Rolf Buchholz
Rolf Buchholz is the most pierced man in the world. He has 453 piercings in his face and body, is heavily tattooed and has two horns on his face
உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்.
அவருக்கு ஏன் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
53 வயதான ரோல்ப், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவர் தனது நெற்றி, காது, மூக்கு, உதட்டில் மொத்தம் 453 துளைகளைப் போட்டு அணிகலன்களை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் விமான நிலையம் வந்த ரோல்ப் அங்கேயே நிறுத்தப்பட்டு பின்னர் இஸ்தான்புல் கிளம்பிய விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டு விட்டார்.
துபாயில் உள்ள ஒரு ஹோட்டலின் நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் ரோல்ப். அவர் திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்க்க ஹோட்டல் நிர்வாகம் கடுமையாக முயற்சித்ததாம். ஆனால் அது தோல்வியிலேயே முடிந்ததாம்.
வளைகுடா நாடுகளிலேயே சற்று முற்போக்கான நாடாக கருதப்படுவது துபாய். ஆனால் அங்கு இப்படி நடந்திருப்பதை அனைவரையும வியக்க வைத்துள்ளது.
இதற்கிடையே தான் மீண்டும் துபாய் வருவேன் என்று ரோல்ப் கூறியுள்ளார். அவரது உடமைகள் இன்னும் துபாயில்தான் உள்ளன.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை சூனியக்காரன் என்று துபாய் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் நினைத்து விட்டனர். இதனால்தான் அவர்கள் என்னை தடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் நான் மீண்டும் துபாய் வருவேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் ரோல்ப்.
உண்மையில் ரோல்ப் ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஆவார். 2012ம் ஆண்டு இவர் உலகிலேயே உடலில் அதிக துளை கொண்ட மனிதர் என்று கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து இவருக்கு சான்றிதழ் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக