பிறந்ததில் இருந்து அசுர வேகத்தில் வளர்ந்து வரும் கைகளால் இந்தியச் சிறுவன் ஒருவன் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறான். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு என்ன காரணத்தால் இவ்வாறு கைகள் வளர்ந்து கொண்டே செல்கிறது எனக் காரணம் கண்டுபிடிக்க இயலாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவின் வடமாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் கலீம். பிறக்கும் போதே இயல்பான குழந்தைகளின் கைகளை விட இருமடங்கு பெரிதாக இருந்துள்ளது கலீமின் கைகள். காலப்போக்கில் இது சரியாகி விடும் என மருத்துவர்களும், பெற்றோர்களும் நினைக்க, அதற்கு மாறாக நாளுக்கு நாள் கலீமின் கைகள் வளர்ந்து கொண்டே வருகிறது.
தற்போது தன் தலையை விட மிகப்பெரிய கைகளைக் கொண்டு இயல்பான தனது வேலைகளைக் கூடச் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறான் கலீம்.
13 இன்ச் நீளம்...
தற்போது கலீமின் உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு அவனது கைகள் வளர்ச்சியடைந்துள்ளது.
சாதாரண வேலைகள் கூட...
மிகவும் அபரிதமான கைகளின் வளர்ச்சியால் இச்சிறுவன் ஷு லேஸ் கட்டுவது, உடைகளை அணிந்து கொள்வது உள்ளிட்ட சாதாரண செயல்களை செய்வதற்கும் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.
தனிமை...
தனது பெரிய கைகளைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால் தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன் கூறுகிறான்.
வறுமை...
மாதம் ஒன்றிற்கு ரூ. 1500க்கும் குறைவாகவே கலீமின் பெற்றோர் சம்பாதிக்கின்றனர். இதனால் தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருவதாக அவர்கள் சோகத்துடன் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் திணறல்...
கலீமின் இந்த நிலைக்கு என்னக் காரணம் என்று கண்டறிய இயலாமல் மருத்துவர்களும் திணறித் தான் போகிறார்கள். கைகளின் வளர்ச்சியை தவிர்த்து பார்த்தால் கலீம் நல்ல நலத்துடன் இருப்பதாக கூறிகின்றனர் மருத்துவர்கள்.
லிம்பாஞ்சியோமா...
கலீமுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர், ‘அவன் லிம்பாஞ்சியோமா அல்லது ஹமார்டோமா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்' என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
குணமாக்கலாம்...
மேற்கூடிய இரண்டுமே உடலின் குறிப்பிட்ட பாகத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தரும் நோய் ஆகும். மேலும், மருந்துகள் மூலம் அதனை சரி செய்ய இயலும் எனவும் அவர் கூறுகிறார்.
பெற்றோர் நம்பிக்கை...
நிச்சயம் தங்கள் மகனுக்கு என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வதாகக் கூறுகின்றனர் கலீமின் பெற்றோரான ஷமிம்-ஹலீமா தம்பதியர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக