மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும், இதனால் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் பிழைக்கவைக்க முடியாத நிலையில் உள்ளவர்களை கருணை கொலை செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மனைவியின் கொடுமை தாங்க முடியாததால் கருணை அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
சிக்மகளூர் மாவட்டம், கெரேகுச்சி கிராமத்தை சேர்ந்த லட்சுமேஷா (வயது 28) என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில், "நான் சிக்மகளூர் மாவட்டம் தரிகெரே தாலுகா கெரேகுச்சியை சேர்ந்தவன். நான் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான், தொட்டகுந்தூர் கிராமத்தை சேர்ந்த ராமையா என்பவரின் மகள் பவித்ராவை வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்துக்கு முன்பு எனது மனைவி பவித்ரா ஜார்க்கண்ட் மாநிலத்தில் தாதியாக பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த பிறகு நான் ஜார்க்கண்ட் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டேன். மேலும் பவித்ரா தாதிக்கு படித்தபோது அவர்கள் வீட்டில் ஏற்பட்ட கடனை நான் தான் அடைத்தேன்.
பவித்ரா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார். இதனால் நான், பவித்ரா கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். மேலும் பவித்ரா என்னிடம் செல்லாமல் எனது பணத்தை எடுத்து அவரது குடும்பத்தினருடன் ஆடம்பரமாக செலவழித்து வந்தார். இதனை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பவித்ரா என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு கொடுமைப்படுத்துகிறார். நான் பணம் கொடுக்க மறுத்தால், பவித்ரா தனது சகோதரன் ஹரீசை வைத்து மிரட்டுகிறார். இதனால் நான் பவித்ராவுக்கு பணம் கொடுப்பதை தவிர்த்து வந்தேன். இதனால் பவித்ரா அந்த பகுதியில் உள்ள மகளிர் அமைப்பினருடன் சேர்ந்து கொண்டு, நான் அவரை வரதட்சணை கேட்டு மிரட்டுகிறேன் என்று என்னிடம் விவாகரத்து கேட்டு தரிகெரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் அவர் என்னிடம் ஜீவனாம்சமாக 20 இலட்சம் ரூபா கேட்கிறார்.
நான் விவாகரத்து கொடுக்க மறுத்ததால் அவரது தாய் பருவதம்மா, சகோதரன் ஹரீஷ் ஆகியோர் விவாகரத்து கொடுக்கும் படி மிரட்டுகிறார்கள். இந்த கொடுமையால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறேன். இதனால் கருணை அடிப்படையில் தற்கொலை செய்ய அரசு அனுமதி தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக