வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

பிழைப்பில் மண் போட்ட சிங்களமும் பிழைப்புக் கெட்டவர்களும்!

 யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது சிங்களம் செய்த தவறு! யார் இந்தச் சிங்களம்? ஜனாதிபதி ராஜபக்சாவேதான். நாளாந்தம் கொலைகள் நடக்கலாம். சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரமாக யுத்தம் புரியவைத்டு அழிக்கப்படலாம். பின்னர் கல்லறை கட்டி ஒவொரு வருடமும் மாவீரர் விழாக்கள்,கரும்புலி விழாக்கள் கொண்டாடலாம்.



பஸ்கள், பஸ் நிலையங்கள், ரெயில்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், புனித பிரதேசங்கள்,,விமான நிலையம் என்றூ குண்டுகள் வெடித்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படலாம். மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக அலையலாம். பாஸ் எடுத்து வரி, கப்பம் செலுத்தி பயணங்கள் செய்யலாம். இதற்கெல்லாம் எங்களூக்கு கவலை இல்லை.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவில் இவ்வளவு கடுப்பும் இவர்களூக்கு ஏன்? மகிந்த ராஜபக்ச யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

வெளிநாடுகளூக்கு தமிழர்களை கடத்திப் பிழைப்பு நடத்தும் கடத்தல் முகவர்கள்.

பொருட்களைப் பதுக்கி வைத்து மக்களிடம் கொள்ளையடித்த வடக்கு வியாபாரிகள்.

புலிகளின் வாலைப் பிடித்துக்கொண்டு நக்கிப் பிழைத்தவர்கள், இலங்கையில் யுத்தத்தை வைத்து வெளிநாடுகளில் நிதி சேர்த்துப் பணக்கரர்களாக ஆகியவர்கள், வெளிநாடுகளில் குடியேற விரும்பியவர்கள், அகதிகளுக்காக உருத்திரகுமாரன் போன்ற வழக்காடும் தமிழ் சட்டத்தரணிகள். அகதிகளூக்காக மொழி பெயர்ப்பாளர்கள்.

போக்குவர்த்துச் சேவை மூலம் கொளையடிக்கும் வாகனதாரிகள், இன்று வடபகுதிக்கு ரயில் சேவை நடை பெறுவதனால் கொழும்பிலிருந்து யாழ் செல்ல 1200 ரூபாய் அறவிட்ட வாகனக்காரர்கள் 600 ரூபாவாக கட்டணத்தைக் குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மகிந்தா மீது மகிழ்ச்சியாக இருப்பார்களா? யுத்தம் அதற்கும் மேலாக தமிழர்களின் பணத்தில் வாழ்க்கை நடத்தியவர்கள் புலிகள். இலங்கையில் யுத்தம் பலருக்கு வாழ்வைக் கொடுத்தது. வெளிநாடுகளின் அகதி அந்தஸ்துக் கோரியவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

சிங்களம் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. பற்றாக்குறைக்கு பெயர்ப் பட்டியல் 424 வெளிநாட்டுப் புலிகள் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. புலி என்ற மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி விட்டது.

ரணில் காலத்தில் வெளிநாட்டுப் புலிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கொண்டாட்டத்தில்; புலிப் பினாமிகள் யாரும் முகம் காட்டவேயில்லை. உங்கடை ஐயாவுக்கு வருத்தம் கடுமையாம்! அண்ணன் ஊருக்குப் போகவில்லையோ என்று கேட்டால் அரசாங்கம் மாறினால்தான் போகலாம். இனி வாற அரசாங்கம் சிங்களமாய் இருக்காதோ? மகிந்த அரசை விழுத்தக் கூடிய கட்சி ஏதும் இருக்கிறதோ?

புலிகள் வன்னியில் இருந்த காலத்தில் கொழும்பில் இருந்து அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து புளியங்குளத்தில் புலிகளூக்கு கப்பம் செலுத்தி பிரயாணம் மேற்கொண்ட மக்கள் இன்று அந்தத் தொல்லையின்றி கொழும்பில் ஏறினால் யாழில் தங்கள் வீடுகளில் சென்றூ இறங்குகிறார்கள். சிங்களம் என்றூ வெறுப்பைக் கக்கிக் கொண்டிருப்பவர்கள் மகிந்தவிற்கு முன்பு இருந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வீடு வீடாக விமானக் குண்டு வீச்சை நடதியபோதும் வீடு வீடாகப் புகுந்து இராணுவம் சுட்டுக் கொன்றபோதுகூட இவ்வளவு ஆத்திரம் கொண்டிருக்கவில்லை. மகிந்த அரசைக் கவிழ்க்கலாம் என்ற கனவோடு இவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.

வெளிநாடுகளிருந்து செல்வோரிடம் புலிகள் புளியங்குளத்தில் வைத்து நாசூக்காக கொள்ளையடித்தனர்.விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளினூடாக பயணம் செய்பவர்கள் புலிகளூக்குப் பணம் செலுத்தியே ஆகவேண்டும்.

வன்னியூடாகப் பயணம் செய்பவர்களுக்கு 10 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக புலிகளின் அனுமதிப் பத்திரத்திற்குச் செலுத்தவேண்டும்.

நவம் அறிவுக்கூட நிதி என்று ஒரு ரிக்கற்றை தூக்கிப் போடுவார்கள். அதற்கு 30 யூரோக்கள் அல்லது அதற்குச் சமனான வெளிநாட்டு நாணயம் செலுத்த வேண்டும்.
பின்னர் இன்னொரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு நீங்கள் வெளிநாட்டில் பங்களிப்பு செய்வது பற்றி விசாரிப்பார்கள். பங்களிப்புச் செய்தால் இரகசிய இலக்கம் கேட்பார்கள்.

இல்லாவிட்டால் ஒரு லட்சம் ரூபா செலுத்தச் சொல்லிக் கேட்பார்கள். செலுத்தாவிட்டால் உங்களை அனுமதிக்க முடியாது என்று மிரட்டுவார்கள்.

ஏன் தொல்லை என்று பலர் பணத்தைச் செலுத்திவிட்டுச் செல்வார்கள்.வெளிநாட்டில் வங்கி மூலமாக மாதாந்தம் பணம் செலுத்தும் படிவதையும் நிரப்பச் சொல்வார்கள்.

ஆனால் அந்தப் பத்திரத்தில் யாருக்குப் பணம் செலுத்துகிறோம் என்ற விபரம் இருக்காது.

நீங்கள் உங்கள் வங்கி விபரங்களை நிரப்பிவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மாதாமாதம் புலிப் பினாமிகளுக்கு பணம் சேரும். சிலர் புத்திசாலித்தனமாக நாங்கள் யாழ்ப்பாணம் போய் செலுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு தந்திரமாக பலாலி சென்று விமானத்தில் கொழும்பு வந்துவிட்டார்கள்.

95ம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணம் புலிகலீன் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்தத் தந்திரம் செய்திருக்க முடியாது. காரணம் அப்போது விமானப் பிரயாணம் சாத்தியம் இல்லை. கிளாலிப் பிரயாணம் மட்டும்தான். புலிகள் இருந்த காலத்தில் எத்தனையோ இன்னல்களை தமிழர்கள் சந்தித்திருந்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் மிக வேகமாக பலர் மறந்துவிட்டார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல