தேவையான பொருட்கள்:
தக்காளி – மூன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
பூண்டு பற்கள் – பத்து
மிளகாய் வற்றல் – செத்தல்மிளகாய் – பத்து (தேவையான காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும்)
கடலை பருப்பு – மூன்று மேசைக்கரண்டி (Table spoon)
உளுத்தம்பருப்பு – மூன்று மேசைக்கரண்டி (Table spoon)
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு – ஒரு தேக்கரண்டி (Tea spoon)
சீரகம் – ஒரு தேக்கரண்டி (Tea spoon)
எண்ணெய் தேவையான அளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு மேசைக்கரண்டி (Table spoon)
தாளிக்க:
கடுகு – ஒரு தேக்கரண்டி (Tea spoon)
கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி (Tea spoon)
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி (Tea spoon)
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி (Tea spoon)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கொதித்ததும் கடுகு,சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
பின்பு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்.
வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக்கவும்.
பருப்புகள் சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டை சேர்க்கவும்.
பூண்டு லேசாக சிவக்க ஆரமித்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
தக்காளி வேகியதும் அடுப்பை அணைத்து கலவையை ஆறவிடவும்.
நன்கு ஆறியதும் மிக்சரில் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
தாளிக்க எடுத்து வைத்த பொருட்களை தாளித்து சட்னீயில் சேர்த்து கலக்கவும்.
சுவையான காரசாரமான கார தக்காளி சட்னி தயார்.
இட்லி, தோசை, பரோட்டா மற்றும் சாதத்திற்கு பக்க உணவாக சேர்த்து சாப்பிட கார தக்காளிசட்னி சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக