தென்கொரியாவில் கடந்த 33 வருடங்களாக நாய்களை வைத்து விதவிதமாக உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வந்த ஹோட்டல் ஒன்று நேற்றுடன் மூடப்பட்டது.
தென்கொரியவின் கிழக்கு பகுதியில் உள்ள டீஜியா என்ற றோட்டலை ஓ கெயும் இல் என்ற பெண் கடந்த 33 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வந்தார். வயது முதிர்வின் காரணமாக இந்த ஓட்டலை தன்னால் தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும், அதனால் கனத்த இதயத்துடன் ஹோட்டலை மூடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஓட்டலின் உரிமையாளராகவும், தலைமை சமையல் பணியாளராகவும் உள்ள இவர், நேற்று தனது கையால் கடைசி வாடிக்கையளருக்கு உணவை பரிமாறினார்.
இந்த ஓட்டலுக்கு இதற்கு முன் இருந்த இரண்டு தென்கொரிய அதிபர்களும் ரெகுலராக வந்துபோகும் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 33 வருடங்களில் இதுவரை 2.5 மில்லியன் நாய்கள் உணவுக்காக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும், தினசரி சராசரியாக 700 வாடிக்கையாளர்களுக்கு நாய்க்கறி உணவுகளை தான் விற்பனை செய்துள்ளதாகவும் கூறுகிறார் இந்த ஹோட்டலின் உரிமையாளர் கெயும் இல்.
58 வயதான கெயும் இல் , தனது வயது முதிர்வின் காரணமாக ஓட்டலை மூடுவது குறித்து கவலை கொள்வதாகவும், தனக்கு பின்னால் வேறு யாராவது இந்த ஓட்டலை நடத்தி தான் இதுவரை பெற்ற பெயரை கெடுப்பதற்கு இடம் கொடுக்க விரும்பாததால்தான் வேறு யாருக்கும் இந்த ஓட்டலை விற்காமல் மூடுவதாகவும் அவர் கூறினார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக