நீதிமன்றில் ஜெயலலிதா
காலை 10.40 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக பகல் 11.20 மணிக்கு இருக்கையில் அமர்ந்த நீதிபதி, அங்கிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு 4 பேரும், நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று பதில் அளித்தனர்.
4 பேரும் குற்றவாளிகள்
அதனையடுத்து பகல் ஒரு மணிக்கு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒரு மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியது. அப்போது வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ள 3 பிரிவுகளின் மீதும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.ரூ.100 கோடியை செலுத்த தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
3 பிரிவுகளில் தண்டனை
பின்னர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 3 பிரிவுகளின் கீழும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.
மீதித் தொகையை
மேலும், ஜெயலலிதாவிற்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 64 கோடியே 44 லட்சம் போக மீதித்தொகையை செலுத்தினால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் தண்டனையை குறைக்கக் கோரியும், அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1240 பக்க தீர்ப்பு
பின்னர் மாலை 4 மணியளவில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரிடமும் 1,240 பக்கங்களை கொண்ட தீர்ப்பின் நகலை நீதிமன்ற ஊழியர்கள் அளித்தனர். அதில் 4 பேரும் கையெழுத்திட்டனர். பின்னர் ஜெயலலிதாவை பரப்பன அக்ரஹா சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்கு பிறகு மாலை 5.20 மணிக்கு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்டவை
சொகுசு பஸ் 1, தங்க நகைகள் 7 சூட்கேஸ்,சொத்து விற்பனை பத்திரம் 19, ரோலெக்ஸ் கைக்கடிகாரங்கள் 7, வைரங்கள் 573, விலை உயர்ந்த பச்சைக்கல் 16, 290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் 1, 2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், ரத்தினக்கல் பதித்த ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் 1,அரை கிலோ தங்க காசுமாலை 1, அரை கிலோ தங்க குடம் 1, 191 கிராம் தங்க செங்கோல் 1, இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் 1, வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் 1, 573 வைரம், 16 பச்சைக்கல், 3 இரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1, 1090 வைரம், 73 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1 இதுதவிர, ஏராளமான வைரம் பதித்த வளையல்கள், மூக்குத்திகள், காது தோடுகள், ஒட்டியாணங்கள், தங்க வாள், பட்டு சேலைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 1066 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செலவு 5 கோடி
அரசாங்கத்தை ஏமாற்றி வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா என்ற ஒரு தனி மனிதருக்கு இந்த அரசாங்கம் எவ்வளவு செலவு செய்கிறது என்ற ஆதங்கத்தில் மனித உரிமை செயல்பாட்டாளர் நரசிங்க மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வழக்குக்கு ஆன செலவுகளை பெற்றார். இன்றைய திகதி வரை கடந்த 6 மாதங்களுக்கான செலவையும், சென்னையில் ஏழு ஆண்டுகள் நடைபெற்ற போது ஆன செலவையும் சேர்த்தால் ரூ.5 கோடியை தாண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதி எண் 7402
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 ஆகிய எண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கேழ்வரகு உருண்டை
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை இரவு கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீர்ப்பை அறிவித்தவுடன் தனக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வி.வி.ஐ.பி செல்
லில் அறை எண் 23ல் அடைக்கப் பட்டார். இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள ஜெயலலிதாவுக்கு சிறையில்
24 மணிநேரமும் சிறப்பு பாதுகாப் புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு வெள்ளை புடவை வழங்கப்பட்டது.
பரப்பன அக்ரஹாரா
சிறை வளாகத்தில் நீதிமன்றம் அமைத்து தீர்ப்பு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சனிக்கிழமை காலை 6 மணி முதல் நீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹரா சிறை வளாகத்தில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதியில்இருந்த கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் சென்னையில் இருந்து சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு வந்தார். சுதாகரன் முன்னதாக தனி காரில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
இந்த சிறையில்
வி.வி.ஐ.பி. செல்லில் அடைக்கப்பட்ட முதல் நபர் ஜெயலலிதா. இதே சிறையில் வி.ஐ.பி. செல்லில் சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி உள்ளார்.
தெல்கி முத்திரை தாள் மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அப்துல் கரீம் தெல்கின்.
பல்வேறு கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சைக்கோ ஜெயசங்கரும் பரப்பன அக்ரஹாராவில் தான் உள்ளர்.
2008ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியும் பரப்பன அக்ரஹாராவில் உள்ளார்.
அரசியல் பிரவேசம்
1983ஆம் ஆண்டு அதிரடியாக அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். நியமித்தார். அப்போதே அதிமுகவில் ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான குழு சலசலப்பை எழுப்பத் தொடங்கிவிட்டது.
ஆங்கிலப் புலமை கொண்டவர் என்பதால் 1984ஆம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார் எம்.ஜி.ஆர். அந்த ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி மூலம் முதல்வராக முயற்சித்து சர்ச்சை அரசியலில் குதித்தார் ஜெ.
1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு வழங்கி "அரசியல் வாரிசு"தானே என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார்.
1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் காலமானார். அப்போது எம்.ஜி.ஆர். உடலை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனத்தில் ஏற முயன்று அவரை கீழே பிடித்துத் தள்ள பெரும் சர்ச்சை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டது. எம்.ஜி.ஆர். துணைவியார் ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணியும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாக அ.தி.மு.க (ஜெ), அ.தி.மு.க (ஜா) என்றானது. இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவராக 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக (ஜெ) அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா எம்.எல்.ஏவானார். அத்துடன் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வானார். இதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒன்றாக ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலரானார் ஜெயலலிதா.
1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி தமிழக சட்டசபை வரலாறு காணாத கலவரத்தை எதிர்கொண்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது அமளி ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது. மைக்குகள் பறந்தன..
இந்த களேபரத்தின் போதுதான் தி.மு.க.வினர் தன்னை தாக்க முயன்றதாக தலைவிரி கோலத்துடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் ஜெயலலிதா. அத்துடன் அப்போது, நான் முதல்வராகத்தான் இந்த சட்டசபைக்கு திரும்புவேன்.. அதுவரை சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவது இல்லை என்று சபதம் செய்தார்.
அனுதாப அலையால் ஆட்சி..
1991ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ராஜிவ் கொல்லப்பட அந்த அனுதாப அலையில் மொத்தம் 234 தொகுதிகளில் 225ஐ அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அள்ளியது. 40 லோக்சபா தொகுதிகளையும் அள்ள அ.தி.மு.க.வும் ஜெயலலிதாவும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்துக்கு உயர்ந்தனர்.
மாத வருமானம் 1 ரூபாய்
1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார். அந்த
1991–-96ஆம் ஆண்டு கால ஆட்சி யில் தமக்கு மாத வருமானம் ரூ1 ஒன்று போதும் என்று அறிவித்தார்
சொத்து குவிப்பு வழக்கு அப்படியானால் 5 ஆண்டுகாலத்தில் மொத்தம் அவர் ஊதியமாக பெற்றது ரூ60தான். ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில்தான் ரூ66 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற வழக்கு பதிவானது
சாமி போட்ட முடிச்சு..
கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக கருதலாம். அவரது இந்த பெரும் தோல்விக்கு முக்கிய காரணம், சுப்பிரமணியன் சாமிதான். காரணம், இவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முதலில் தொடர்ந்தவர் ஆவார். இந்திய அரசியலில் மிகவும் வித்தியாசமான, வில்லங்கமான ஒரு அரசியல்வாதி சாமி. சாமியை யாருமே குறைத்து எடை போட முடியாது. காரணம், இவர் போட்ட வழக்குகளில் பெரும்பாலானவற்றில் இவருக்கே வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான் யார் மீதாவது இவர் வழக்குப் போட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரும் பீதியடைந்து போகிறார்கள். ஜெயலலிதாவை கடுமையாக பாதித்தவர்
யாருக்கு எப்படியோ ஆனால் ஜெயலிதாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியவர் சாமிதான். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 1996ஆம் ஆண்டு தி.மு.க அரசுதான் போட்டது என்றாலும் கூட அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டவர் இந்த சாமிதான். ஆளுநரிடம் கொடுத்த புள்ளிவிவரங்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே அவரது சொத்து குவிப்பு தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் கோப்புகளாக்கி அப்போதைய ஆளுநரிடம் வழங்கி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கோரியிருந்தார் சாமி. வலுவான ஆதாரங்கள் உண்மையில் சாமி சேர்த்துக் கொடுத்த அத்தனை ஆதாரங்களுமே வலுவானவை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க.வுக்குக் கை கொடுத்த சாமி இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் பின்னர் வந்த தி.மு.க அரசு வழக்கைப் போட்டது.
பா.ஜ.க.ஆட்சி
இந்தியாவில் மத்திய அரசாங்கமாக பாரதிய ஜனதாவின் ஆட்சி அமைந்தாலே ஜெயலலிதாவின் பதவி பறிபோவது தொடர் கதையாகிவிட்டது. டான்சி நிலபேர ஊழல் வழக்கில் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் திகதி ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீண்டும் 2001 மேமாதம், 14ஆம் திகதி முதல்வராக பதவியேற்றார். ஆனால் 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றது செல்லாது என்று ரத்து செய்தது. இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவி பறிபோய் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். ஜெயலலிதாவின் முதலாவது முதல்வர் பதவி பறிப்பு நிகழ்ந்த போது மத்தியில் அதாவது 2001ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் இருந்தது. தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் 2ஆவது முறையாக ஜெயலலிதாவின் "முதல்வர் பதவி பறிப்பு" நிகழ்ந்துள்ளது. அட இப்போதும் பா.ஜ.க.வின் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் மத்தியில் இருக்கிறது.
ராசியில்லாத செப்டம்பர்
செப்டம்பர் மாதம் ஜெயலலிதாவுக்கு ராசியில்லாத மாதமாகவே மாறி விட்டது. கடந்த 2001ஆம் ஆண்டு அவர் முதல்வராக இருந்த போது, பதவி நீக்கம் செய்யப்பட்டார். அது நடந்தது செப்டம்பர் மாதத்தில்தான். தற்போது, சொத்துக் குவிப்பு வழக்கிலும் செப்டம்பர் மாதத்திலேயே தீர்ப்பு வெளியாகி 2ஆவது முறையாக முதல்வர் பதவியை இழந்துள்ளார்.
ராம்ஜெத்மலானி!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது: ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் மேன்மை மிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை. அதுவும் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல்.
நீதிபதி குன்கா நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார். அவர் ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி தீர்ப்பை வழங்கவில்லை. அபராதம் விதித்ததில் நீதித்துறை கோட்பாடுகளை குன்கா மீறிவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன். இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: எஸ்.ஜே.பிரசாத்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக