புதன், 3 செப்டம்பர், 2014

பெங்களூரில் இருந்து சென்னைக்கு பறந்த பெண்ணின் இதயம்: 14 கிமீ தூரத்தை 7 நிமிடத்தில் கடந்த ஆம்புலன்ஸ்

சென்னை: பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மும்பையைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.


கர்நாடக மாநில எல்லையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் கடந்த 1ஆம் தேதி ஓசூர் மெயின் ரோட்டில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.

பின்னர் அவர் கெங்கேரியில் உள்ள பி.ஜி.எஸ். குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் அவரது உடல்நிலை மோசமாகி மூளைச்சாவு அடைந்தார். இந்த தகவல் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட அவர்கள் கதறி அழுதனர்.

உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயல் இழக்கவில்லை. அதை பெண்ணின் குடும்பத்தாரிடம் தெரிவித்த டாக்டர்கள் அந்த உறுப்புகளை பிறருக்கு தானமாக வழங்கலாம் என்றும் கூறினார்கள்.

உறவினர்கள் ஒப்புதல்

அதை கேட்ட அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்கள் மிகுந்த சோகத்தில் இருந்தபோதிலும், பிறருக்கு வாழ்வு கிடைக்குமே என்று கருதி அந்த பெண்ணின் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக் கொண்டனர். உடனடியாக, அவரது உடலில் உள்ள உறுப்புகளை தானம் செய்வதற்கான நோயாளிகளை டாக்டர்கள் தேர்வு செய்தனர்.

கண்கள், சிறுநீரகங்கள்

இதில் அவரது 2 கண்கள், 2 சிறு நீரகங்களை பெங்களூரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்திற்கு இதயம்

அந்த பெண்ணின் இதயம் கர்நாடக மருத்துவமனைகளில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்திருந்தவர்களுக்கு பொருந்தவில்லை. இதனால், கர்நாடகா மாநில மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்ட அதிகாரிகள், தமிழக அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் யாருக்காவது இதயம் தேவைப்படுகிறதா எனக்கோரி, மூளைச்சாவு அடைந்தவரின் ரத்தப் பிரிவு, இதயத்தின் அளவு உட்பட அனைத்து விவரங்களையும் தெரிவித்தனர்.

மும்பை இதய நோயாளி

சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மும்பையை சேர்ந்த 40 வயது ஆணுக்கு இதயத்தை பொருத்துவதாக முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

விமானம் மூலம்

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். பெண்ணின் உடலில் இருந்த இதயத்தை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர்.

பெங்களூரில் பரபரப்பு

கெங்கேரி மருத்துவமனையில் இருந்து சர்வதேச விமான நிலையம் வரை 45 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை சாதாரணமாக போக்குவரத்து நெரிசலில் கடந்து செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அதிலும் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூர் ரோட்டில் விரைவாக செல்ல வேண்டும் என்றால், அதற்கு போக்குவரத்து போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம் என்று உணர்ந்திருந்த டாக்டர்கள் முன்னதாகவே இந்த தகவலை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

பறந்த ஆம்புலன்ஸ்

அதன்பேரில் இதயம் எடுத்து செல்லப்பட்ட ஆம்புலன்சு வேன் சிக்னல்களில் நிற்காமல் விமான நிலையத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னால் போக்குவரத்து போலீசார் வழியில் எங்கும் பச்சை சிக்னல் ஏற்படுத்தும்படி வயர்லஸ் மூலம் கூறியபடியே செல்ல, அதை பின்தொடர்ந்து 2 ஆம்புலன்சு வேன்களும் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் நோக்கி விரைந்தன.

62 நிமிடத்தில் 45 கிலோ மீட்டர்

சுமார் 62 நிமிடத்தில் 45 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அந்த ஆம்புலன்சு வேன்கள் விமான நிலையத்தை அடைந்தன. பின்னர் விமானத்தில் மதியம் 3.22 மணிக்கு இதயம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

6 நிமிடம் முன்பாக வந்தது

வழக்கமாக பெங்களூரில் இருந்து ஏர்-இந்திய விமானம் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 4.30 மணிக்கு வந்து சேரும்.
ஆனால் இதயம் கொண்டு வரவேண்டியது இருந்ததால் 8 நிமிடங்கள் முன்னதாக மாலை 3.22 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தை விமானி பிரேம்சங்கர் இயக்கினார்.

இதில் 85 பயணிகளும் பயணம் செய்தனர். மாலை 4.22 மணிக்கு சென்னை வரவேண்டிய விமானம், 6 நிமிடங்களுக்கு முன்னதாக மாலை 4.16 மணிக்கு தரை இறங்கியது.

விமானியின் சாமர்த்தியம்

ஓடுபாதையில் வந்து நின்று கதவுகள் திறக்க குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் ஆகும். ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு 4 நிமிடங்களில் அதாவது 4.20 மணிக்கு விமானத்தை நிறுத்தி கதவை திறக்கச் செய்தார்.

இதயத்தோடு பயணித்த மருத்துவர்கள்

டாக்டர்கள் பாவுலின் கிருஷ்ணமுரளி, ராஜீ, சவுத்திரி ஆகியோர் பாதுகாப்புடன் இதயத்தை கொண்டு வந்தனர். முதலில் இதயத்துடன் இவர்கள் விமானத்தில் இருந்து கீழே இறங்கினார்கள். இதயத்தை கொண்டு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ், விமான நிலையத்தின் உள்ளே ஓடுபாதைக்கு அருகில் அனுமதிக்கப்பட்டது.

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்

அங்கு இதயத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸுடன் டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஆம்புலன்ஸ் செல்வதற்கு வசதியாக சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. சாலையில் யாரும் குறுக்கே செல்லாமல் இருக்க, வழியெங்கும் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

அந்த பரபரப்பு நிமிடங்கள்

சென்னை விமான நிலையத்துக்கு சரியாக மாலை 4.19 மணிக்கு விமானம் வந்தது. டாக்டர்கள் குழுவினர் இதயத்துடன் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் ஏறினர்.

7 நிமிடத்தில் கடந்தது

விமான நிலையத்தில் இருந்து மாலை 4.31 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ், பரங்கிமலை, கிண்டி, கத்திப்பாரா, சின்னமலை, கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலை வழியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலை 4.38 மணிக்கு சென்றடைந்தது.

நோயளிக்குப் பொருத்தம்

மாலை 4.38 மணிக்கு தொடங்கிய இதய ஆபரேஷன் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது அறுவைச் சிகிச்சை அரங்கில் இருந்த நோயாளிக்கு, பொருத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தமிழகப் பெண்ணின் இதயம் மும்பை ஆணுக்கு

வெற்றிகரமாக நடைபெற்ற ஆபரேஷன் மூலம் தமிழ்நாட்டு இளம் பெண்ணின் இதயம் மும்பை ஆணின் உடலில் பொருத்தப்பட்டு தனது இயக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல