இந்திய மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கை சேர்ந்த தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பங்கஜ் பரேக் (வயது 45) என்பவர், 4 கிலோ நிறையுடைய தங்க சேட் அணிந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் மதிப்பு 1.30 கோடி ரூபா ஆகும்.
சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸில் பங்கஜ் பரேக் உறுப்பினராகவுள்ளார். பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட இவர், தற்போது ஆடைகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நாசிக் அருகேயுள்ள, எலவோ மாநகராட்சியின் கவுன்சிலராகவும் இவர் பதவி வகிக்கின்றார். இவர் தன்னுடைய 45ஆவது பிறந்த நாளை நேற்றுமுன்தினம் கொண்டாடினார். இந்த பிறந்த நாளுக்காக 4 கிலோ எடையில் தங்கசேட் ஒன்றைத் தயாரித்துள்ளார்.
இதுபற்றி, பங்கஜ் பரேக் தெரிவிக்கையில், பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே தங்கம் என்றால் எனக்கு அலாதி பிரியம். அதனால், தங்க நகைகள் அணிவதில், அதிக அளவில் ஆர்வம் காட்டுவேன். 23 ஆண்டுகளுக்கு முன் என் திருமணம் நடந்தது. அப்போதும் மணமகளை விட நான் அதிக நகைகள் அணிந்திருந்தேன்.
இன்று என்னுடைய, 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதால், அதற்காக 4 கிலோ தங்கத்தில் சேட் ஒன்றை தயாரித்துள்ளேன். இந்தத் தங்கச் சேட்டை 20க்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்கள் 3,200 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு தயாரித்துள்ளனர். ரூபா 1.30கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள, தங்கச் சேட்டை அணிந்து மும்பை சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினேன்.
என் தங்க சேட் குறித்து, வருமான வரித்துறையினர் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தங்கம் வாங்கியதற்கான பற்றுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை வைத்திருக்கிறேன் என்றார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக