மனு கொடுத்த சம்­பவம் கர்­நா­டகா மாநி­லத்தில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.



உயிர் பிழைக்கவைக்க முடி­யாத நிலையில் உள்­ள­வர்­களை கருணை கொலை செய்­வ­தற்கு அர­சிடம் அனு­மதி கேட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த விவ­சாயி ஒருவர், மனை­வியின் கொடுமை தாங்க முடி­யா­ததால் கருணை அடிப்­ப­டையில் தற்­கொலை செய்து கொள்­வ­தற்கு அனு­மதி கேட்டு மாவட்ட ஆட்­சி­யா­ள­ரிடம் மனு கொடுத்­துள்ளார்.

சிக்­ம­களூர் மாவட்டம், கெரே­குச்சி கிரா­மத்தை சேர்ந்த லட்­சு­மேஷா (வயது 28) என்ற விவ­சாயி, மாவட்ட ஆட்­சி­யா­ளரை சந்­தித்து கொடுத்­துள்ள மனுவில், "நான் சிக்­ம­களூர் மாவட்டம் தரி­கெரே தாலுகா கெரே­குச்­சியை சேர்ந்­தவன். நான் அந்த பகு­தியில் விவ­சாயம் செய்து வரு­கிறேன். கடந்த 2 ஆண்­டு­க­ளுக்கு முன்பு நான், தொட்­ட­குந்தூர் கிரா­மத்தை சேர்ந்த ராமையா என்­ப­வரின் மகள் பவித்­ராவை வர­தட்­சணை வாங்­காமல் திரு­மணம் செய்து கொண்டேன்.

திரு­ம­ணத்­துக்கு முன்பு எனது மனைவி பவித்ரா ஜார்க்கண்ட் மாநி­லத்தில் தாதி­யாக பணி­யாற்றி வந்தார். திரு­மணம் முடிந்த பிறகு நான் ஜார்க்கண்ட் செல்ல வேண்டாம் என்று கூறி­விட்டேன். மேலும் பவித்ரா தாதிக்கு படித்­த­போது அவர்கள் வீட்டில் ஏற்­பட்ட கடனை நான் தான் அடைத்தேன்.

பவித்ரா ஆடம்­ப­ர­மாக வாழ ஆசைப்­பட்டார். இதனால் நான், பவித்ரா கேட்­டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். மேலும் பவித்ரா என்­னிடம் செல்­லாமல் எனது பணத்தை எடுத்து அவ­ரது குடும்­பத்­தி­ன­ருடன் ஆடம்­ப­ர­மாக செல­வ­ழித்து வந்தார். இதனை நான் கண்­டித்தேன். இதனால் எங்­க­ளுக்குள் கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

பவித்ரா என்­னிடம் அடிக்­கடி பணம் கேட்டு கொடு­மைப்­ப­டுத்­து­கிறார். நான் பணம் கொடுக்க மறுத்தால், பவித்ரா தனது சகோ­தரன் ஹரீசை வைத்து மிரட்­டு­கிறார். இதனால் நான் பவித்­ரா­வுக்கு பணம் கொடுப்­பதை தவிர்த்து வந்தேன். இதனால் பவித்ரா அந்த பகு­தியில் உள்ள மகளிர் அமைப்­பி­ன­ருடன் சேர்ந்து கொண்டு, நான் அவரை வர­தட்­சணை கேட்டு மிரட்­டு­கிறேன் என்று என்­னிடம் விவா­க­ரத்து கேட்டு தரி­கெரே நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் அவர் என்­னிடம் ஜீவ­னாம்­ச­மாக 20 இலட்சம் ரூபா கேட்­கிறார்.

நான் விவா­க­ரத்து கொடுக்க மறுத்­ததால் அவ­ரது தாய் பரு­வ­தம்மா, சகோ­தரன் ஹரீஷ் ஆகியோர் விவா­க­ரத்து கொடுக்கும் படி மிரட்­டு­கி­றார்கள். இந்த கொடு­மையால் என்னால் நிம்­ம­தி­யாக வாழ முடி­ய­வில்லை. இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன். இதனால் கருணை அடிப்படையில் தற்கொலை செய்ய அரசு அனுமதி தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல