செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

யாழ். மாநகர சபை குண்டு வெடிப்புக்கு பின்னால் அரச ஊழியர்!

நாட்டில் போருக்கு பின்னர் ஏற்பட்டு உள்ள அமைதிச் சூழல் மற்றும் இயல்பான மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை குழப்புகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்ற அரச ஊழியர்களுக்கு எதிராக புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன என்று தெரிய வந்து உள்ளது.



இவர்கள் குறித்த விபரங்கள் மிக கவனமாக சேகரிக்கப்பட்டு, இரு பிரிவுகளாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன என்று தெரிகின்றது.

1999 ஆம் ஆண்டு வரைக்கும் நாச வேலைகளில் ஈடுபட்டவர்கள், 1999 ஆம் ஆண்டுக்கு பின்னரும் நாச வேலைகளில் ஈடுப்ட்டு வருகின்றவர்கள் என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பு போடப்பட்ட இரு ஆவணக் கோவைகள் அடுத்த் கட்ட நடவடிக்கைகளுக்காக அரச புலனாய்வுப் பிரிவுகளின் தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று தகவல்கள் கசிந்து உள்ளன.

1998 ஆம் ஆண்டு யாழ். மாநகர சபை குண்டு வெடிப்பு இடம்பெற்றது. இக்குண்டு வெடிப்புக்கு வேண்டிய உதவி ஒத்தாசை, ஏற்பாடு ஆகியவற்றை மிக கச்சிதமாக செய்து கொடுத்தமை மூலம் அப்பாவி மக்கள், அதிகாரிகள் ஆகியோரின் உயிரிழப்புக்கு காரணமான அரச உத்தியோகத்தர் இன்றும் சுதந்திரமாக நடமாடி வருகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரகசியங்கள் பதிவேற்றப்பட்ட கணினிகள் சில வன்னியில் இருந்து இராணுவத்தால் கண்டு பிடிக்கப்பட்டன. இக்கணினிகளில் சேமிக்கப்பட்டு இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோதே புலிகள் இயக்க செயற்பாட்டாளர்கள் குறித்த பெயர்கள், விபரங்கள் இராணுவத்துக்கு சுளையாக கிடைத்தன. இந்த ஆவணங்களை வைத்துத்தான் வெளிநாடுகளில் உள்ள புலிச் செயற்பாட்டாளர்களில் 500 பேர் வரையானோருக்கு இலங்கை அரசு தடை விதிக்க முடிந்தது. இந்த ஆவணங்களில் இருந்தே மேற்சொன்ன அரச ஊழியர் குறித்த தகவல்களும் வெளிப்பட்டு இருக்கின்றன.

குண்டு வெடிப்பில் இவரது காத்திரமான பங்களிப்பை பாராட்டி புலிகளின் தலைவர் பிரபாகரனால் இவருக்கு வன்னியில் இருந்து பரிசு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பரிசுப் பொருளை பொட்டம்மானின் நெருங்கிய சகாக்கள் கொண்டு வந்து கொடுத்து இருந்தனர். தொடர்ந்து இவர் அரச வேலையை விட்டு விட்டு வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றார். போருக்கு பின்னர் மீண்டும் திரும்பி வந்து உள்ள இவர் அரச உயர் அதிகாரி ஒருவரை வளைத்துப் போட்டு கை விட்டுப் போன வேலையை மீண்டும் பெற்றுக் கொண்டார்.

ஆனால் இவர் நாச வேலைகளில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இதற்காக ஊடகவியலாளர் என்கிற போர்வையில் செயற்பட்டு வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்கள், ஆட்கள் சிலரின் அறிவுறுத்தலுக்கு அமைய இவர் இயங்குகின்றார் என்று அவதானிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இவர்களிடம் இருந்து ரொக்க நிதி, மடிக் கணினி, கமரா போன்றவற்றை பெற்று, ஆசை காட்டி இளைய சமுதாயத்தை சேர்ந்த ஊடக ஆர்வலர்களை ஆள் சேர்த்து உள்ளார்.

இவர் சம்பந்தப்பட்ட ஆவணக் கோவையை பார்வையிட்ட அரச புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் அரச புலனாய்வுப் பிரிவுக்கு சிறிய சிறிய தகவல்களை வழங்குகின்ற உளவாளியாகவும் இவர் போருக்கு பின்னர் செயற்பட்டு உள்ளார்.

இவர் அடங்கலாக 1999 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னரும் நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இறுக்கும்படி மேலிடத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று நம்பகரமாக அறிய வந்து உள்ளது. அத்துடன் இவரோடு குழு நிலையில் செயற்பட்டு வருகின்ற ஊடகச் செயற்பாட்டாளர்களை சந்தேகக் கண்களுடன் நோட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 தாய்நாடு

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல