திங்கள், 28 ஜூலை, 2014

கிழக்கில் நிரந்­தர வரு­மா­ன­மின்றி அல்­ல­லுறும் விறகுத் தொழி­லா­ளர்கள்

பாரம்­ப­ரி­ய­மு­றை­யி­லான விறகுத் தொழில் இற்­றை­வ­ரைக்கும் தொடர்ந்தே செல்­கி­றது. விறகுத் தொழி­லுக்­கென ஒரு சமூகம் இருந்து கொண்டே வரு­கி­றது. இவர்­களின் பிர­தான தொழில் விறகு வெட்டி விற்­பனை செய்­வ­தாகும். வருடம் முழு­வதும் காடு­களில் தங்­க­ளது காலங்­களை கழித்து விறகு அதே போன்று குடிசை வீட­மைப்­ப­தற்­கான தடிகள். வேலிகள் அமைப்­ப­தற்­கான தடி­க­ளையும் வெட்டி ஏனை­ய­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­வ­தாகும். கிழக்கு மாகா­ணத்தை பொறுத்­த­வரை அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் விறகு வெட்டி விற்­பனை செய்வோர் குறிப்­பி­டத்­தக்க அளவு இருந்­து­வ­ரு­கின்­றனர். விறகு வெட்டி விற்­பனை செய்­வதன் மூலம் கிடைக்கும் மிகக் குறைந்­த­ள­வி­லான வரு­மா­னத்தைக் கொண்டு தங்­க­ளது வாழ்க்­கையை நடாத்­து­வ­தற்கு மிகச் சிரமப்பட்­ட­வர்­க­ளாக வாழ்ந்து வரு­கி­றார்கள்.



விறகு வெட்­டு­வ­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. இரவு பகல் பாராது காடு­களில் உண­வின்றி தங்­க­ளது ஜீவ­னோ­பா­யத்­திற்­காக மிகச் சிர­மப்­பட்டு இத் தொழிலை மேற்கொண்டு வரு­கின்­றார்கள். இத் தொழிலில் ஈடு­படும் குடும்­பங்­களின் நிலை மிக தாழ்ந்த மட்­டத்தில் இருப்­ப­தனை நாங்கள் அறிவோம். நாளாந்த உணவுத் தேவைக்கே போது­மா­ன­தாக இல்­லாத போது ஏனைய பௌதீக வளங்­களை எவ்­வாறு நிவர்த்தி செய்து கொள்­வது. அவை சாத்­தி­ய­மான ஒன்­றாக எப்­போதும் இருந்­தி­ருக்க வில்லை. இவர்­களின் குடும்­பத்தை நடு நிலை­யான ஒரு நிைல­மைக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு இது­வரை ஒரு திட்­டமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான ஒரு திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் இந்தக் குடும்­பங்­களில் வாழும் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரா­வது அவர்­களின் ஜீவ­னோ­பா­யத்தை மாற்று வழி முறை­களின் மூலம் மேற்­கொள்­வ­தற்கு ஒரு பாரிய உத­வி­யாக இருக்கும்.

சாதா­ர­ண­மாக தங்­க­ளிடம் உள்ள பழைய துவிச்­சக்­கர வண்­டியை கொண்டு காடு­களில் வெட்­டப்­படும் விற­கு­க­ளையும், தடி­களையும் தூரப் பிர­தே­சங்­க­ளுக்கு கொண்டு சென்று தேவை­யா­ன­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­து­வ­ரு­கின்­றனர். தாங்கள் செல­விடும் நேரம், மனித வலு என்­ப­ன­வற்­றிற்­கு­ரிய பணம் விற்­ப­னையின் மூலம் கிடைப்­ப­தில்லை என விறகு வெட்டி விற்கும் தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். ஆரம்ப காலம் முதல் விறகு வெட்டி விற்கும் தொழி­லுக்கும், தொழி­லா­ளர்­க­ளுக்கும் நல்ல கிராக்­கியும், வரு­மா­னமும் இருந்­தது. அவ்­வாறு இருந்த போதிலும் இன்று நவீன வளர்ச்சி கண்ட யுகத்தில் விறகின் தேவை வெகு­வாக குறைந்­துள்­ளது.

இன்று பெரும்­பா­லானோர் மின்­சா­ரத்தின் மூலமும், வாயு அடுப்­புகள் மூலமும் தங்­க­ளது அனைத்து காரி­யங்­க­ளையும் நிறை­வேற்­றி­வ­ரு­கி­றார்கள். இருந்­த­ போ­திலும் நூற்­றுக்கு 5 தொடக்கம் 10 வீதம் வரைதான் விறகின் பாவ­னையும், தடி­களின் பாவ­னையும் இப்­போது இருந்­து­வ­ரு­கி­றது. இதனால் தாங்கள் மேற்­படி தொழிலை நம்பி வாழ முடி­யாத ஒரு சூழ் நிலைக்கும் தள்­ளப்­பட்­டுள்­ளனர். ஏனென்றால ் விறகின் தேவை நாளுக்கு நாள் குறைந்தே செல்­கி­றது. இப்­ப­டி­யா­ன­தொரு கால­கட்­டத்தில் விறகுத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கையும், அவர்­க­ளது ஜீவ­னோ­பா­யமும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

தற்­போது விறகுத் தொழிலின் மூலம் ஒரு நாளைக்கு 500 ரூபா முதல் 1000 ரூபா­விற்கு இடையில் பெறு­கின்­றனர். இவை மாதம் முழு­வ­து­மாக கிடைப்­ப­தில்லை. மாதத்தில் ஒரு நாளும் கிடைக்­கலாம், இரு­நாளும் கிடைக்­கலாம் அல்­லது முழு­மை­யாக கிடைக்­கா­மலும் போகலாம். நிலை­யான ஒரு வரு­மானம் இவர்­க­ளது தொழிலின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வா­றான நிலையே காணப்­ப­டு­கி­றது.

இதனால் இவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை தொடர்ந்து முன்­னெ­டுப்­ப­தற்கு என்ன செய்ய முடியும்? இவர்­களின் சந்­த­தி­யி­ன­ருக்கு எவ்­வ­கை­யான வழி­காட்­டல்­களை மேற்கொள்­ள ­மு­டியும்? என சிந்­திக்க வேண்­டி­யது எமது அனை­வ­ரினதும் கடமை. இவ்­வா­றான குடும்­பங்­களை ஒன்­றி­ணைத்து விறகு தொழிலை விட்டு எவ்­வ­கை­யான தொழிலை இவர்கள் மத்­தியில் புகுத்­தலாம், மிக இல­கு­வான முறையில் வரு­மா­னத்தை பெறு­வ­தற்கு சிறந்த தொழில் என்ன? என்­ப­தனை ஆராய்ந்து இவர்­களின் வாழ்வில் ஒளி­யேற்ற வேண்டும். அரச அல்­லது அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் மூல­மான திட்­டங்­களோ அல்­லது பயிற்­சி­களோ அல்­லது மானிய உத­வி­க­ளோதான் இவர்­க­ளுக்கு பொருத்­த­மான ஒன்­றாகும். வேறு இல­கு­வான சிறு தொழில் முயற்­சி­களின் மூலம்தான் இவை ஓர­ளவு சாத்­தி­யப்­ப­டக்­கூ­டிய நிலை காணப்­ப­டு­கி­றது. மந்­த­மான அல்­லது வரு­மானம் கிடைக்­காத நிைல­மை­களில் அவர்­களின் பிள்­ளைகள் கல்வி கற்க செல்­வ­தில்லை, அதேபோன்று குடும்பத் துணை­களும் விறகுத் தொழிலுக்கே செல்லும் நிலை யும் காணப்படுகிறது.

இக் குடும்­பங்­களின் வளர்ந்­து­வரும் பிள்­ளை­க­ளுக்கு கல்வி அறிவும், வழி­காட்­டலும் மிக மிக அவ­சி­ய­மாகும். அதே போன்று குறைந்த வரு­மானம் கிடைக்கும் விறகுத் தொழிலை மாற்றி நிரந்­த­ர­மாக, குடும்­பங்­களின் ஜீவ­னோ­பா­யத்தை ஓட்டிச் செல்­லக்­கூ­டிய சிறு தொழில் முயற்சி ஒன்றை ஆரம்­பிக்க துறை சார்ந்­த­வர்கள் உதவி புரி­ய­ வேண்டும் என்­பது எமதும், விறகுத் தொழிலை செய்­ப­வர்­க­ளி­னதும் எதிர்பார்ப்பாகும்.

–எம்.எல்.சரிப்டீன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல