செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

வேர்ட் டிப்ஸ்

புதுவகையான டாகுமெண்ட் பார்மட்: பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை இல்லை.


அந்தச் சொல்லின் மீது கர்சரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்துங்கள். பின்னர், ரிப்பனில், ஹோம் டேப்பினைக் காட்டவும். அடுத்து Font குரூப்பில், Bold டூலின் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று வைத்த சொல் முழுவதும் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். இவ் வாறே, எந்த ஒரு டூலையும் இந்த முறையில் பயன்படுத்தலாம். Ctrl+U அழுத்தினால், சொல்லின் கீழாக அடிக்கோடிடப்படும். டாகுமெண்டின் பழைய மாறா நிலைக்கு, பார்மட்டிங் எதுவும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா? கர்சரை பார்மட் செய்த சொல்லுக்குள்ளாக நிறுத்திப் பின்னர், Ctrl+Space Bar அழுத்தவும்.

உங்கள் வேர்ட் புரோகிராமில் இந்த வசதி செயல்படவில்லை என்றால், அதனை வடிவமைக்கும்போது நீங்கள் ஏற்படுத்திய சில செட்டிங்குகளே காரணம்.

1. முதலில் வேர்ட் ஆப்ஷன் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டனை அழுத்திப் பின்னர் வேர்ட் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்க ஓரமாக உள்ள, Advanced option என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Editing Options என்னும் பிரிவில், When Selecting Automatically Select Entire Word என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.

4. அடுத்து நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இந்த மாற்றங்கள், ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படுகையில், அது எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடுவது மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட வகையில் பார்மட்டிங் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் செட் செய்யப்படுகிறது. இந்த செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், முழு சொல்லும் தேர்ந்தெடுக்கப்படுவது நடைபெறாது.

டாகுமெண்ட்டில் வரி நீள்கிறதா?: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.

இதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.

டாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbol பிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து No Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும்.

இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.

ட்ரேக் மாற்றங்கள் இல்லாமல் அச்சடிக்க: வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரித்த பின்னர், அதில் திருத்தங்களை மேற்கொள்ள Track Changes என்ற டூல் நமக்கு அதிகம் உதவுகிறது. இதன் மூலம் மாற்றங்களை மேற்கொள்கையில், என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று காட்டப்படும். குறிப்பாக ஒரே டாகுமெண்ட்டைப் பலர் திருத்துகையில், இந்த மாற்றங்கள் அனைத்தும் காட்டப்படும். இறுதியில் நமக்குத் தேவையான மாற்றங்களை மட்டும் அனுமதித்து, டாகுமெண்ட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கலாம். சில வேளைகளில், இந்த இறுதி மாற்றத்தை மேற்கொள்ளும் முன்னர், டாகுமெண்ட்டினை அச்சடிக்க முற்படுவோம். அப்போது இந்த மாற்றங்களும் சேர்ந்தே பிரிண்ட் ஆகும். ஆனால், நாம் இந்த மாற்றங்கள் காட்டப்படாமல் பிரிண்ட் எடுக்க விரும்புவோம். இதற்கு என்ன மாதிரியான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பார்க்கலாம். இந்த வசதியினை வேர்ட் 2007ல் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொண்டு பெறலாம்.

ட்ரேக் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ள டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளவும்.

1. முதலில் Ctrl+P கீகளை அழுத்தவும். வேர்ட், நமக்கு பிரிண்ட் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

2. Print What என்ற கீழ்விரி பட்டியலை டாகுமெண்ட்டிற்கு மாற்றவும்.

3. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

இப்போது நீங்கள் ஏற்படுத்திய ட்ரேக் மாற்றங்கள் அச்சில் காட்டப்பட மாட்டாது. இவை அச்சில் தேவை என்றால், Print What என்ற பட்டியலில் ஏற்படுத்திய மாற்றத்தினை நீக்க வேண்டும்.

நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்தினால், வேறு சில வகையில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள்.

1. Ctrl+P கீகளை அழுத்தவும். வேர்ட் ரிப்பனில் File டேப்பினைக் காட்டும். இங்கு பிரிண்ட் ஆப்ஷன்ஸ் காட்டப்படும்.

2. Settings லேபிளில் கீழாக உள்ள கீழ்விரி பட்டியலில் கிளிக் செய்திடவும். அநேகமாக, இந்த பட்டியலில் "Print All Pages.” என்று காட்டப்படலாம்.

3. இங்கு காட்டப்படும் ஆப்ஷன்களில், Print Markup என்பதனை அடுத்து ஒரு டிக் அடையாளத்தைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், அனைத்து ட்ரேக் மாற்ற அடையாளங்களும் மறையும்.

4. தொடர்ந்து Print என்பதில் கிளிக் செய்து அச்சடிக்கலாம்.

இப்போது ட்ரேக் மாற்றங்கள் எதுவும் அச்சடிக்கப்பட மாட்டாது. என்ற ஆப்ஷனில் எதிரே டிக் அடையாளம் இருந்தால் மட்டுமே, இவை அச்சடிக்கப்படும்.

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும், டாகுமெண்ட்டில் ட்ரேக் மாற்றங்கள் இருந்தால் மட்டுமே காட்டப்படும். இல்லை எனில், வழக்கமான பிரிண்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அச்சிற்கான தேவைகளைத் தேர்ந்தெடுத்து நாம் அச்சடிக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல