சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது.
பின் அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை. இத்தனை அங்குல அளவில் தான் அல்லது சென்டிமீட்டர் அளவில் தான் ஒரு கட்டம் இருக்க வேண்டும் என நாம் மிகத் துல்லிதமாக அமைக்க முடிவதில்லை. அவ்வாறு அமைத்திட சிறப்பான வழி ஒன்று உள்ளது. அளவுடன் அமைக்க வேண்டிய கட்டத்தில் கர்சரை நிறுத்திவிட்டு பின் மவுஸின் முனையை ரூலரில் கிடைக்கும் கட்டங்களின் முனையில் கொண்டு செல்க. இப்போது வெறுமனே மவுஸினை இழுக்காமல் ஆல்ட் கீயை அழுத்துக. இப்போது அந்த கட்டம் எவ்வளவு அங்குல அகலத்தில் இருக்கிறது எனக் காட்டப்படும். இனி உங்களுக்குத் தேவையான அகல அளவு கிடைக்கும் வரை மவுஸை அழுத்தியபடி நகர்த்தி கட்டத்தினை அமைத்திடலாம்.
அழகாய்க் கோடுகள் அமைக்க: வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம். இன்னொரு சிறப்பு இவற்றை அமைத்திட பல சுருக்கு வழிகள் இருப்பதுதான்.
இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (-) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும். மூன்று சமன் (=) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும். இதே போல டில்டே (~) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும். இதே போல (#) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து சோதனை செய்து பார்க்கவும். இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது? கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம். இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto corrections என்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.
கட்டங்களில் டெக்ஸ்ட் மற்றும் படம்: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் 'Display gridlines on screen' என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கை வாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக