திங்கள், 20 அக்டோபர், 2014

பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகளை கண்டறிந் து, அதிலிருந்து மீட்பது எப்படி?

எப்போதும் 90 சதவீத மதிப்பெண் வாங்கும் 12 வயது சிறுமி பத்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு தேர்வுகளில் பாஸ்மார்க் கூட வாங்கவில்லை.



எப்போதும் அமைதியாக இருக்கும் அச்சிறுமி, சென்ற இரண்டு வார மாக எல்லாவற்றுக்கும் சண்டை போடுகிறாள். ஒரு வேலை அந்தக் குழந்தை பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந் தேகித்து, அந்தச் சிறுமியை ஒன்ப தாம் வகுப்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்.

பத்மாவிடம் நம்பிக்கையை வரவழைத் து பேச்சுகொடுத்தபோது, ‘என் நெருங்கி ய உறவினர் ஒருவர் தினமும் என் அறையினுள் வருகிறார். நான் கதவை தாழிட்டு தூங்கினால்கூட அவர் வந்து விடுகிறார். என்னைத்தொடுகிறார். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதில் இருந் தே இப்படி நடந்து கொள்கிறார். எனக்கு என்ன செய்யவதென்றே தெரியவில்லை ‘ என்று அழுதாள்.

#பாலியல்சீண்டல்களால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி அனிதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது)பற்றி அவரது தாய் பகிர்ந்தது …

“ஊருக்கு அவள் அண்ணனுடன்தான் அனுப்பி வைத்தேன். பேருந்தில் ஏறும் போது சந்தோஷமாய் சென்றவள், ஊரு க்கு சென்ற இரண்டு நாளில் மயங்கி விழுந்தாள். பிறகு, ஒரு வருடம் அவள் பள்ளிக்கு போகவில்லை. மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த போது, பாலியல் தொந்தரவிற்கு ஆளாகியிருக்கிறாள் என தெரிய வந்தது.”

# இன்னும் எத்தனையோ சம்பவங்கள். சமீபத்தில் பள்ளி வளாகத்தி ல், முக்கிய கவனப் பிரிவில் படித்து வந்த 6 வயது குழந்தைக்கு நடந்த பாலியல் பலாத்கா ரத்திற்குப் பிறகு பெற்றோர்கள், ஒரு வேளை தன் பிள்ளைக்கும் பாலியல் தொந்தரவு இருக்குமோ? அதனை எப்ப டி தெரிந்து கொள்வது? எப்படி தடுப்பது? என பல கேள்விகளை தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய கேள்விகளை முன்வைத்தபோது சில முக்கிய டிப்ஸ்க ளை அடுக்குகினார், பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு வகுப்பு கள் நடத்திவரும் ராதா சித்தாந்த்.

பாலியல் விழிப்புணர்வு கல்வி நிறுவ னங்களிடம் இதே கேள்வியை நாங்க ள் கேட்ட போது, குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை வெவ்வேறு விதமாக வெ ளிப்படுத்துவர். அது அவரவர் வளர்ப் புச் சூழ்நிலையை பொருத்து அமையு ம். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே கொடூரர்களின் எளிய இலக்கு என்பதை முதலில் உணர வேண்டும்.

# 6-7 வயது குழந்தை, வழக்கத் துக்கு மாறாக சற்றுமுன் கழிப் பறை சென்று வந்திருந்தால்கூட படுக்கையறையில் கழித்தால் அதற்கு பாலியல் தொந்தரவும் முக்கிய காரணமாக இருக்கலா ம். அவர்களை திட்டாமல் அமை தியாக அணுகினால் உண்மை என்ன என்பது தெரியும்.

# நடத்தையில் தீடீர் மாற்றம். உதாரணமாக, அமைதியான குழந் தை திடீரென்று கத்துவது, சேட்டை செய்யும் குழந்தை வித்தியாச மாக அமைதியாக இருப்பது. அவர்கள் மனதில் அழமாக இதனை யோசித் துக் கொண்டிருந்தால் இப்படி நடக் கலாம்.

# இரவில் கெட்ட கனவுகள் கண்டு அலறுவது, பெற்றோர்கள் இல்லாம ல் உறங்க மறுப்பது… இவையும் குழ ந்தைகள் பாதுகாப்பின்மை உணர்ந்தால் நடக்க கூடிய செயல்கள்.

# படிப்பில் வழக்கத்துக்கு மாறா ன சரிவு.

# யாரிடமும் பார்க்க, பேச விருப் பமில்லாமல் இருப்பதல்லது ஒரு குறிப்பிட்ட நபரிடம் போக விருப்பமில்லாமல் இருப்பது.

#தொடர்சியான வயிற்றுவலியி ல் அவதிப்படுவது. சிறுவயதில் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாகி யிருந்தால் இப்படி நடக்கும்.

# 9-11 வயது பெண் குழந்தை திடீரென தன்னை அலங்கரித்து கொள்ளாமல், அழு க்காக தன்னைக் காட்டிக்கொள்ள முயற் சிப்பது.

# 12-14 வயது குழந்தை 4-5 நாட்கள் தலை வாரிக் கொள்ளாமல் இருப்பது. 2-3 ஆடைகளை ஒன்றின்மேல் ஒன் று அணிந்து கொள்வது. இவையாவும் அவர்களை யாராவது ‘நீ அழ காக இருக்கிறாய்’ என்று கூறி பாலியல் தொந்தரவு கொடுத்திருந் தால், அதனை தடுக்க / மறைக்க இவ்வாறு நடந்து கொள்வார்கள்.

# பள்ளியில் வழக்கத்துக்கு மாறா க அனைத்துப் பாட வேளையிலு ம் தூங்குவது மற்றும் யாரிடமாவது சண்டை போடுவது. இவையா வும் தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பதால் வெளிப்ப டும் கோபத்தின் செயல்கள்.

# எல்லா செயலிலும் குழப்பத்துடன் இருப்பது; பேசும் வார்த்தையி ல்கூட குழப்பம் இருப்பது. இவை பெரும்பாலும் குழந்தைகள் தனக் கு நடந்ததை யாராவது அறிந்து விடுவார்களோ என்று எச்சரி கையாக பேசுவதாக எண்ணி குழப்பத்துடன் பேசுவார்கள்.

இந்த செயல்கள் யாவும் அன்றா டம் நடக்கக் கூடிய செயல்களா க தெரியலாம். ஆனாலும், உங்க ள் குழந்தை ஏன் இப்படி செய்கி றார்கள் இன்று பெற்றோர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் அவர் கூறும்போது, “முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் நன் கு கவனிக்க வேண்டும். இதுவரை நாம் கடந்து வந்த குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அனைத்திலும் தவறு செய்யும் எந்த ஒரு நபரும் தன் வேலையை முதலில் காட்டுவதி ல்லை. அந்த குழந்தையை நெடுநாட்கள் நோட்டம்விட்டு பிறகு தான் ஆரம்பிக்கின்ற னர்.

அதே போல் ஒரு குழந்தையும், இது போன்ற சம்பவங்கள் நடந்த உடனே அதனை வெளி க்காட்டிக் கொள்வதில்லை. அவை சில மாதங்கள், சில சமயங்களில் வருடங்கள் கூட ஆகலாம். சில நேரங்களில் அந்தக் குழந்தை கோமாவுக்கு கூட செல்ல வாய்புள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்கள், குழந்தைகளின் ஆரம்ப வகுப்பிலேயே தீண்டலின் சரி – தவறுகளை சொல் லித் தரவேண்டும். யாராக இருந்தா லும், அவர்களின் மார்புப் பகுதிகள், இடுப்பு, தொடைகள், கால்கள் இடு க்கில்தொட்டால் அது தவறான தீண் டல் என்பதை அவர்களுக்கு சொல் லித்தர வேண்டும். பெற்றோர்களாக இருந்தாலும் அதனை எந்தக் குழந் தையும் அனுமதிக்க கூடாது. ஒரு வேலை அவ்வாறு நடக்கும்போது குழந்தைகள் அந்த இடத்தை விட்டு அவ்வளவு வேகமாகவர இயலுமோ அவ்வளவுவேகமாக வர வேண்டும் மற்றும் அந்த குழந்தையின் நம்பகமான ஒருவரிடம் இதைப் பற்றி உடனடியாக தெரிவிக்க வே ண்டும் என்பதையும் ஆசிரியர்கள் அவர்களி ன் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண் டும்” என்றார்.

இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடத்துக்கும் ஒரு பாலியல் பலாத்கார குற்றம் பதிவாகிற து, ஒரு வருடத்தில் 7,200 குழந்தை பாலிய ல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வேலைக்குச் செல்லும் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ் காலியாக இருந்தால், தன்குழந்தை சாப்பிட்டுவிட்டதாய் நினைக்கின்றனர். உண்மையில், அவர்கள் சாப்பிட்டார்களா என்பதை கேட்கக்கூட அவர்களுக்கு நேரமில் லை. பெற்றோர்கள் இன்று பிள்ளைக ளிடம் பகிர்ந்துகொள்ளும் நேரம், நா ளைக்காக சேமிக்கும் நிம்மதியான நிமிடம் என்பதை இனியாவது உணர் வார்களா?

தி இந்து தமிழில் . . .
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல