புதன், 30 ஜூலை, 2014

படங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்


வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன்.



அடுத்ததாக படம் பார்க்கும் போது சில படங்களில் சப்-டைட்டில்கள் வீடியோவுடன் ஒத்திசைந்து வராமல் (Syncing) வீடியோக்கு முன்னோ பின்னோ வரலாம். ஏனெனில் டிவிடியாக வாங்கும் போது மட்டுமே படத்தின் சப்டைட்டில் சரியாக வரும். இணையத்தில் பலரும் அதனை Rip செய்து வெளிவிடுவதால் சப்டைட்டில்களின் நேரங்கள் சிறிது மாறி விடுகின்றன. இதற்கு சப்-டைட்டில்களின் நேரத்தை மாற்றியாக வேண்டும். இதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் Subtitle Workshop.



இதன் வசதிகள்:

1.இந்த மென்பொருளின் மூலம் புதிய படங்களுக்கு சப்-டைட்டில்களை உருவாக்க முடியும்.

2.ஏற்கனவே உருவாக்கப்பட்ட சப்-டைட்டில்களின் நேர அமைப்பு (Timings) மாறியிருப்பின் சரிபார்த்து திருத்திக் கொள்ள முடியும்.

3.Text இல் எதேனும் தவறு இருப்பின் வசனங்களை மாற்றலாம்.
வசனங்களை இடையில் சேர்க்கவும் அழிக்கவும் முடியும்.

4.பெரிய சப்-டைட்டில் பகுதிகளை இரண்டாக Split செய்யலாம். சிறிய பல பகுதிகளை ஒன்றிணைக்கலாம்.

5.வீடியோ / படத்தினைத் திறந்து Preview பார்த்துக் கொண்டே மாற்றங்கள் செய்யலாம்.

Time Adjust செய்ய

முதலில் படத்தினை ஓடவிட்டு எந்த நிமிடத்தில் ஆரம்பிக்கிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மென்பொருளில் சப்-டைட்டில் கோப்பினைத் திறந்து முதல் வசனம் வரும் நிமிடம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் வித்தியாச அளவினை (Time Difference) குறிப்பெடுங்கள்.

 Edit > Timings மெனுவில் Set Delay என்பதைக் கிளிக் செய்து எவ்வளவு விநாடிகள்/ நிமிடங்கள் மாறுகிறதோ அதனைக் கொடுக்கலாம். இதில் உதாரணமாக 5 விநாடிகள் எனில் 00:00:05,000 என்று இருக்க வேண்டும். மேலும் சப்-டைட்டில்கள் தாமதமாக வர “-” குறியிடையும் வேகமாக வர “+” குறியீடையும் தேர்வு செய்யுங்கள். இதனைச் சேமிக்கும் போது Save as இல் SubRip (.SRT) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

மேலும் இந்த Timings மெனுவில் Set Duration limits, Adjust, Extend Length, Time Expander/Reducer போன்ற பல வசதிகளும் இருக்கின்றன.

சப்-டைட்டில்களை எப்படி படம் பார்க்கும் போது வரச்செய்வது அல்லது VLC Player இல் எப்படி வரச்செய்வது என்றறிய கிளிக் செய்யுங்கள். View Subtitles / Open Subtitles in VLC

Download Subtitle Workshop official | SourceForge Link


Ponmalar Blog
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல