திங்கள், 28 ஜூலை, 2014

உற­வுக்குள் உரு­வா­கிற பிரச்­சி­னை­க­ளுக்கு ...

இந்த நூற்­றாண்டின் மிகப்­பெ­ரிய கொள்ளை நோய் என்­னவாம் தெரி­யுமா? ஸ்ட்ரெஸ் எனப்­ப­டு­கிற மன அழுத்தம் என்­கி­றது ஓர் ஆய்வு. சின்னக் குழந்­தைகள் முதல் சீனியர் சிட்­டிசன் வரை எல்­லோ­ருக்கும் மன அழுத்தம். வீட்டில் பிரச்சினை என்றால் அது வேலை­யி­டத்­திலும் பிர­தி­ப­லிக்­கி­றது. வேலை­யி­டத்துப் பிரச்சி­னை­களை வீட்­டுக்­குள்ளும் சுமந்து கொண்டு திரி­கிறோம். எல்­லா­வற்­றுக்கும் காரணம் மன அழுத்தம்!



கற்­ப­னையைத் தாண்­டிய எதிர்­பார்ப்­பு­களே மன அழுத்­தத்­துக்­கான அடிப்­படை. நம்மில் பல­ருக்கும் எல்லாம் வேண்டும். அதிலும் உடனே வேண்டும். அது சாத்­தி­யமா, இல்­லையா என்­பதைக் கடந்த அந்த எதிர்­பார்ப்­புதான் மன அழுத்­தத்­துக்­கான முதல் விதை. கண­வன்-­ – ம­னைவி உற­வுக்குள் உரு­வா­கிற பல பிரச்சி­னை­க­ளுக்கும் இந்த மன அழுத்­தமே காரணம்!

மன அழுத்தம் எப்­படி உண்­டா­கி­றது?

நமது மூளையில் கவ­லைகள் 60 ஆயிரம் சின்னச் சின்ன குறும்­ப­டங்­களைப் போல எந்­நே­ரமும் ஓடிக்­கொண்டே இருக்­குமாம். நம் வாழ்க்­கையில் நடந்த பல பழைய அனு­ப­வங்­களும் சின்னச் சின்ன குறுந்­த­க­டு­களைப் போல மூளையில் சேக­ரிக்­கப்­பட்­டி­ருக்கும். அவற்றில் நல்­லதும் இருக்கும்... கெட்­டதும் இருக்கும். ஆனால், மனித இயல்பு எப்­ப­டி­யா­னது தெரி­யுமா? வாழ்க்­கையில் நடந்த மோச­மான சம்­ப­வங்­க­ளையும் சண்­டை­க­ளை­யுமே அடிக்­கடி மீட்டிப்பார்க்க செய்து ஓட­விட்டுப் பார்க்கும்.

உதா­ர­ணத்­துக்கு... எங்­கேயோ ஒரு விபத்து நடக்­கி­றது என வைத்துக் கொள்வோம். உடனே நமது மூளை­யா­னது நம் நினைவில் பதிந்த, எப்­போதோ நடந்த விபத்­து­களைப் பற்­றிய நினை­வு­களை அசை­போடும். அது நம் நிம்­ம­தியைக் கெடுத்து, பயத்­தையும் பதற்­றத்­தையும் மேலும் அதி­க­ரிக்­கவே செய்யும்.

திரு­மண உற­விலும் இதுதான் நிகழ்­கி­றது. கண­வன்-­ – ம­னை­விக்குள் சண்டை வரும் போதும், வாக்­கு­வா­தங்கள் முற்றும் போதும், கடந்த காலச் சண்­டை­களைக் கிள­று­வார்கள். எப்­போதோ நடந்த சண்­டையின் போது இரு­வரும் ஒருவர் மீது ஒருவர் வாரித் தூற்­றிய வார்த்­தை­களை நினை­வு­ப­டுத்தி, நிகழ்­காலச் சண்­டையின் தீவி­ரத்தை இன்னும் மோச­மாக்கிக் கொள்­வார்கள். காத­லித்த காலத்­திலோ, திரு­ம­ண­மான புதி­திலோ அவனோ, அவளோ இல்­லாமல் வாழவே முடி­யாது எனத் தவித்­தது மாறி, இன்று அவ­னுடன் அல்­லது அவ­ளுடன் வாழவே முடி­யாது என்­கிற நிலை வரை அது தள்ளும். எல்­லா­வற்­றுக்கும் காரணம் திரும்பத் திரும்ப மீட்டிப் பார்க்க செய்து ஓட்டிப் பார்க்கப்

படு­கிற எதிர்­மறை சிந்­த­னைகள்!

மூளை என்­கிற பிளே­யரில் எந்த மாதி­ரி­யான சி.டிக்­களை ஓட­விட வேண்டும் என்­கிற தெரிவு நம்­மி­டம்தான் இருக்­கி­றது.

எத்­த­னையோ மகிழ்ச்­சி­யான நிகழ்­வுகள் இருக்­கும்­போது, அவற்றைத் தவிர்த்து சோகங்­க­ளையே ஏன் சுழலச் செய்ய வேண்டும்? எதிர்மாறான சி.டிக்­களை மீட்டிப்பார்க்க செய்து ஓட்டிப் பார்க்­கிற முயற்சி அத்­தனை எளி­தா­ன­தல்­லதான். ஆனாலும், பழ­கி­விட்டால், அதன் பிர­தி­ப­லிப்பை உறவின் அந்நியோன்­யத்தில் உண­ரலாம்.

கண­வன்-­ – ம­னைவி உற­வுக்குள் பிரச்சி­னைகள் எழு­வ­தற்­கான இன்­னொரு முக்­கிய காரணம்

இரு­வரின் எண்­ணங்­க­ளிலும் ஏற்­ப­டு­கிற பிறழ்வு. அடுத்­த­வரைப் பற்­றிய... உல­கத்தைப் பற்­றிய... இரு­வரின் தவ­றான, எதிர்­ம­றை­யான எண்­ணங்கள். தன்னைச் சுற்றி நடக்­கிற எல்லாம் தனக்குச் சாத­க­மா­கவோ, தனக்குப் பிடித்த மாதி­ரியோ இருந்தால் எல்லாம் சரி­யாக நடப்­ப­தாக நினைப்­பார்கள். அப்­படி நடக்­காத போது விமர்­சனம் செய்­வார்கள். மற்­ற­வரைக் குறை சொல்­வார்கள்.

சின்ன விட­யங்­களை ஊதிப் பெரி­தாக்­கு­வது.

ஒரு பிரச்சினை வந்தால், உடனே ‘நான் அதிர்ஷ்டம் கெட்­டவள்... எனக்கு எல்­லாமே தவ­றா­கத்தான் நடக்கும்’ எனப் புலம்பித் தீர்ப்­பது. அல்­லது ‘நீ என்­னிக்­குத்தான் ஒழுங்கா சமைச்­சி­ருக்கே...’ ‘ஒரு வேலை­யையும் உன்­னால ஒழுங்கா செய்ய முடி­யாது...’, ‘நீ எப்­போ­துமே இப்­ப­டித்தான்...’ என்று கிடைக்­கிற சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் துணையை மட்டம் தட்­டியே பேசு­வது...

- துணை செய்­கிற எதிர்­ம­றையான விட­யங்­களைக் கணக்கில் எடுத்துக் கொள்­ளாமல், அவை­யெல்லாம் யார் வேண்­டு­மா­னாலும் செய்­யக்­கூ­டி­யவை எனப் பேசு­வது. ரயில்வே பாதை அரு­கிலும், விமான தளத்­துக்குப் பக்­கத்­திலும் குடி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு, 24 மணி நேரமும் ரயிலின் அல­றலும், விமா­னத்தின் இரைச்­சலும் ஒலித்­துக்­கொண்­டேதான் இருக்கும். புதி­தாக அங்கே செல்­கிற ஒரு­வ­ருக்கு 5 நிமி­டங்கள் அந்தச் சத்­தங்கள் இருக்க விடாது. துணை­யிடம் காணப்­ப­டு­கிற நல்ல குணங்­களும் ஈர்ப்­பு­க­ளும்­கூட, ரயில், விமான இரைச்சல் சத்­தங்­க­ளுக்கு மரத்துப் போன காது­களைப் போலவே ஒரு கட்­டத்தில் மரத்துப் போய்­விடும்.

- துணையைப் பற்றி, அவ­ரது நடத்­தையைப் பற்றி எந்த ஆதா­ரங்­களும் இல்­லா­மலே ஒரு முடி­வுக்கு வரு­வது. - கணவன் –- மனை­விக்குள் நடக்கும் நல்ல விட­யங்­களை சிறி­ய­தா­கவும், எதிர்­ம­றை­யான விட­யங்­களை பூதக்­கண்­ணாடி வைத்துப் பெரி­தா­கவும் பார்த்துப் பழ­கு­வது. கண­வ­ருக்குப் பிடிக்கும் எனப் பார்த்துப் பார்த்து, மனைவி தனி ஆளாக அறு­சுவை விருந்து சமைத்­தி­ருப்பார். கண­வனின் வாயி­லி­ருந்து ஒரு சின்ன பாராட்டு கூட வந்­தி­ருக்­காது. அதுவே என்றோ ஒருநாள் சாப்­பாட்டில் ஒரு கல் உப்பு அதி­க­மா­கி­யி­ருந்தால், ஊருக்கே கேட்கும் அள­வுக்கு அதை அநா­க­ரி­க­மாக விமர்­சிப்பார்.

- இரு­வ­ருக்­குள்ளும் பிரச்சி­னைகள் வரும் போது, அதை சேர்ந்து சமா­ளிக்­கவோ, அதி­லி­ருந்து மீளவோ முயற்­சிக்­காமல், ‘நீ இப்­படிப் பண்­ணி­யி­ருக்­கணும்... நான் சொன்னேன் நீதான் கேட்­கலை’ எனத் தன் தரப்பைப் பாது­காப்­பது. புயல், மழை, பூகம்பம் மாதிரி வாழ்க்­கை­யிலும் சில விட­யங்கள் நம் கட்­டுப்­பாட்டை மீறி நடக்கும். ஆனால், அதைப் புரிந்து கொள்­ளாமல், எல்லா கெட்­ட­து­க­ளுக்கும் துணையின் மேல் பழியைப் போடு­வது. இந்த அத்­தனை எண்ணத் தவ­று­க­ளுமே தம்­ப­திக்கு இடை­யி­லான சின்னச் சின்ன பிரச்சி­னை­களை அதி­கப்­ப­டுத்தக் கூடி­யவை. தவிர, எதிர்மாறான சிந்­த­னை­க­ளையும் வளர்த்து விடும். வாழ்க்கை கசக்க ஆரம்­பிக்கும். திரு­மணம், குடும்ப உறவு, சமு­தாயம் என எல்­லா­வற்­றையும் பற்றி எதிர்மாறான பார்­வையே மேலோங்கும். ஏற்­க­னவே சொன்­ன­படி, எந்தப் பிரச்சி­னையின் போதும், எப்­போதோ நடந்த பழைய சம்­ப­வங்­களின் தொகுப்பே மூளையில் அலைமோதும்

இதையெல்லாம் தவிர்க்க என்­னதான் செய்­வது?

உங்கள் மூளை சேக­ரித்­துள்ள நல்ல டி.வி.டிக்­களை அடிக்­கடி ரீவைண்ட் செய்து பாருங்கள்.- உங்கள் துணைக்கு ஒரு விடயம் தெரி­ய­வில்­லையா? குறிப்­பிட்ட செயல்­களில் திறமை குறை­வாக இருக்­கி­றாரா? அதைப் பற்­றியே பேசிக் குத்திக் காட்டாமல், துணையிடம் உள்ள நல்ல திறமைகளை, உங்களைப் பிரமிக்கச் செய்கிற விடயங்களைப் பற்றிப் பேசுங்கள்... பாராட்டுங்கள்.

- உ ங்கள் துணையிடம் காணப்படுகிற குறைகளையும் தவறுகளையும் திருத்தி, சரி செய்கிற மாபெரும் பொறுப்பு உங் களிடம் கொடுக்கப்பட்டுள்ளது போல நினைத்து, அதற்கான முயற்சியில் இறங்காதீர்கள். அந்த முயற்சியில் உங்களுக்குப் போராட்டங்களும் ஏமாற்றங்களுமே மிஞ்சும். எத்த னையோ மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்து சோகங்களையே ஏன் சுழலச் செய்ய வேண்டும்?

தொகுப்பு:--– அருணா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல