என்னது திருட்டு பொருட்களை விக்கறதுக்கு ஒரு பஜாரான்னு கேக்குறீங்களா?....எல்லாம் நம்ம நாட்டுலதான் இருக்கு மக்கா!!!...
சோர் பஜார்
தெற்கு மும்பையின் பேண்டி பஜார் அருகே இந்த சோர் பஜார் அமைந்துள்ளது. சோர் என்றால் இந்தி மொழியில் 'திருடன்' என்று அர்த்தம். மும்பையில் உங்களுடைய பொருள் காணாமல் போனால் அதை நீங்கள் சோர் பஜாரில் கண்டுபிடிக்க முடியும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் 'இரைச்சலான சந்தை' (Shor Market) என்ற பொருளிலேயே முன்பு இது அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்கு திருட்டுப் பொருட்கள் கிடைக்கும் என்று நம்பப்பட்டாலும், செகண்ட் ஹேன்ட் மார்கெட் என்றே சோர் பஜார் பரவலாக அறியப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக